தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ராசிபலன் பாக்கலியா? - அக்டோபர் 18 - ETV BHARAT HOROSCOPE

நேயர்களே மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான பலன்கள் என்னவென்று தெரிந்துகொள்ளலாம்.

இன்றைய ராசிபலன், DAILY HOROSCOPE
இன்றைய ராசிபலன்

By

Published : Oct 18, 2021, 6:29 AM IST

மேஷம்

நீங்கள் இறுதியாக யோகிகளின் சிந்தனைகளால் ஈர்க்கப்பட்டிருக்கிறீர்கள். அதன்படி, உங்களது செயல்பாடு பக்குவப்பட்டதாக இருக்கும். வாழும் கலை கல்வி, இசை, நடனம் அல்லது நீண்ட காலமாக நீங்கள் ஆர்வம்கொண்ட ஏதாவது விஷயத்தைக் கற்க வேண்டும் என்ற உங்கள் விருப்பத்தை நிறைவேற்றலாம். இந்த நாள் ஒரு நல்ல சிறப்பான நாள், அது இனிமையான வெற்றியைக் கொடுக்கும்.

ரிஷபம்

உங்களுக்கு நெருக்கமானவர் அனைவரும் நீங்கள் எதிர்பார்க்கும் ஆதரவைக் கொடுக்கவில்லை என நினைக்கலாம். நீங்கள் நிதர்சனத்தைப் புரிந்துகொள்ளவும். உணர்ச்சிவசப்படாமல் இருக்கவும் முயற்சி செய்ய வேண்டும். மேலும், குடும்பத்தில் சண்டை வெடிக்கலாம் என்று கணிப்பு சொல்கிறது. நீங்கள் மோதல்களைத் தவிர்ப்பதும், பிரச்சினையைச் சரியாகக் கையாள உதட்டில் புன்னகையை அணிந்துகொள்வது அவசியம் என்று அறிவுறுத்துகிறோம்.

மிதுனம்

இன்றைய நாள் உங்களுக்கு மிகவும் லாபமானதாகவும், முற்போக்கான நாளாகவும் இருக்கும். வேலைகளில் உற்சாகமான ஊக்குவிப்பையும், பாராட்டையும் எதிர்பார்க்கலாம். அத்துடன் உங்கள் பொறுப்புகளும் அதிகரிக்கும். எனினும், வெற்றியை உங்கள் தலைக்குள் ஏற்றிக்கொள்ள வேண்டாம்.

கடகம்

நெருக்கமானவர்களுடன் உறவுகளை மேம்படுத்த முயற்சிப்பீர்கள். உங்கள் பக்தி, அர்ப்பணிப்பு எதிர்காலத்தில் நன்மைகளைக் கொடுக்கும். இன்று உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் மகிழ்ச்சியைப் பெறுவீர்கள். எதிர்காலத்தை மனத்தில் வைத்துச் செயல்படுவீர்கள். இது உங்களது தன்னம்பிக்கையை அதிகரிக்கும்.

சிம்மம்

நாம் உருவாக்கும் நண்பர்களே, நீண்ட கால அடிப்படையில் நாம் யார் என்பதை உருவாக்கும் காரணியாக இருக்கிறது. கடந்த காலங்களில், உங்கள் இயல்பான உள்ளுணர்வால் நீங்கள் கட்டமைத்த சமூக வட்டத்தில் அர்ப்பணிப்புள்ள நண்பர்களே இடம்பெற்றிருக்கிறார்கள் என்பதை உணர்வீர்கள்.

கன்னி

உங்களுக்குள் மறைந்திருக்கும் கலைத்திறன் இன்று வெளிப்பட்டு உங்களுக்கான நாளை உருவாக்கும். சிறந்த கதாநாயகன், நகைச்சுவை நடிகர்களின் குறிப்பிடத்தக்க திறன்கள் உங்களுக்குள் இருப்பதை வெளிக்கொணர்வீர்கள். உங்கள் நகைச்சுவை உணர்வால், சுற்றியிருப்பவர்களின் மாலை நேரத்தை மகிழ்ச்சியாக்குவீர்கள். இருப்பினும், பிற அவசர செயல்கள், கடமைகளைச் செய்வதற்காக உங்கள் சக்தியைக் கொஞ்சம் சேகரித்துவையுங்கள்.

