தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஜுன் 8 - இன்றைய ராசிபலன்கள் - Horoscope news

நேயர்களே, மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான இன்றைய(ஜூன் 8) உங்கள் ராசிக்கான பலன்கள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.

Daily Horoscope for June 8
Daily Horoscope for June 8

By

Published : Jun 8, 2021, 6:46 AM IST

மேஷம்

இன்று, நீங்கள் ஒருவரின் உள்ளத்தை புண்படுத்த நேரிடலாம். நீங்கள் வலிமைமிக்க நிலையான உறவை, உங்கள் விருப்பப்படி ஏற்படுத்திக்கொள்வீர்கள். கணவன் மனைவிக்கு இடையேயான உறவு வலுவடைய வாய்ப்பு உள்ளது.

ரிஷபம்

கடின உழைப்பு இருந்தபோதிலும், உழைப்பிற்கு ஏற்ற வெகுமதி கிடைப்பது கடினம். பிற்பகலில் பயணம் செய்வதைத் தவிர்க்கவும். மாலை நேரங்களில் நிம்மதியாகவும், அழகாகவும் நேரத்தைச் செலவிடுவீர்கள். மனதிற்கு நெருக்கமானவர்களுடன் மகிழ்ச்சியைக் கொண்டாடுவீர்கள்.

மிதுனம்

உங்களைச் சுற்றி உள்ளவர்கள் சந்தோஷமாக இருந்த போதிலும், உங்களுக்கான வேலைப்பளு அதிகரிக்கலாம். வியாபார சிக்கல்களை கவனமாக கையாள வேண்டும். வியாபார ரீதியான பயணத்தை மேற்கொள்ளலாம். தொழிலில் காரிய சித்தி அடைய சிறந்த நாளாக அமையும் வாய்ப்பு உள்ளது.

கடகம்

மற்றவர்கள் செய்ய வேண்டிய பணிகளையும் மேற்கொண்டு வேலைப் பளு ஏற்படுத்திக் கொள்வதைத் தவிர்க்கவும். தொழிலைப் பொறுத்தவரை, எதிரிகள் மற்றும் போட்டியாளர்கள் தங்கள் தந்திரத்தில் தோல்வி அடைவார்கள். இந்த உத்தியை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளவும்.

சிம்மம்

நீங்கள் உணர்ச்சிகளுக்கு மிகுதியாக ஆட்பட வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது. வாழ்க்கையில் உங்கள் விருப்பங்களை நிறைவேற்றவும், அதற்கான மனப்பாங்கை மாற்றிக்கொள்ளவும் வாழ்க்கையின் அனைத்து அங்கத்திலும் நீங்கள் இன்று சிறப்பாகச் செயல்படுவீர்கள். இன்று உங்கள் வீட்டை மீண்டும் அலங்கரிக்கவும் புதுப்பிக்கவும் வாய்ப்புகள் உள்ளன. எல்லாவற்றுக்கும் மேலாக, ஏற்றம் மிக்க நாள் காத்திருக்கிறது.

கன்னி

உங்களுக்கு இன்று கிடைக்கக்கூடிய பட்டப்பெயர் மிகுந்த மன உளைச்சலையும், வேதனையையும் ஏற்படுத்தலாம். நீங்கள் இதுவரை சேமித்து வைத்ததற்குமேல் இழப்பு ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. இருப்பினும், உங்கள் திருமண உறவின் மகிழ்ச்சியை எதிர்பார்க்கலாம். எனவே, உங்கள் மகிழ்ச்சியான வாழ்க்கையைத் தொடர, உங்கள் துணையுடனான உறவை வலுப்படுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறீர்கள்.

