தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

தாழ்த்தப்பட்டோர் குடும்பத்தின் மீது மர்மநபர்கள் தாக்குதல் - பில்ஹவுர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சக்தாபூர்

உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்டோர் குடும்பத்தினர் மீது மர்ம நபர்கள் நடத்திய தாக்குதலில் நான்கு பேர் காயமடைந்தனர்.

Etv Bharatதாழ்த்தப்பட்டோர் குடும்பத்தின் மீது மர்மநபர்கள் தாக்குதல் - நால்வர் காயம்
Etv Bharatதாழ்த்தப்பட்டோர் குடும்பத்தின் மீது மர்மநபர்கள் தாக்குதல் - நால்வர் காயம்

By

Published : Nov 5, 2022, 8:13 PM IST

கான்பூர் (உத்தரபிரதேசம்):பில்ஹவுர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சக்தாபூர் கிராமத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்டோர் வகுப்பைச் சேர்ந்த குடும்ப உறுப்பினர்களை அவர்களது வீட்டில் வைத்து நேற்று(நவ-5) மாலை மர்ம கும்பல் ஒன்று தாக்கியது. இதுகுறித்து பேசிய தாக்கப்பட்ட குடும்பத்தினர் தரப்பில், "எங்கள் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் எங்களை சரமாரியாக தாக்கினர்.

இந்த தாக்குதலில் எங்கள் வீட்டில் இருந்த பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 4 பேர் காயமடைந்தனர். இதுகுறித்து புகார் அளித்தும் பில்ஹவுர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் மனோஜ்குமார் புகாரை பதிவு செய்யவில்லை. எங்களுக்கு மருத்துவமனையிலும் சரியான சிகிச்சை அளிக்கப்படவில்லை.

அருகிலுள்ள மற்றொரு சமூகத்தினரே இதற்கு காரணம். அவர்களின் தூண்டுதலில்பேரிலேயே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அவர்கள் மீது சந்தேகம் உள்ளது என்று புகார் அளித்தோம். அதில் குறிப்பிட்ட 14 பேரின் பெயரை அகற்றுமாறு போலீசார் மிரட்டுகின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:மூன்றாவது நாளாக டெல்லியில் நீடிக்கும் கடும் காற்று மாசு..!

ABOUT THE AUTHOR

...view details