துலாம்

உங்கள் எல்லா கேள்விகளுக்கான விடைகளும் கிடைக்கப்பெறுவீர்கள். சிறிய விஷயங்களையும் சிக்கல்களையும் பற்றி கவலைப்படுவீர்கள். இன்று பல்வேறு ஆதாரங்களிலிருந்து சம்பாதிக்க வாய்ப்பு இருக்கிறது. உங்கள் மனத்தைச் சமநிலையுடன் வைத்திருந்தால், வேலையில் அற்புதமான முடிவுகளை எடுக்க முடியும்.

விருச்சிகம்

நீண்ட கால முதலீடுகளிலும் ரியல் எஸ்டேட்களிலும் முதலீடு செய்ய நல்ல நாள் இன்று. இது நீண்டகால நன்மைகளையும் லாபங்களையும் கொடுக்கும். உட்கார்ந்து, ஓய்வெடுக்கவும், வாழ்க்கையில் இதுவரை தவறவிட்ட மகிழ்ச்சியை அனுபவிக்கவும் ஏற்ற நேரம் இது. திறந்த மனத்துடன் உங்களை நோக்கிவரும் வாய்ப்புகள் அனைத்தையும் வரவேற்கவும்.

தனுசு

மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை முறையின் பாதகமான விளைவுகளை நீங்கள் சந்தித்திருக்கிறீர்கள். இருப்பினும், ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை நீங்கள் புரிந்துகொண்டுவிட்டதால் நிலைமை மாறும் வாய்ப்புகள் தென்படுகின்றன. மன - உடல் ஆரோக்கியத்தைச் சிறப்பாகப் பராமரிக்கவும். நல்ல செய்தி அல்லது வேலை உயர்வுடன் சம்பள உயர்வு போன்றவற்றுடன் இந்த மாற்றம் தொடங்கும்.

மகரம்

உணர்வுப்பூர்வமான, அதீத உரிமை உணர்வை வெளிப்படுத்த வேண்டாம். அவை உங்கள் கணிப்பை மேகம்போல் மறைத்து, உங்கள் வெற்றிக்குத் தடையாக மாறிவிடும் வாய்ப்புகள் தென்படுகின்றன. இன்று, உங்கள் இயல்பான பணிவான நடவடிக்கையும், நல்ல அணுகுமுறையும் பலரின் இதயங்களை வெல்வதற்கான வாய்ப்புகளைக் கொடுக்கும்.

கும்பம்

ஏதேனும் இலக்கை அமைத்து, அதை அடைவதற்காகச் செயல்படவும் அல்லது ஏதாவது சவால் ஒன்றை ஏற்றுக்கொள்ளவும். அவற்றில் ஏதாவது ஒன்றில் வெற்றிபெறுவீர்கள். உங்களுடைய கடின உழைப்பு, சாதனைகளைப் பற்றி பிறர் பாராட்டுவார்கள். உங்கள் நண்பர்களும், குடும்பத்தைப் போன்றே பாசமாக இருப்பார்கள். மற்றொரு மும்முரமான வேலை நாளை தொடங்குவதற்கு முன்பே, அவர்களுடன் மகிழ்ச்சியாகச் சிறிது நேரத்தைச் செலவிடுங்கள்.

மீனம்

அலுவலகத்தில் நிறைய வேலைகளுடன் மும்முரமாக இருப்பீர்கள். காதல் விஷயத்தில் ஒரு திருப்புமுனை ஏற்படும். ஆனால், மாலை நேரத்தில் என்ன நடந்தாலும், அதை முழு மனத்துடன் நீங்கள் வரவேற்க வேண்டும்.

இதையும் படிங்க: கேரள வெள்ளம்: அடித்தளத்துடன் அடித்துச் செல்லப்படும் வீடு!

ABOUT THE AUTHOR

...view details