மும்பை: மும்பை நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமின் சகோதரர் இக்பால் கஸ்கர். இவர் மீதும் கொலை, கொள்ளை, கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இதையடுத்து இவர் கைது செய்யப்பட்டு தானேவில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் இன்று தானே சிறையிலிருக்கும் இக்பால் கஸ்கரை, போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு காவலர்கள் இன்று (ஜூன் 23) கைது செய்தனர்.