மேஷம்
இன்று நாள் முழுக்க நீங்கள் செய்ய வேண்டிய வேலைப் பட்டியல் நீண்டிருக்கும். திட்டமிடல், கூட்டங்கள் எனப் பல்வேறு முக்கிய வேலைகள் குவிந்திருக்கும். மற்றவர்களிடமிருந்து போதிய உள்ளீடுகள் கிடைக்காததால் சோர்வும், மன உளைச்சலும் ஏற்படலாம். எனினும், விஷயங்கள் ஒரு முடிவுக்கு வரும்போது, அவை தெளிவாகும்.
ரிஷபம்
இன்றைய தினம் நீங்கள் செய்யும் விஷயங்களைச் சிறப்பாகச் செய்வீர்கள். உங்களுக்கு வழங்கப்படும் பொறுப்புகளைத் திறமையுடன் கையாண்டு நல்ல பேர் வாங்குவீர்கள். இன்று ஒரு போட்டியில் பங்கேற்றால், மற்றவர்களைவிட ஓரடி முன்னதாகச் செல்வீர்கள்.
மிதுனம்
மற்றவர்களின் செயல்களைப் பற்றி கவலைப்படாமல் சமுதாயத்தில் உங்கள் சொந்தக் காலில் நிற்பதில் கவனம் செலுத்துவதும், சமூகத்தில் நிலைத்து நிற்பதும் அவசியம் என்பதை மனத்தில் கொள்ள வேண்டும். சில்லறை வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு லாபத்தையும், விறுவிறுப்பான வர்த்தகத்தையும் பார்ப்பார்கள்.
கடகம்
உங்கள் முன்னேற்றத்திற்கான தனிப்பாதையை உருவாக்குவீர்கள். மக்களிடமிருந்து மரியாதையும் அங்கீகாரமும் கிடைக்கும். வியாபாரப் போட்டியாளர்களாலும், நோய்களாலும் பாதிப்பு ஏற்படும். எதிரிகளின் நடவடிக்கைகளைக் கண்காணியுங்கள், உங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் அவர்களின் திட்டங்கள் முறியடிக்கப்படும்.
சிம்மம்
கடினமாக உழைப்பது, கடும் உழைப்பு என்ற இரண்டிற்கும் ஒரு பரந்த வேறுபாடு உள்ளது. இன்றைய நாள் நீங்கள் கடினமாக, புத்திசாலித்தனமாக உழைப்பீர்கள். வெற்றிபெற வேண்டும் என விரும்பினால் கடின உழைப்புக்கு மாற்று இல்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள், விரைவில் இதை நீங்கள் உணரவும் கூடும். எனவே இன்று வியர்வை சிந்துவதில் தவறேதும் இல்லை. மேலும், கடின உழைப்பு எப்போதும் வட்டியுடன் சேர்த்து பலனளிக்கும்.
கன்னி
இன்று அமைதியாகவும், நிதானமாகவும் இருப்பீர்கள், உங்கள் மன அமைதிக்குப் பங்கம் ஏற்படுத்தும் காரணிகள் எதுவும் இல்லை. குடும்பத்தினர், நண்பர்கள் உங்களை முழுமையாக ஆதரிப்பதோடு, தடைகளைச் சமாளிக்க அர்ப்பணிப்புடன் உழையுங்கள்; ஊக்குவிப்பார்கள். மற்றவர்களால் செய்ய முடியாத வேலைகூட உங்களுக்கு ஒப்படைக்கப்படலாம்.
