ஆந்திரா:ஆந்திர மாநிலம், நந்தியாலாவைச் சேர்ந்த பர்வதம்மா - பிரகாசம் தம்பதியின் இளைய மகன் சின்னபாபு(22). இவர் டிரைவிங் வகுப்புக்கு சென்று வாகனங்கள் ஓட்டப் பழகி வந்ததாகத் தெரிகிறது. இந்த நிலையில், அவர்கள் வசித்து வந்த பகுதியில் இருசக்கர வாகனம் ஒன்று திருடு போனது.
திருட்டுச் சம்பவம் தொடர்பாக போலீசார் சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்தனர். அதன்படி, இருசக்கர வாகனத்தை திருடிச் சென்ற நபர் சின்னபாபு எனக்கூறி போலீசார் அவரை காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தியுள்ளனர்.
கடந்த 19ஆம் தேதி காலை சின்னபாபுவை போலீசார் அழைத்துச் சென்றதாகத் தெரிகிறது. தான் திருடவில்லை என சின்னபாபு கூறியுள்ளார். ஆனால், சின்னபாபுதான் திருடன் என முடிவு செய்த போலீசார், அதனை ஒப்புக்கொள்ளும்படி வற்புறுத்தி மோசமாக தாக்கியதாகத் தெரிகிறது.
பிறகு சின்னபாபுவை இரவு வீட்டிற்குச் சென்றுவிட்டு காலை வரும்படி கூறி அனுப்பியுள்ளனர். அடுத்த நாள் காலையில் எழுந்ததும், சின்னபாபு தனது தாயிடம் டிஃபன் செய்து தரும்படி கூறிவிட்டு, பல் தேய்த்துக் கொண்டே வெளியில் சென்றுள்ளார். பின்னர், நந்திப்பள்ளி அருகே சென்று, ரயிலில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார்.
சின்னபாபு தற்கொலை செய்வதற்கு முன்பு செல்ஃபி வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில், "ஹாய் ஃப்ரண்ட்ஸ். நீங்கள் இந்த வீடியோவைப் பார்க்கும்போது நான் உயிரோடு இருப்பேனா என்று எனக்குத் தெரியவில்லை. போலீசார் என் மீது திருட்டு வழக்குப் பதிவு செய்துள்ளனர். சிசிடிவி கேமராவில் என்னைப் போன்ற ஒரு நபர் காணப்பட்டதாக கூறினர். அது நான் இல்லை. ஆனால், போலீசார் என்னை அழைத்துச் சென்று குற்றத்தை ஒப்புக்கொள்ளும்படி கூறி அடித்தார்கள். இரவு வீட்டுக்கு அனுப்பினர். மீண்டும் காலையில் வரச் சொன்னார்கள்.