மேஷம்
இன்று, உங்களை எதிர்கொண்டிருக்கும் பிரச்சினைகளைச் சமாளிக்க சிறந்த முறையில் தயாராக உள்ளீர்கள். உங்களுடைய உற்சாகத்தை நல்லவிதத்தில் பயன்படுத்திக் கொள்ளுங்கள். இது பலவற்றைத் திட்டமிடுவதைக் காட்டிலும் செய்வதற்கான ஒரு நேரம். இன்று உங்களால் மலைகளைத் தூக்கவும் சமுத்திரத்தைக் கடக்கவும்கூட இயலும். பிற்பாதியில் நீங்கள் கொண்டாட்டத்தில் ஈடுபடலாம்.
ரிஷபம்
இந்த நாள் முழுவதும் மூன்று உணர்ச்சிகள் உங்கள் மனநிலையில் இருக்கும். சக்தி, களிப்பு, உற்சாகப் பிரவாகம். அத்தகைய உற்சாகம் எப்போதும் தொற்றிக் கொள்ளக்கூடியது. எனவே உங்கள் அன்புக்குரியவர்களும் அருகில் உள்ளவர்களும் அதனால் இன்புறுவார்கள். நாள்கள் செல்லச் செல்ல நற்பலனும் அதிகரிக்கும். நீங்கள் களைப்பாக உணர்ந்தால் வேலையிலிருந்து சிறிய இடைவெளி எடுத்துக்கொண்டு ஓய்வெடுக்கவும்.
மிதுனம்
இன்று உங்களுடைய காதல் வாழ்க்கை சில ஏற்றங்களையும் இறக்கங்களையும் சந்திக்க வாய்ப்புள்ளது. மதியப் பொழுதில் அக்கறையும் கவனிப்பும் கட்டாயமான தேவையாக இருக்கும். பண விவகாரத்தில் அநேகமாக நீங்கள் துணிந்து செயல்படக்கூடும். நிறைய யோசிக்காமல் உங்கள் நம்பிக்கையைக் காத்து அகமகிழ்ச்சியைத் தக்கவைத்துக்கொள்ளவும்.
கடகம்
உங்கள் செயல்பாடுகளை உள்ளத்தூண்டுதல் ஆக்கிரமிக்கும். நாளின் பிற்பகுதியில், எதிர்மறை விஷயங்களைப் புறந்தள்ளி நேர்மறை விஷயங்களில் மட்டுமே கவனம் செலுத்தவும். உங்கள் சிந்தனையைக் காட்டிலும் செயல்பாடே நல்விளைவை ஏற்படுத்தும். மெல்லிசையில் உங்கள் இதயத்தையும் புத்தியையும் லயிக்கச் செய்யுங்கள்.
சிம்மம்
உங்கள் பொறுப்புகள் அனைத்தையும் நீங்கள் நிறைவேற்ற வேண்டியிருக்கும். உங்கள் கடின முயற்சிகளுக்கு உரிய வெகுமதிகள் கிடைக்கும். அனைத்து சுபமான பணிகளையும் புதிய புராஜெக்ட்டுகளையும் மதியத்தில் தொடங்கவும். உங்கள் தாராள குணமும் இயலுந்தன்மையும் உங்களை இன்று அமைதியாய் வைத்திருக்கும்.
கன்னி
அலுவலகத்தில் உங்களுக்குத் தலைமையேற்கும் வாய்ப்பும் ஒரு திட்டத்தை முன்மொழியும் வாய்ப்பும் இன்று கிடைப்பதற்கான அறிகுறி தெரிகிறது. உங்களுடைய மதியம் வின்டோ ஷாப்பிங், அன்புக்கு உரியவர்களுக்குப் பரிசு வாங்குவது எனக் கழியும். உங்கள் நெருங்கிய நண்பர் அல்லது குடும்பத்தினருடன் நீண்ட கால இலக்குகளைத் திட்டமிடுவதில் உங்கள் மாலைப் பொழுது கழியும்.