ஆப்கானிஸ்தானின் காந்தஹார் பகுதியில் நடைபெற்ற தாக்குதலில் தானிஷ் சித்திக் உயிரிழந்தார் என ஆப்கானுக்கான இந்திய தூதர் ஃபரித் மாமண்ட்சே தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர், என் நண்பன் டானிஷ் சித்திக்கின் மரண செய்தி கேட்டு மனம் கலங்கி நிற்கிறேன். ஆப்கன் பாதுகாப்பு படையுடன் இருக்கும் வேளையில் அவர் கொல்லப்பட்டிருக்கிறார். அவர் காபுல் செல்வதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு நான் அவரை சந்தித்தேன். அவரது குடும்பத்தாருக்கும், ராய்டர் செய்தி நிறுவனத்தாருக்கும் எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
ரோஹிங்கியா இனப்படுகொலை நேரத்தில், மக்கள் புலம்பெயர்ந்ததை புகைப்படங்கள் வாயிலாக ஆவணப்படுத்தியதற்காக புலிட்சர் விருதை வென்றவர் தானிஷ் சித்திக்.