தமிழ்நாடு

tamil nadu

இன்றைய ராசிபலன்: உங்கள் ராசிக்கு?

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான பலன்களைக் காண்போம்.

By

Published : Nov 3, 2021, 6:21 AM IST

Published : Nov 3, 2021, 6:21 AM IST

DAILY HOROSCOPE FOR NOVEMBER 3
DAILY HOROSCOPE FOR NOVEMBER 3

மேஷம்

காரணம் ஏதும் இல்லாமலே, நீங்கள் இன்று தனிமையில் இருக்க விரும்புவீர்கள். மற்றவர்கள் அளித்த பங்களிப்பை நீங்கள் அங்கீகரிக்கும் அதேவேளையில், அதை விட நீங்கள் அவர்களுக்கு அதிகம் செய்யும் நிலைமை இருக்கும். பணியில் உங்கள் மூத்தவர்களுடன் உங்கள் அறிவுத் திறனை பகிர்ந்து கொள்வீர்கள். உங்கள் செலவுகளை கட்டுப்படுத்தும் தேவையும் உள்ளது.

ரிஷபம்

இன்று, உங்களுக்கு படைப்பாற்றல் திறன் அதிகம் இருக்கும். நீங்கள் பணி செய்யுமிடத்தில் கடுமையாக உழைக்கும் அதேநேரத்தில், புதுமைகளை புகுத்தி, அதனை செயல்படுத்துவதில் உங்களுக்கு ஆர்வம் அதிகம் இருக்கும். உங்களது மென்மையான பேச்சின் மூலம், பலர் உங்களை விரும்புவார்கள்.

மிதுனம்

இன்றைய தினத்தில், வீட்டில் குதூகலமும் மகிழ்ச்சியும் நிலவும். வீட்டின் அலங்காரத்தை மேம்படுத்துவதற்கான விஷயங்களில் நீங்கள் அதிகம் ஈடுபாடு கொண்டு, குழந்தைகளுடன் அதிக நேரம் செலவழிப்பீர்கள். அவர்கள் மீது ஈடுபாடு காட்டுவதன் மூலம், நெடுநாட்களாக தீர்க்கப்படாமல் இருந்த பிரச்சனைகள் தீர்க்கப்படும்.

கடகம்

இன்றைய தினத்தை பொருத்தவரை, நீங்கள் கடினமாக உழைத்த பணத்தை செலவிடுவதில் எச்சரிக்கையுடன் செயல்படுவீர்கள். தேவையில்லாத நெருக்கடிகளை தவிர்ப்பதற்காகவும், உங்களுக்குப் நெருக்கமானவர்கள் கோரிக்கையை நிறைவேற்றுவதற்காகவும் நீங்கள் அவ்வாறு செயல்படுவது நல்லது. உங்கள் பணியிடத்தில் வேலை பார்க்கும் உங்கள் தன்மையில் மாற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்பும் அதிகம் உள்ளது.

சிம்மம்

உங்களுக்கு அனைத்தும், தங்கத் தட்டில் வைத்து கொடுக்கப்படும் என்ற எண்ணத்தை கொண்டிருக்க வேண்டாம். உங்கள் எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்வது நல்லது. இன்று நீங்கள் பொறுமையாக செயல்படுவது நல்லது. உங்கள் முயற்சிக்கு ஏற்ற பலன் இல்லாமல் இருக்கும்.

கன்னி

நீங்கள் உங்கள் சுற்றியிருப்பவர்களிடம், அனுசரித்து பழகும் மனப்பான்மையுடன் இருப்பீர்கள். காதலில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத விஷயம் நடக்கும் வாய்ப்பு உள்ளது. கவலை கொள்ள வேண்டாம். உங்களுக்கு சாதகமாகவே நடைபெறும். குடும்பத்தினருடன் நீங்கள் நல்ல முறையில் நேரத்தை செலவிடுவீர்கள்.

துலாம்

இன்று, உங்களுக்கு ஆதாயமான நாளாக இருக்காது, குறிப்பாக நேர்காணலில் வெற்றி பெறும் வாய்ப்பு குறைவு. நம்பிக்கையை கைவிட வேண்டாம். கடுமையாக உழைக்க வேண்டும். நமது உழைப்பிற்கு வருங்காலத்தில், ஏற்று பலன் கிடைக்கும்.

விருச்சிகம்

உங்களது அலுவலகத்தில், உங்கள் மதிப்பை உயர்த்திக் கொள்ள விரும்புவீர்கள். நீங்கள் உறுதியான நடவடிக்கை மேற் கொள்ளும் தன்மை கொண்டவர். இலக்குகளை அடைய நீங்கள் எந்த அளவிற்கும் சென்று வேலை பார்க்கும் திறமை கொண்டவர். புதுமையான கருத்துகளை உங்கள் சக பணியாளர்களிடம் பகிர்ந்து கொள்ள ஆர்வம் காட்டுவீர்கள்.

தனுசு

உங்கள் மனதிற்கு பிடித்தவர்கள் உடன் நேரத்தை செலவிடுவீர்கள். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் முக்கியமான விஷயங்கள் குறித்து ஆலோசனை செய்வீர்கள். குடும்பத்தினரும் நண்பர்களும், தங்கள் ஆலோசனைகளையும் வழங்குவார்கள். உற்சாகமான குதுகலமான மாலை உங்களுக்காக காத்திருக்கிறது

மகரம்

திருமணம் ஆகாதவர்கள் என்றால், நீங்கள் கனவில் சந்திக்கும் ஒருவரை சந்திக்கும் வாய்ப்பு உண்டு. உங்கள் வாழ்க்கைத்துணையை சந்தித்ததில், நீங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைவீர்கள். அவர்களிடம் நீங்கள் மனம் திறந்து பேசுவீர்கள். உங்கள் காதல் துணையும் உங்கள் மீது, நிபந்தனையற்ற அன்பைப் பொழிவார்கள்.

கும்பம்

இன்று உங்களுக்கு குதூகலம் நிறைந்த நாளாக இருக்கும். ஆனால் உங்கள் சக பணியாளர்கள், தங்கள் வேலையை முடிக்க அதற்கான காரணங்களை உங்களை தெரிவிப்பார்கள். அதனால் உங்களது பொறுப்புகளை நீங்களே முடிப்பது நல்லது. உங்கள் மனதிற்குப் பிடித்தவர், உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.

மீனம்

இன்றைய தினத்தைப் பொருத்தவரை, நீங்கள் விரும்பிய அனைத்தையும் செய்யலாம். உங்களது குழுவிற்கு, உங்கள் அனுபவத்தின் மூலம், செயல்திறனை நிரூபிக்க இயலும். உங்களை அனைவரும் போற்றுவார்கள். பெண்களுக்கு லாபம் கிடைத்து அதன் மூலம் ஊக்கம் பெறுவார்கள்.

ABOUT THE AUTHOR

...view details