மேஷம்
சில முடிவுகள் எடுப்பது கடினமாக இருந்தாலும், நீங்கள் உறுதியாக இருந்தால் எளிதாக முடிவெடுக்கலாம். உங்களது நோக்கம், உணர்வுரீதியாகத் தாக்கத்தை ஏற்படுத்தினாலும், முடிவு ஒன்றை எடுத்துவிட்டால், அதில் உறுதியாக இருக்க வேண்டும். உங்கள் முன்னேற்றப் பாதையில், சிறிது நிதானமாகச் செயல்படவும்.
ரிஷபம்
இன்று, நிச்சயமாகப் பயணம் மேற்கொள்ள திட்டமிடுவதற்கான நாள் அல்ல (அது சாதரணமான விஷயங்களுக்காக என்றாலும்கூட). புதிய திட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்படலாம். நீங்கள் உங்கள் காதல் துணையுடன், உல்லாசமாக இருத்தல் அல்லது ஸ்பாவில் இளைப்பாறுதல் போன்றவற்றின் மூலம் உங்கள் சோம்பல் நீங்கலாம். எப்படி இருந்தாலும், உங்களுக்குச் செலவு ஏற்படும் நாள் இது.
மிதுனம்
செயல்கள், உணர்ச்சிகள் இடையே சமநிலையைப் பராமரிக்க நீங்கள் பெரிதும் முயற்சி செய்வீர்கள். அதில் வெற்றி அடையவில்லை என்றாலும்கூட உங்கள் நண்பர்களுடன் நீங்கள் பழகும்போது பெரிதும் ஏமாற்றம் ஏதும் இருக்காது. உங்கள் காதல் துணையுடன் நீங்கள் சிறந்த வகையில் நேரத்தைச் செலவிடுவீர்கள். ஆனால் உங்கள் உடல் தோற்றம், உங்களுக்குச் சிறிது கவலையை ஏற்படுத்தலாம்.
கடகம்
அதிர்ஷ்டலட்சுமி உங்கள் கதவைத் தட்டும் நாள். அசையா சொத்துகளில் நீங்கள் மேற்கொண்ட முதலீட்டால் உங்களுக்குச் சிறப்பான லாபம் அடைவதற்கு வாய்ப்புகள் உள்ளன. பணியிடத்தைப் பொறுத்தவரை, உயர் அலுவலர், உடன் பணிபுரிபவர்கள் உங்களுக்கு முழு ஆதரவுடன் இருப்பார்கள். இன்று நீங்கள் தொடங்கும் எல்லா காரியங்களிலும் உங்களுக்குப் பலன் கிடைக்கும்.
சிம்மம்
எதையாவது வித்தியாசமாகச் செய்ய வேண்டும் என்ற ஆர்வத்துடன் இன்று காணப்படுவீர்கள். இன்று நாள் முழுவதும் மிகுந்த உற்சாகத்துடன் இருப்பீர்கள். உங்கள் நட்சத்திரங்கள் உங்களுக்குச் சாதகமாக இருப்பதால், எந்த அளவுக்கு நீங்கள் உற்சாகத்துடன் செயல்படுகிறீர்களோ அந்த அளவுக்குச் சவால்களில் நீங்கள் வெற்றிபெறுவீர்கள்.
கன்னி
நிதி ரீதியாக நீங்கள் சில சிக்கல்களை எதிர்கொள்ள நேரலாம். எனவே, பெரிய முடிவுகளை எடுக்கும்போது, உணர்ச்சி வசப்படாமல் அறிவுப்பூர்வமாக யோசித்துச் செயல்படவும். உங்களிடம் உள்ள விலைமதிப்பில்லா சொத்துகள் அல்லது பொருள்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்கவும். நீங்கள் எடுக்கும் முடிவு நீண்ட காலத்துக்குப் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்பதால், புதிய திட்டங்கள் அல்லது சட்டப்பூர்வ பணிகளை மேற்கொள்ளும்போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கவும்.