தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இன்றைய ராசிபலன் - செப்டம்பர் 21 - Horoscope news

நேயர்களே மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான பலன்கள் என்னவென்று தெரிந்துகொள்ளலாம்.

aily Horoscope
aily Horoscope

By

Published : Sep 20, 2021, 2:10 PM IST

Updated : Sep 21, 2021, 6:28 AM IST

மேஷம்

இன்று, நீங்கள் உங்கள் தோற்றத்தை மேம்படுத்த அதிக முயற்சிகள் செய்யலாம். உங்களின் எதிர்பார்ப்புகளை அதிகரிக்கும் நாளாக இன்றைய நாள் அமையக்கூடும். வெளிப்புறத் தோற்றத்தை வைத்து உறவுகளை அளவிடுவதைத் தவிர்க்கவும்.

ரிஷபம்

இன்று உங்களுக்கு காதல் உணர்வு அதிகம் இருக்கும். உங்கள் மனத்திற்குப் பிடித்தவர் பற்றிய எண்ணம் உங்களது கனவிலும் ஆக்கிரமிக்கும். இன்றைய மாலைப் பொழுதில், காதல் துணையுடன் நேரத்தை மகிழ்ச்சியாகச் செலவிடுவீர்கள்.

மிதுனம்

இன்று, உங்களின் வேலை, குடும்பத்திற்கும் இடையே நேரத்தைச் சமமாக ஒதுக்கிச் சிறப்பாகச் செயல்படும் நாளாக அமையும். உங்கள் வேலைப் பளு அதிகம் இருந்த போதிலும், குடும்பத்திற்காக நேரத்தை ஒதுக்குவதுடன் சிறு பயணத்திற்கான ஏற்பாட்டினையும் செய்வீர்கள். இந்த நாள் உங்கள் கனவுகள் நிறைவேறும் நன்னாளாக அமையும்.

கடகம்

இன்று, உங்களின் மன ஓட்டத்தைக் கட்டுப்படுத்துதல் அவசியம். இல்லையெனில் உங்களின் அருகில் இருப்பவர்களே அது பாதிக்கக்கூடும். எழுத்தாளர்களுக்குச் சாதகமான நாளாக இன்று அமையப் பெறலாம். கலைத் துறையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு உகந்த நாளாக அமையும். புது முயற்சிகள் செய்வதற்கு ஏற்ற நாளாக இந்நாள் அமையும்.

சிம்மம்

உங்களின் செலவுகளைக் கட்டுப்படுத்துதல் அவசியம். இல்லையெனில் நெருக்கடிகளைச் சந்திக்க நேரிடலாம். தேவையற்றச் செலவு செய்வதைக் கட்டுப்படுத்துதல் உங்களுக்கு நன்மை பயக்கும்.

கன்னி

உங்களுக்கு நெருக்கமானவர்கள் இன்ப அதிர்ச்சியைத் தருவதுடன், அவர்களும் அதை உங்களிடமிருந்து எதிர்பார்க்கலாம். வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு உகந்த நாளாக இந்நாள் அமையும். உங்களின் கடந்தகால தவறுகளை ஒப்புக்கொண்டு, மீண்டும் அந்தத் தவறைச் செய்யாமல் இருத்தல் நன்மை பயக்கும்.

துலாம்

உங்களின் கடந்த கால அனுபவத்தைக் கொண்டு புத்திசாலித்தனமான எதிர்காலத்தை ஏற்படுத்திக் கொள்வீர்கள். உங்களுக்குச் சொந்தமான விலை உயர்ந்த பொருள்கள் மீது உரிமை கொண்டாடலாம். சிறு சிக்கல்கள் உங்களைக் கவலைக்கு உள்ளாகலாம்.

விருச்சிகம்

நீங்கள் வெவ்வேறு விருப்பங்கள், மனநிலை கொண்ட மக்களைச் சந்திக்கலாம். அதில் சிலர் உங்களை அதிர்ச்சியடையச் செய்யலாம், வேறு சிலரோ உங்களை ஆச்சரியப்படச் செய்யலாம். சில நேரங்களில், உங்களுடைய வெற்றியைப் பிறர் வேறுபட்ட விதத்தில் பார்ப்பது ஏன் என்பதைப் புரிந்துகொள்வது கடினம். இவற்றை விவேகத்துடன் கையாள்வது நல்லது.

தனுசு

இன்று நீங்கள் பெருமிதப்படுத்தும் உயர்ந்த நிலையில் இருப்பீர்கள். பரவச உணர்வால் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பீர்கள். உங்கள் ஆக்கப்பூர்வமான செயற்பாடுகளால் நீங்கள் எடுக்கும் பணி எல்லாம் சிறப்பாக முடியும். உங்கள் உள்ளுக்குள் இருந்துவரும் குரலின் மீது நம்பிக்கை வையுங்கள். அது சரியான பாதையில் உங்களை வழிநடத்தும். சர்வ வல்லமையுள்ள இறையாற்றலின் கருணை உங்கள் மீது இருக்கிறது. இந்த நாளை நல்ல நாளாக மாற்றிக் கொள்ளவும்.

மகரம்

நாள் முழுவதும் வேலை மற்றும் பொறுப்புகளால் சூழப்பட்டிருப்பதால் ஏற்படும் அழுத்தம், உங்கள் ஆற்றலைக் குறைத்தாலும், உற்சாகம் மட்டும் குறையாது. போட்டியாளர்களுடன் கடுமையாகச் சண்டையிட்டுக் கொண்டிருந்தால், நாளின் பிற்பகுதியில் மிகவும் சோர்ந்துவிடுவீர்கள். நீங்கள் சண்டையிட்டு வெற்றிபெறுவீர்கள் என்றாலும், புத்திசாலித்தனமாக நடந்துகொண்டு, சரியான செயல்களைச் செய்வீர்கள்.

கும்பம்

சமாதானத்தையும் மகிழ்ச்சியையும் பரப்ப விரும்பும் உங்கள் விருப்பம் இன்று நிறைவேறும். எனினும், பிரச்சினைகள் தீர்க்கப்படுவதை உறுதிப்படுத்த வேண்டுமானால், உங்கள் சொந்த முன்னுரிமைகள், நலன்களைத் தியாகம் செய்ய வேண்டும். ஆனால் மக்கள் உங்களை அவர்கள் விருப்பப்படி செயல்படுத்த நினைக்கலாம்.

மீனம்

இன்று ஒரு முக்கியமான நாள், வீட்டிலேயோ அல்லது பணியிடத்திலேயோ மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒரு சாதனையை நீங்கள் செய்து முடிக்கலாம். உங்கள் தொழில்முறை மற்றும் சமூக அந்தஸ்தில் ஒருபடி முன்னேறுவீர்கள்.

இதையும் படிங்க:வேர்க்கடலை மற்றும் தேங்காய் கொழுக்கட்டை - இதோ உங்களுக்காக

Last Updated : Sep 21, 2021, 6:28 AM IST

ABOUT THE AUTHOR

...view details