மேஷம்
இன்றைய நாளைப் பொறுத்தவரை, நீங்கள் தனிமைப்படுத்தப்பட்டதைபோல் உணர்வீர்கள். உறவுகளைப் பலப்படுத்த நீங்கள், முயற்சிகள் பலவற்றை மேற்கொள்வீர்கள். வருங்காலப் பாதுகாப்பிற்கான அம்சங்கள் என்ன என்பதை ஆராய்வீர்கள். அதனால் நீண்ட காலத்திற்கு வலுவாக இருக்கக்கூடிய உறவினை ஏற்படுத்துவீர்கள்.
ரிஷபம்
இன்றைய நாளைப் பொறுத்தவரை, உங்களுக்குச் சிறிது கடினமான, பிரச்சனைகள் நிறைந்த நாளாக இருக்கும். பின்னடைவுகள், சவால்கள் ஆகியவற்றை எதிர்கொள்ள தயாராக இருக்கவும். எவ்வளவு பெரிய பிரச்சினையாக இருந்தாலும், அதை எதிர்த்துப் போராடும் உங்களது மனப்பான்மை காரணமாக, அதற்கான தீர்வு கிடைக்கும். எச்சரிக்கையுடன் கவனமாக செயல்படவும். நன்றாகச் சிந்தித்து, பொறுமையாகச் செயல்படவும். இன்றைய தேவை அது மட்டுமே. தடைகள் உங்களை ஒன்றும் செய்யாது. நீங்கள் சிறந்த வெற்றியடைவீர்கள்.
மிதுனம்
கடந்த கால நினைவுகள், மலரும் நினைவுகளாக உங்கள் மனத்தில் தோன்றும். அதனால் நீங்கள் குதூகலமாக இருப்பீர்கள். அறிவார்ந்த தேடல்களில் ஆர்வம் இருக்கும். உங்களது கடந்த காலம், உங்களது எதிர்காலம், நிகழ்காலத்தை பாதிக்க ஒருபோதும் அனுமதிக்க வேண்டாம்.
கடகம்
இன்று, உங்களுக்கு வேலை செய்யும் ஆர்வம் அதிகம் இருக்கும். ஏதேனும் ஒன்று செய்ய வேண்டும் என்று நீங்கள் சுறுசுறுப்பாக இருப்பீர்கள். இன்றைய நாள், தோட்டப்பணி, சமையல் செய்தல், வீட்டிற்கு விருந்தினரை அழைத்து நேரம் செலவிடுதல் ஆகியவற்றிற்குச் சிறந்த நாளாகும். இன்றைய நாளில், கிரக நிலைகள் உங்களுக்குச் சாதகமாக இருப்பதால், உங்கள் காதல் உறவிற்காக, நேரம், பணம் ஆகியவற்றைச் செலவழித்து மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.
சிம்மம்
விற்பனைத் துறை, சந்தைப்படுத்தல் துறை தொடர்பான பணியில் இருப்பவர்கள், மேற்கொள்ளும் சந்திப்புகள் பலன் தரும். எனினும், பயணத்தில் தாமதம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. உங்களிடமுள்ள திறமைகளை அறிந்துகொள்ள இது சரியான நேரமாகும். அடுத்த 2-3 நாள்களில், உங்களது திறமையை நிரூபிப்பீர்கள்.
கன்னி
தினசரி பணிகளிலிருந்து விலகி, உங்களுக்கான நேரத்தைச் செலவிடுவீர்கள். சோர்வைத் தரும் பணிகளை ஒதுக்கி வைத்துவிட்டு, மனத்திற்கு மகிழ்ச்சியைத் தரும் பணிகளை மேற்கொள்ளவும். தனிப்பட்ட அல்லது சமூக அளவிலான சந்திப்புகளில் நீங்கள் கலந்துகொள்ளக்கூடும். மற்றவர்களுடன் கலந்து பழகுவது, உங்களுக்கு உற்சாகத்தை கொடுக்கும்.