தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

Today's Rasi Palan: இன்றைய ராசிபலன் - நவம்பர் 21 - நவம்பர் 21 இன்றைய ராசிபலன்

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான இன்றையப் பலன்களைக் காண்போம்.

இன்றைய ராசிபலன்
இன்றைய ராசிபலன்

By

Published : Nov 21, 2021, 6:28 AM IST

மேஷம்

இன்று, நீங்கள் விரும்பத்தகாத சூழ்நிலையில் சிக்கிக் கொள்ளும் வாய்ப்பு உள்ளது. நீங்கள் அதனை தவிர்க்க எவ்வளவு முயற்சி செய்தாலும், விஷயங்கள் உங்களுக்கு சாதகமாக இருக்காது. சிறிது கால நேரம் எடுத்துக்கொண்டு, அமைதியாக இருக்கவும். ஏனென்றால் நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு, சாதகமான பலன் கிடைக்காத வாய்ப்பே உள்ளது.

ரிஷபம்

இன்றைய தினத்தில், நீங்கள் அதிகம் யோசிக்காமல், மனதை அமைதியாக வைத்துக் கொள்ளவும். உங்களுக்கு மட்டுமே சொந்தம் என்று உங்களது நினைப்பின் காரணமாக, தேவையற்ற பிரச்சனைகள் ஏற்படலாம். உங்கள் செயலை ஆராய்ந்து பார்த்தால் மட்டுமே, உங்களது பிரச்சனைக்கான தீர்வுகள் கிடைக்கும்.

மிதுனம்

இன்று, நீங்கள் மிகவும் சோர்வாக உணர்வதற்கான வாய்ப்புகள். ஆனால், இதனால் நீங்கள் பாதிப்படையாமல் இருப்பது நல்லது. ஏனென்றால், உங்கள் மனதிற்கு பிடித்தவர்கள் இதனால் பாதிப்படைவார்கள். உங்கள் உணர்ச்சிகளை கட்டுப்படுத்திக் கொள்ளவும். ஏனென்றால் உங்களது கோபம் காரணமாக, தேவையில்லாத சர்ச்சைகள் ஏற்பட்டு, நீங்கள் மற்றவர் மனதை புண்படுத்தக் கூடும். நான் முழுவதும் நீங்கள் சிந்தித்து செயல்பட்டால், உங்களுக்கு நன்மை கிடைக்கும்.

கடகம்

இன்றைய தினம், அனுபவங்கள் நிறைந்த நாளாக இருக்கும். கடவுள் அருள் காரணமாக, உங்களது கருத்துக்கள் வரவேற்ப்பை பெற்று, உங்களுக்கு ஆதரவாளர்களை ஏற்படுத்திக் கொள்வீர்கள். இன்று உங்களது கற்பனை வளம் மிகுந்து, அதற்கான பலன்கள் உங்களை தேடி வரும்.

சிம்மம்

இன்றைய தினத்தில், உங்கள் வாய்ப்பு எதையும் நீங்கள் தவறாமல் பயன்படுத்திக் கொள்வீர்கள். உங்கள் குறிக்கோளை நோக்கி உறுதியாக செயல்பட்டு, உங்கள் சக பணியாளர்கள் கடமையை தவற அனுமதிக்க மாட்டீர்கள். உங்களது வாழ்க்கையில் சந்தோஷத்தை பெற, நீங்கள் சிறிது வெளிப்படையாக நடந்து கொள்ள வேண்டும். மூத்தவர்களின் ஆசியினால், இன்றைய நாள் முழுவதும் உங்களுக்கு உதவி கிடைக்கும்.

கன்னி

உங்களது தன்னம்பிக்கை காரணமாக, நீங்கள் மிக எளிதாக சவாலான பணிகளை நிறைவேற்றுவீர்கள். நிதி விஷயங்களைப் பொறுத்தவரை, இன்று உங்களது வர்த்தகத் திறனை சோதிக்கும் நாளாக இருக்கும். தீர்க்கப்படாத பிரச்சினைகளை தீர்க்க நீங்கள் புதுமையாக சிந்தித்து வெற்றிகரமாக தீர்த்து வைக்கும் வாய்ப்பு உள்ளது.

