மேஷம்
இன்று நீங்கள், அழகின் பால் ஈர்க்கப்படுவீர்கள். அழகுப் பொருள்கள் தொடர்பான புதிய தொழில் திட்டம் ஒன்றை ஆரம்பிக்க நீங்கள் விரும்பலாம். ஆனால் முடிவெடுப்பது சிறிது கடினமாக இருக்கும். சாத்தியமான வாய்ப்புகளை ஆராய்ந்து, முடிவுகளை மேற்கொள்ளவும்.
ரிஷபம்
இன்றைய தினம், நீங்கள் நல்ல முறையில் உங்களுக்கான நேரத்தை செலவழிப்பீர்கள். மற்ற நாள்களைப் போல் அல்லாமல், இன்று நீங்கள் அமைதியாக இருந்து புத்துணர்வை பெறவும். குடும்பத்தினர், நண்பர்களுடன் நீங்கள் விருந்து அல்லது பொழுதுபோக்கு நிகழ்ச்சியில் கொள்வீர்கள். ஏதேனும் ஒரு, வித்தியாசமான சுவை கொண்ட, உணவை ருசித்து பார்க்கும் ஆர்வம் இருக்கும்.
மிதுனம்
இன்று முழுவதும், நீங்கள் அதிக உற்சாகத்துடன் இருப்பீர்கள். நேர்மறையான கண்ணோட்டத்தை கொண்டிருப்பீர்கள். இது உங்கள் வெற்றிக்கு உதவியாக இருக்கும். நீங்கள் இன்று உங்கள் விருப்பப்படி செயல்பட்டு, மனதிற்குப் பிடித்த விஷயங்களை செய்வீர்கள். வேலைப்பளு அதிகமாக இருந்தாலும், அதற்கு பலன் கிடைப்பதோடு நிம்மதியாகவும் உணர்வீர்கள்.
கடகம்
இன்றைய தினத்தில், நீங்கள் சோர்வாகவும் பதற்றமாகவும் இருக்கக்கூடும். விரும்பத்தகாத விஷயங்கள் ஏற்படக்கூடும் என்பதால், பொறுமையாக அவற்றை தைரியத்துடன் எதிர்கொள்ளவும். இந்த தைரியத்தின் மூலம் நீங்கள் வெற்றி அடையும் வாய்ப்புள்ளது. கோபமான மனநிலையுடன் செயல்பட்டால் பிரச்சனை ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
சிம்மம்
இன்று உங்களுக்கு தன்னம்பிக்கை அதிகம் இருக்கும். பணியிடத்தில் நீங்கள் முக்கியமான முடிவுகளை மேற்கொள்வீர்கள். பணியிடத்தில் வேலை சுமுகமாக நடைபெறுவதோடு, உங்களுக்கு வெற்றியும் கிடைக்கும்.
கன்னி
தனிப்பட்ட வாழ்க்கையில் செய்ய வேண்டிய சில விஷயங்கள் காரணமாக தொழில் சிறிது பாதிக்கப்படலாம். சவால்களை சந்தித்து அதனை தீர்க்க முயற்சியை மேற்கொள்ளவும். உணர்வுகளுக்கு அடிமையாகாமல், முடிவுகளை உறுதியாக எடுக்கவும். குறிப்பாக மாலை நேரங்களில் கவனமாக இருக்க வேண்டும்.
துலாம்
நீண்ட நாட்களாக தீர்க்கப்படாமல் இருந்த சட்டப் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். இது நீதிமன்றம் மூலமாகவோ அல்லது பரஸ்பர புரிந்துணர்வு காரணமாகவோ இருக்கலாம். வேலைப்பளுவை பொருத்தவரை எப்பொழுதும் போல் இருக்கும். பிரச்னையான சூழ்நிலைகளில் இருந்து தப்பிக்க, சிறந்த வகையில் திட்டம் தீட்ட உங்களுக்கு நேரம் கிடைக்கும்.
விருச்சிகம்
இன்று வேலைப்பளு அதிகமாக இருக்கும். கூடுதல் பணிச்சுமை மற்றும் பொறுப்புகளின் காரணமாக சோர்வாக உணர்வீர்கள். ஆனால் மாலையில், சிறிது ஓய்வு கிடைக்கும். நண்பர்களுடன் நேரத்தை செலவிடுவது புத்துணர்வைக் கொடுக்கும்.
தனுசு
உங்களது காதல் வாழ்க்கை இனிமையாக தொடரும். கிரக நிலைகள் உங்களுக்கு சாதகமாக இருப்பதால், நீங்கள் காதல் வயப்பட்டு, ஒரு அழகான நபரை ஈர்க்கும் வண்ணம் செயல்படுவீர்கள். எனினும், காதல் வாழ்க்கையை தொடங்கும் முன், சிந்தித்து செயல்படவும்.
மகரம்
இன்றைய தினத்தில், வேலைப்பளுவின் காரணமாக நீங்கள், மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் சோர்வாகவும் உற்சாகம் இன்றியும் உணர்வீர்கள். இது போட்டி நிறைந்த உலகம் என்பதால், எச்சரிக்கையுடன் செயல்படவும். உங்களை வீழ்த்தும், வாய்ப்புகளுக்காக உங்களுக்கு போட்டியாளர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர். எச்சரிக்கையுடன் திறமையாக செயல்பட்டு, அவர்களை வெற்றி காணவும்.
கும்பம்
மாணவர்களைப் பொருத்தவரை, பரிட்சை முடிவுகள் மிகவும் சாதகமாக இருக்கும். உங்களை சுற்றி இருப்பவர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் நீங்கள் செயல்படுவீர்கள். கட்டுப்பாட்டுடன் செயல்பட்டு, உங்களது புகழ் பாதிக்காத வண்ணம் செயல்படவும். மக்களை மனிதாபிமானத்துடனும் அன்புடனும் அணுகவும்.
மீனம்
ஈடுபாட்டுடன், இடைவிடாமல் கடுமையாக உழைப்பவர்களுக்கு, இன்று சிறந்த நாளாக இருக்கும். இன்று பணியில் புதுமையான வழிமுறைகளை பின்பற்றுவீர்கள். கடவுளின் ஆசியால் வெற்றி கிடைக்கும். அதனால் கடுமையாக உழைத்து, தோல்வியை கண்டு மனம் துவளாமல் இருக்கவும்.
இதையும் படிங்க:இனி பெட்ரோலுக்கு குட் பை - பெட்ரோல் பைக்கை மின்சார வாகனமாக மாற்றும் புதிய தொழில்நுட்பம்!