தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

Maharashtra Flood: மகாராஷ்டிரா வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காக தலாய்லாமா பிரார்த்தனை - Nobel Peace Laureate

மகாராஷ்டிராவில் வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலாய் லாமா ஆறுதல் தெரிவித்துள்ளார்.

Dalai Lama offers prayers for Maharashtra flood victims
மகாராஷ்டிரா வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காக தலாய் லாமா பிரார்த்தனை

By

Published : Jul 25, 2021, 12:30 PM IST

Maharashtra Flood:மகாராஷ்டிரா வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காக தலாய்லாமா பிரார்த்தனை

தர்மசாலா(இமாச்சல் பிரதேசம்):மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் கனமழையால், மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவு உள்ளிட்டப் பேரிடர்களால், இதுவரை 112 பேர் உயிரிழந்துள்ளனர். 90-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர்.

இந்நிலையில், மகாராஷ்டிராவில் வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலாய் லாமா ஆறுதல் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், 'வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ, மாநில அரசும், சம்பந்தப்பட்ட அலுவலர்களும் எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டுவருவதை நான் புரிந்துகொள்கிறேன்.

வெள்ளத்தால், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ, மீட்புப்பணிகளுக்கு உதவ தலாய் லாமா அறக்கட்டளை மூலம் நன்கொடை வழங்க கோரியுள்ளேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:இந்தியாவின் நீண்ட நாள் விருந்தாளி நான்- தலாய் லாமா!

ABOUT THE AUTHOR

...view details