ஜாங்கோன்: “ஜனாகமாவின் அரசன் என்று சொல்லிக் கொள்ளும் தாங்கள், ஏன் எனது கையெழுத்தை போலியாகப் போட்டு முறைகேட்டில் ஈடுபட்டீர்கள்?” என்று பொதுவெளியில் ஜாங்கோன் தொகுதி எம்எல்ஏ முத்திரெட்டி யாதகிரி ரெட்டியிடம், அவரது மகள் துல்ஜா பவானி ரெட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் தெலங்கானா மாநிலத்தில் முக்கிய விவாதப் பொருளாக மாறி உள்ளது.
தெலங்கானா மாநிலம் ஜாங்கோன் தொகுதி எம்எல்ஏவாக இருப்பவர் முத்திரெட்டி யாதகிரி ரெட்டி. தெலங்கானா மாநிலம் உருவாகி 10 ஆண்டுகள் நிறைவடைந்து உள்ள நிலையில், வத்லகொண்டா பகுதியில் நேற்று (ஜூன் 19) ஹரிதோட்சவம் என்ற பெயரில், தொகுதி மக்களுடனான சந்திப்பு முத்திரெட்டி யாதகிரி ரெட்டி தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சி நிறைவடையும் தருவாயில், அவரின் மகள் துல்ஜா பவானி ரெட்டி மற்றும் துல்ஜாவின் கணவர்உள்ளிட்டோர் அங்கு வந்து சேர்ந்தனர். செர்யாலா பகுதியில் உள்ள 1200 யார்ட்ஸ் அளவிலான நிலம், தன் பெயரில் பதிவு செய்யப்பட்டு உள்ளது ஏன் என துல்கா கேள்வி எழுப்பி, தந்தையும், எம்எல்ஏவுமான முத்திரெட்டி யாதகிரிரெட்டியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அந்த பகுதியில், தான் எந்த இடத்தையும் வாங்கவில்லை என்பதை துல்ஜா கூறினார்.
துல்ஜா பவானி ரெட்டி மேலும் கூறியதாவது, “அன்றைய தினத்தில், நான் ஒரே ஒரு ஆவணத்தில் மட்டுமே கையெழுத்திட்டு இருந்தேன். அதுவும் மிரட்டியதாலேயே அந்த கையெழுத்தையும் நான் போட்டு இருந்தேன். எனது கையெழுத்தை போலியாக போட்டதாக யாதகிரி ரெட்டி மீது செர்யாலா காவல் நிலையத்தில் வழக்கு தொடரப் போகிறேன். எம்எல்ஏ செய்த தவறுகளுக்காக, நான் நீதிமன்றப் படிகளை ஏறி வருவதாக துல்ஜா கவலை தெரிவித்து உள்ளார்.