துலாம்

இன்று நீங்கள், உங்களை சுற்றி உள்ளவர்கள் மத்தியில் முக்கியத்துவம் பெறுவீர்கள். உங்களது கருத்துக்கள் மற்றும் எண்ணங்களை மற்றவர்கள் பாராட்டுவார்கள். புதிய தொழில் திட்டங்களை தொடங்குவதற்கான, பொன்னான வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். சுய நிதி மூலம், நீங்களே உங்களது முதலாளியாக இருக்க வேண்டும் என்று விரும்புபவர்களுக்கு, இன்று மிகவும் அனுகூலமான நாளாக இருக்கும்.

விருச்சிகம்

பலன்களைப் பற்றி கவலைப்படாமல், தொடர்ந்து கடுமையாக உழைக்கவும். வேலையில் எப்போதும் சிறந்து விளங்க முயற்சி செய்யவும். நீங்கள் கூட்டு தொழில் முயற்சியில் இருந்தால், உங்கள் முயற்சிக்கான பலன்கள் கிடைக்க, சிறிது பொறுமையாக காத்திருக்க வேண்டிய தேவை உள்ளது.

தனுசு

இன்றைய தினத்தில், நீங்கள் பிரச்சனைகளை சந்திக்கும் வாய்ப்பு உள்ளது. அதனால் பிரச்சனைகளை எதிர்க்கொண்டு, அதனை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இன்று முழுவதும், முக்கிய முடிவுகள் எதையும் எடுக்காமல் இருப்பது நல்லது. மாலையில், எதிர்பாராமல் கிடைக்கும் பலன்கள் காரணமாக நீங்கள் ஆச்சரியமடைந்து, மிகவும் மகிழ்ச்சி அடைவீர்கள்.

மகரம்

ஒவ்வொரு நாளும், நம் வாழ்க்கையில் புதுமையாக ஏதேனும் ஏற்படும். நீங்கள் சிறிது மனக்குழப்பம் அடையலாம். அதனால் இன்று முழுவதும், நீங்கள் சிறிது மந்தமாக உணரலாம். ஆனால் பணியை பொறுத்தவரை, நீங்கள் மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளும் பலன் தரும். உங்கள் வருங்கால முயற்சிகளுக்கான பாதுகாப்பான அடித்தளம் ஒன்றை நீங்கள் ஏற்படுத்துவீர்கள்.

கும்பம்

இன்று, நீங்கள் நிகழ்ச்சிகளில் பங்கேற்க வாய்ப்பு உள்ளது. அப்போது புதிய நபர்களை சந்தித்து, அவர்களுடன் ஆக்கபூர்வமான உரையாடல்களில் ஈடுபட்டு, உங்களது அறிவை மேம்படுத்திக் கொள்வீர்கள். நீங்கள் உங்களது ஆற்றல் முழுவதையும் முழுமையாக பயன்படுத்திக்கொள்ள நேரிடும் என்பதால், உங்களுக்கு அசதியும் சோர்வும் ஏற்படலாம். ஆனால் பொதுவாக, இன்று குதூகலம் நிறைந்த ஒரு நாளாக இருக்கும்.

மீனம்

இன்றைய தினத்தில், பணியில் இருப்பவர்களுக்கு பதற்றமான சூழ்நிலை ஏற்படும் வாய்ப்பு உள்ளது. ஆனால் தன்னம்பிக்கையை இழக்காதீர்கள். நிலைமையை நீங்கள் பொறுமையுடன் சமாளிக்க வேண்டிய தேவை உள்ளது. இன்றைய நாளின் முடிவில், உங்கள் முயற்சிக்கான பலன்கள் கிடைத்து நீங்கள் சந்தோஷம் அடைவீர்கள்.

இதையும் படிங்க:75 Years of Independence: ஆங்கிலேயர்களை நிலைகுலையச் செய்த மாவீரன் உத்தம் சிங்!

ABOUT THE AUTHOR

...view details