தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இன்றைய ராசிபலன் - செப்டம்பர் 23 - Daily Horoscope

நேயர்களே மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான பலன்கள் என்னவென்று தெரிந்துகொள்ளலாம்.

இன்றைய ராசிபலன்
இன்றைய ராசிபலன்

By

Published : Sep 23, 2021, 6:00 AM IST

Updated : Sep 23, 2021, 6:05 AM IST

மேஷம்

நீங்கள், உணர்ச்சிவசப்படுவதால் செய்யும் செயல்களில் தடைகள் ஏற்படும். தோல்விகளால் சோர்வு அடைவீர்கள். உங்களுக்கு கிடைத்ததை எண்ணி மகிழ்ச்சி அடைதல் நன்மை பயக்கும்.

ரிஷபம்

நீங்கள் அனைத்து விஷயங்களிலும் மரபுகளைக் கடந்து புதுமையாகச் செயல்பட்டு வெற்றி அடைவீர்கள். பிற்பகலில் உயர் அலுவலர்களிடம் பணிந்துசெல்ல நேரிடலாம். ஆகையால் எச்சரிக்கையுடன் இருப்பது நன்மை பயக்கும். மாலை நேரத்தில் உங்களது பலவீனங்கள் அனைத்தும் உங்கள் பலமாக மாறக்கூடும்.

மிதுனம்

உங்களது பணிப் பளுவிலும், பணிகளில் இலக்குகளை அடைவதிலும், உங்கள் வாழ்க்கைத் துணையின் எதிர்பார்ப்புகளை சமாளிப்பதிலும் சற்று சிரமம் ஏற்படலாம். இருப்பினும் வேலைக்கும், குடும்பத்திற்கும் இடையே சரியான நேரத்தை ஒதுக்குவதன் மூலம் பிரச்சினைகளைக் கட்டுப்படுத்த முடியும். இரவில் குடும்பத்துடன் வெளியில் செல்வது நன்மை பயக்கும்.

கடகம்

உங்களுக்குப் பொறுப்புகள், பணிச் சுமைகள் இருந்தபோதிலும் உங்களின் வீட்டிற்காக நாள் முழுவதையும் செலவிட வாய்ப்புள்ளது. மாலை நேரத்தில் குடும்பத்தினரிடம் அதிக கவனம் செலுத்துவீர்கள். உங்களைச் சுற்றியுள்ளவர்களை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள விரும்புவீர்கள்.

சிம்மம்

இன்று, நீங்கள் மற்றவர்களுக்கு உதவிபுரியும் எண்ணம் இருந்தாலும், அதில் வெற்றி அடைவது கடினம். நாளின் பிற்பகுதியில் உங்கள் சந்தேகங்களுக்கு தெளிவு பிறக்கும். வேண்டிய பலனை அடைய கடினமாக முயற்சித்தல் அவசியம்.

கன்னி

இன்று, உங்களின் கவனம் அதிகரிக்கலாம். உங்கள் வேலைகளை மகிழ்ச்சியாகவும், திறமையாகவும், விரைவாகவும் செய்து முடிக்க முயலலாம். மனத்திற்கு நெருக்கமானவர்களுடன் நேரத்தைச் செலவிடுவதன் மூலம் வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்குச் செல்ல நல்வழியாக அமையப் பெறலாம்.

துலாம்

இன்று, உங்கள் சாதனைகளை மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்வீர்கள். நீங்கள் வேலையில் ஒத்துழைப்புடன் பணியாற்றவும் எண்ணுவீர்கள். இதனால் உங்களின் தொடர்புகள் அதிகரிக்கும். இவற்றைச் சமாளிப்பதன் மூலம் நன்மை பெறலாம்.

விருச்சிகம்

கணவன் மனைவிக்கு இடையே மன ஒற்றுமை அதிகரிக்கும். வேலையில் உங்கள் திறமையினால் அனைவராலும் பாராட்டப்படுவீர்கள். அனைவரின் கவனத்தை ஈர்க்க வாய்ப்புள்ளது. அனைத்துச் செயல்களிலும் வெற்றி அடைய நன்னாளாக அமையும்.

தனுசு

இன்று, நீங்கள் வணிக பயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளது. உங்களின் நிதி விஷயங்களுக்கு முன்னுரிமை அளிக்கவும். வெற்றியைக் கொண்டாடும் நாளாக இன்று அமையப் பெறலாம்.

மகரம்

உங்களின் குடும்ப வாழ்க்கை தரத்தை உயர்த்திக்கொள்ள அதிகம் உழைக்க வாய்ப்புள்ளது. அதிக வேலைப்பளுவினால் கணவன் மனைவிக்கு இடையே அதிருப்தி ஏற்படும். இன்று உங்களின் வாழ்க்கைத் துணையுடன் வெளியே செல்ல திட்டமிடுவீர்கள். அலுவலக உயர் அலுவலர்களின் பாராட்டைப் பெறுவதுடன், எதிரிகளைத் தோல்வியுறச் செய்வீர்கள். இருந்தபோதிலும், எதிரியின் சாதனை, வலிமையை மனத்தில் கொண்டு செயல்படுதல் நன்மை பயக்கும்.

கும்பம்

உங்கள் வாழ்க்கையில் நண்பர்களின் முக்கியத்துவத்தை அறிந்துகொள்வீர்கள். பிரிந்த நண்பர்கள் ஒன்றுகூடும் வாய்ப்பு உள்ளது. உங்கள் பேச்சுத் திறமையால் வெற்றி உங்கள் வசப்படும். உங்கள் போட்டியாளர்கள், குடும்பத்தினர் மட்டுமின்றி எதிரிகளும் உங்கள் திறமையைப் பாராட்ட வாய்ப்புள்ளது.

மீனம்

உங்கள் பிரச்சினைகள், சந்தேகங்களைப் புரிந்துகொண்டு செயல்படுவீர்கள். இன்று நீங்கள் சுறுசுறுப்புடனும், உற்சாகத்துடனும் இருப்பதுபோல் உணர்வீர்கள். உங்கள் பிரச்சினைகளுக்குத் தீர்வினைக் கண்டறிந்து அதைச் செயல்படுத்தவும் செய்வீர்கள். புதிதாகச் செய்யும் செயல்களில் அதிக கவனம் தேவை.

இதையும் படிங்க:கிராம சபைக் கூட்டம்: தன்னாட்சி அமைப்பின் பொ.செயலாளருடன் நேர்காணல்

Last Updated : Sep 23, 2021, 6:05 AM IST

ABOUT THE AUTHOR

...view details