தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இன்று உங்கள் ராசிக்கு? - அக்டோபர் 21 - undefined

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான பலன்களைக் காண்போம்.

october 21
october 21

By

Published : Oct 21, 2021, 6:02 AM IST

மேஷம்

நீங்கள் உங்கள் திறமையை சிறந்த முறையில் வெளிப்படுத்துவீர்கள். திட்டங்களை சிறப்பாக தீட்டி, பணியில் சிறந்த வகையில் ஆலோசனைகளை வழங்கி, அதன் மூலம் சிறந்த பலனைப் பெறுவீர்கள். எனினும், அதற்கான அங்கீகாரம் சரியான முறையில் கிடைக்காததால், ஏமாற்றம் ஏற்படக்கூடும். தோல்விகளை ஏற்றுக் கொண்டு, மனம் வருந்தாமல் இருப்பது எப்படி என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

ரிஷபம்

இன்று நீங்கள், விதிக்கு கட்டுப்பட்டு நடக்கும் நிலைக்கு தள்ளப்படுவீர்கள். விதியின்படி நடக்கட்டும் என்று நீங்கள் நினைத்துக் கொண்டாலும், நல்லவை நடக்கும் என்று நீங்கள் எதிர்பார்க்க வேண்டாம். தவறான முடிவுகளை எடுக்கும் வாய்ப்பு உள்ளது. மன வருத்தம் கொள்ளத் தேவையில்லை. வரும் காலத்தில் நல்லவையே நடக்கும்.

மிதுனம்

நீங்கள், அனைத்து செயல்களையும், சிறந்த வகையில் செய்ய வேண்டும் என்று விரும்புபவராக இருப்பீர்கள். உங்கள் செயல்திறன் முழுவதும், ஒரு குறிப்பிட்ட இலக்கை நோக்கி செய்யும் முயற்சியாக இருக்க வேண்டும் என்பதில் நினைவில் கொள்ளவும்.

கடகம்

நீங்கள் இன்று புதிய பொறுப்புகளை ஏற்றுக் கொள்வீர்கள். அதனால் நீங்கள் பணியில் தீவிரமாக இருப்பீர்கள். வேலை பளுவின் காரணமாக, நீங்கள் சோர்வாக உணரக்கூடும். அதனால் உங்களுக்கு மன அழுத்தமும் பதற்றமும் உண்டாகும் வாய்ப்பும் உள்ளது.

சிம்மம்

நீங்கள் இன்று, உணர்வுப்பூர்வமாக செயல்படுவீர்கள். உங்களது அகங்காரம் காரணமாக, உங்களது உண்மையான உணர்வுகளை வெளிப்படுத்த நீங்கள் தயங்குவீர்கள். உங்களுக்கு மனதிற்கு பிடித்தவர்கள் உடன் பேசும்போது, இதனை நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். காதல் உணர்வு மற்றும் அன்பை வெளிப்படுத்துவதற்கு இது ஒரு சிறந்த நாளாக இருக்கும்.

கன்னி

இன்று, ஒரு இனம் புரியாத பயம் உங்கள் மனதை வாட்டிக் கொண்டிருக்கும். நேரம் ஆக ஆக, இந்த பயம் அதிகரித்து கொண்டே இருக்கும். நீங்கள் உங்கள் வெளிநாட்டு நண்பர்களுக்காக, அதிகம் செலவழிக்கும் வாய்ப்பு உள்ளது. அதனால், இன்று நீங்கள் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது.

துலாம்

உங்கள் குழந்தைகள் சாதனை புரிவார்கள். அவர்களை நினைத்து நீங்கள் பெருமை கொள்வீர்கள். ஊதிய உயர்வு அல்லது பரம்பரை சொத்துக்கள் மூலமாக கிடைக்கும் வருமானம் ஆகியவற்றால் பணவரவு இருக்கும். ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு அல்லது காப்பீட்டு திட்டங்கள் மூலமாக நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.

விருச்சிகம்

இன்று நீங்கள் கவனத்துடன், எச்சரிக்கையாக செயல்பட வேண்டும். வேறு ஒருவரை குறிவைத்து மேற்கொள்ளப்பட்ட ஒரு நடவடிக்கையினால், எதிர்பாராதவிதமாக நீங்கள் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது. இன்னும் நீங்கள் கவனமாக எச்சரிக்கையுடன் நடந்தால், தர்மசங்கடத்தில் இருந்து தப்பிக்கலாம். பழைய அனுபவங்கள் மூலம் நீங்கள் இதனை கற்றுக் கொள்ளலாம்.

தனுசு

ஆன்மீகம் சார்ந்த விஷயங்களில் நீங்கள் கலந்து கொள்ளும் வாய்ப்பு உள்ளது. ஒரு நிகழ்ச்சி அல்லது ஒரு தொடக்க நிகழ்ச்சியில் நீங்கள் முக்கியமானவராக கலந்து கொள்ள வாய்ப்பு உள்ளது. பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பும் உள்ளது. நெடுந்தூர வர்த்தக பயணம் மேற்கொள்வதற்காக தயார் நிலையில் இருக்கவும்.

மகரம்

நம்பிக்கை என்பதே, வெற்றி என்ற கதவை திறக்கும் சாவியாகும். இன்று, உங்கள் நேர்மறையான மனப்பான்மை மற்றும் நடவடிக்கையின் காரணமாக, வெற்றியை நோக்கி நீங்கள் ஒரு அடி முன்னேறி செல்வீர்கள். நீங்கள் எதையும் அலட்சியப்படுத்தும் நபர் அல்ல. உங்களது சாதனைகளை நீங்கள் மதிப்பீடு செய்து, அறிவார்ந்த முடிவுகளை எடுப்பீர்கள்.

கும்பம்

சிக்கலான விஷயங்களையும், நீங்கள் மிக எளிதாக கையாள்வீர்கள். எனினும், தங்களது அனைத்து பணிகளையும் மற்றவர்கள் உங்களிடம் ஒப்படைத்து விடும் வாய்ப்புள்ளது. இதனால் உங்களுக்கு பிரச்சினை ஏற்பட்டு, மற்றவர்கள் செய்யும் தவறுகளுக்கு நீங்கள் பொறுப்பு ஏற்கும் நிலை ஏற்படலாம். எனினும், பலவீனங்களை வலிமையாக மாற்றும் வாய்ப்பும் உள்ளது.

மீனம்

இன்று, உங்களது கிரக நிலைகளை பார்க்கும்போது, உங்களுக்கு நிதி ரீதியான சில பிரச்சினைகள் ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. அதனால், நிதி தொடர்பான விஷயங்களை செய்யும் போது கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது.

இதையும் படிங்க:'கும்கி உதயன்' கொண்டாட்டத்தின் பின்னணி!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details