துலாம்
எதிர்காலத்தில் நல்ல வாய்ப்புகளைப் பெற வேண்டுமானால், கடந்த கால அனுபவங்களே அதற்கு முதலீடு. உங்களைச் சுற்றி நடக்கும் விஷயங்களில் ஆழ்ந்த பிடிப்பு ஏற்படுத்திக் கொண்டால், உங்களுடைய நேர்மை கேள்விக்குள்ளாக்கப்படக்கூடிய அருவருப்பான சூழல்களையும் சமாளிக்க வேண்டியிருக்கும். சிறிய பிரச்சினைகளைத் தவிர்த்து, பொதுவாகவே இந்த நாள் இயல்பானதாகவே இருக்கும். உங்களுடைய புரிதலுக்கும், அணுகுமுறைக்கும் இன்று பாராட்டும் மதிப்பும் கிடைக்கும்.
விருச்சிகம்
ஆரோக்கியத்திற்கான குறிப்புகள் கொடுக்கும் மனநிலையில் இன்று இருக்கிறோம். ஆரோக்கியமான உணவுப் பழக்கங்களைப் பின்பற்றி, உடல் பருமன் ஏற்படுவதைத் தவிர்க்க தொடர்ந்து உடற்பயிற்சி செய்யவும். ஒழுங்கற்ற உணவுப்பழக்கம், ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை பல பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். ஆரோக்கியமான உணவுகளை உண்ணுங்கள், சந்தோஷமாக இருங்கள்.
தனுசு
இன்று வேலையிடத்தில் பணிச்சுமை கூடும். இருப்பினும், இதை நீங்கள் ஆக்கப்பூர்வமான சவாலாக எடுத்துக்கொண்டு நேர்மறையாகப் பணியாற்றுவீர்கள். சொந்த வாழ்க்கையில் உங்கள் நண்பர்கள் பட்டியல் இனி நீளும் வாய்ப்பு தென்படுகிறது. ஒட்டுமொத்தமாக இன்று நீங்கள் உற்சாகமாகச் செயல்படுவீர்கள்.
மகரம்
இன்று, கையில் ஒரு கப் காபியுடன் ஓய்வாக இருக்க விரும்புவீர்கள். அப்போது, உங்கள் பழைய நினைவுகளைப் புரட்டிப் பார்த்து பொன்னான தருணங்களை அசைபோட்டு மகிழ்வீர்கள்; வைத்திருக்க விரும்புவீர்கள். முன்பொரு காலத்தில் உங்களுடைய மனத்திற்கு நெருக்கமாக இருந்தவருடன் மீண்டும் தொடர்பு ஏற்படுத்திக்கொள்ள சந்தர்ப்பம் கிடைக்குமா என்று முயற்சிக்க விரும்புவீர்கள்.
கும்பம்
வாழ்க்கையின் முக்கிய முடிவுகளில் உணர்வுப்பூர்வமாக முடிவெடுக்க வேண்டாம். பகுத்தறிவுடன் செயல்பட வேண்டிய விஷயங்களில் உணர்வுப்பூர்வமாக முடிவெடுப்பது உங்கள் பாதையில் ஒரு தடைக்கல்லாக மாறும். இதை உணர்ந்து முடிவெடுக்கும்போது உணர்ச்சிவசப்படும் பழக்கத்தைக் கட்டுப்படுத்த கற்றுக்கொள்ளுங்கள்; இல்லையெனில், அதற்காக அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும்.
மீனம்
இதயத்திற்கு நெருக்கமாக இருப்பவர்களிடம் மிகவும் நெகிழ்வுடனும், உணர்வுப்பூர்வமாகவும் இருப்பீர்கள். உங்களை நன்கு அறிந்தவர்களுக்கும் இது பிடிக்கும் என்றாலும், மனத்திற்கு நெருக்கமானவர்களைச் சற்று கண்காணிப்பது நல்லது. ஏனெனில், அவர்களின் அன்பு உங்கள் கண்களை மறைத்து, தவறுகளை மட்டுப்படுத்தி காண்பிக்கும். அல்லது நீங்கள் அவற்றை மன்னித்து மறந்துவிடுவீர்கள்.
இதையும் படிங்க: Sanjib banerjee: நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜியை மேகாலயாவிற்கு மாற்ற குடியரசுத்தலைவர் ஒப்புதல்