மேஷம்
உங்களது வெற்றியின் ரகசியத்தைப் பகிர்ந்துகொள்வது சிறந்தது என்பதை நீங்கள் இன்று உணர்ந்துகொள்வீர்கள். நீங்கள் கொடுக்கும் அனைத்தும், ஒன்பது மடங்காகப் பெருகி உங்களை வந்துசேரும். வெளிப்படையான மனத்துடன், அனைவரது கருத்துகளையும் ஏற்றுக்கொண்டு பழகுவதால் உங்கள் மீதான மதிப்புக் கூடும்.
ரிஷபம்
உங்களை யாரும் வெற்றிகொள்ள முடியாத அளவில் நீங்கள் திறன் பெற்றவராக இருப்பீர்கள். ஆனால் உங்கள் ஆற்றலை வீணடிக்காமல், கவனமாகச் செயல்படவும். சில பணித் திட்டம் தொடர்பாக மன அழுத்தம் உண்டாகலாம். மாலை நேரத்தில் உங்கள் வாழ்க்கைத் துணையுடன், அமைதியான முறையில் நேரத்தைக் கழிப்பீர்கள்.
மிதுனம்
இன்று வாழ்க்கையின் முக்கியமான காலகட்டமாக இருக்கும். நீங்கள் சில முக்கிய முடிவுகளை மேற்கொள்ளக் கூடும். பணியிடத்தில் உங்களுக்குத் தோன்றும் புதுமையான கருத்துகள், நீங்கள் மேற்கொள்ளும் உறுதியான நடவடிக்கைகளின் மூலம் நிறுவனத்திற்கு வெற்றித் தேடித் தருவீர்கள். பொழுதுபோக்குக்காகவும் வசதிக்காகவும் நீங்கள் கூடுதல் செலவுகளை மேற்கொள்ளலாம்.
கடகம்
நீங்கள் வாழ்க்கையில் எவ்வாறு வெற்றி அடைந்துள்ளீர்கள் என்பதை மற்றவர்களுக்கு எடுத்துக் காட்டுவீர்கள். நீங்கள் உங்கள் நிறுவனத்தில் ஒரு எடுத்துக்காட்டாக விளங்குவீர்கள். பணியில் மூத்தவர்களுடன் சர்ச்சையில் ஈடுபடும் பழக்கம் உங்களுக்கு இருந்தாலும், வேலையில் நீங்கள் செயல்திறனுடன் பணியாற்றுவீர்கள். மாலையில் சமூக நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு, பலரைச் சந்திக்கும் வாய்ப்பு உண்டு. உங்களது வர்த்தகம், பொறுப்புகள், தனிப்பட்ட மகிழ்ச்சிக்காக நேரத்தைத் திட்டமிட்டுச் செலவழிக்க வேண்டும்.
சிம்மம்
இன்றைய நாளின் தொடக்கம், மனக் கசப்புடன் இருக்கலாம். நீங்கள் பலவிதமான விஷயங்களைப் பெற்றுக்கொள்வீர்கள். ஆனால், விரும்பிய பலன் கிடைக்காமல் போகலாம். பணி தொடர்பான முயற்சிகளுக்கு நாளின் பிற்பகுதி சாதகமாக இருக்கக் கூடும். பணியில் முன்னேற்றம் ஏற்படும்.
கன்னி
உங்களது உயர் அலுவலர்கள், பனியில் மூத்தவர்கள் உங்களது முயற்சியைக் கவனிக்கும் வகையில் கடினமாக உழைப்பது நல்லது. ஆனால் அதற்கு ஏற்ற அங்கீகாரம், உடனடியாகக் கிடைக்காமல் போகலாம். ஆனால் இன்றைய நாளின் முடிவில், நீங்கள் சிறந்த வகையில் பணியாற்றி உள்ளீர்கள் என்பது குறித்து திருப்தியாக உணர்வீர்கள்.