துலாம்

உங்கள் நடை உடைகள் உங்கள் தோற்றத்தையும் அழகையும் மெருகேற்றுவதாக அமையும். மக்கள் உங்கள் அழகு அல்லது தோற்றத்தால் கவரப்படுவார்கள். இன்று மாலை நடைபெறும் பொது நிகழ்ச்சிகள், சிலருடன் உங்களை நெருக்கமானதாக்கும். காதல் வயப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

விருச்சிகம்

அவசரகதி முடிவுகள் பலன் தராது. உங்கள் திட்டங்களை முடிவு செய்வதற்கு முன்பு ஒரு முறைக்கு இரண்டு முறை யோசியுங்கள். இல்லாவிட்டால் திட்டங்கள் பாழாகிவிடும். உங்கள் முயற்சிக்கு ஏற்ப பலன் கிடைக்காமல் போகலாம். தொழில் ரீதியாக இன்று பயணம் மேற்கொள்ள வாய்ப்புகள் உள்ளன. மாலைப்பொழுதை உங்களுக்கு பிடித்தமானவருக்கு சிறப்பானதாக ஆக்குங்கள்.

தனுசு

இன்று அமைதியாக காணப்படுவீர்கள். சுயப் பரிசோதனை செய்து கொள்ளும் மன நிலையில் இருப்பீர்கள். உங்கள் குடும்ப உறுப்பினர்களிடம், உங்கள் மன உணர்வுகளை இன்று வெளிப்படுத்துவீர்கள். இன்று பிற்பகலில், வியாபார ரீதியாக சிலரைச் சந்திக்கலாம். அல்லது பொழுதுபோக்குக்காக நேரம் ஒதுக்குவீர்கள். இதனால் மாலையில் நீங்கள் பணம் செலவு செய்வீர்கள்.

மகரம்

இன்றைய நாள் உங்களுக்கு சமன் செய்யப்பட்ட நாளாக இருக்கும். ஒருபுறம், நீங்கள் இலக்கை எட்டுவதற்கு கடினமாக உழைப்பீர்கள். மறுபுறம், பொழுது போக்கிற்காக சிறிது நேரம் ஒதுக்குவீர்கள். உங்கள் மேலதிகாரி மற்றும் உடன் பணியாற்றுபவர்கள் உங்களை புகழ்ந்து தள்ளுவார்கள். இருப்பினும், மின்னுவதெல்லாம் பொன்னல்ல. எனவே, முகஸ்துதிகளை பொருட்படுத்தாதீர்கள். ஏனெனில், அவற்றின் உட்பொருள் உங்களுக்குப் புரியாமல் போகலாம். இன்றைய நாள் மாணவர்களுக்குச் சிறப்பானதாக இருக்கும்.

கும்பம்

இன்று கொண்டாட்டத்துக்கான சிறிய காரணமாவது உங்களுக்குத் தேவை. அதற்கேற்ப நல்ல செய்தி வந்து சேரும். இன்றைய நாள் உற்சாகத்துடன் தொடங்கி, நாள் முழுவதும் நீடிக்கும். புதிய மக்களை சந்திப்பீர்கள். அவர்களுடன் நட்பை ஏற்படுத்திக் கொள்வீர்கள். மாலையில் உங்களுக்கு பிரியமானவருடன் நேரத்தைச் செலவழிப்பதன் மூலம் இன்றைய நாளின் முடிவு மிகச்சிறந்ததாக இருக்கும்.

மீனம்

நீங்கள் திருமணம் ஆகாதவராக இருந்தால், திருமண பந்தத்தை ஏற்படுத்துவதற்கு ஏற்ற நாள் இன்று. திருமணம் ஆனவராக, அல்லது காதலர்களாக இருந்தால் இன்றைய நாள் காதல் வயப்பட வாய்ப்புள்ளது. இது உங்கள் காதலர் அல்லது வாழ்க்கைத் துணையுடன் நெருக்கத்தை அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய பங்குதாரர்களை சேர்ப்பதற்கான வாய்ப்புகளும் இன்று உருவாகலாம். புதிய உறவை அல்லது நட்பை ஏற்படுத்தவும், பழைய உறவுகளை புதுப்பிக்கவும் இன்று ஏற்ற நாள்.

ABOUT THE AUTHOR

...view details