தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இன்றைய ராசி பலன்கள் - ஆகஸ்ட் 2 - raasipalan today

நேயர்களே... மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான பலன்களை பார்க்கலாம்.

daily-horoscope-for-july-30
இன்றைய ராசி பலன்கள் - ஆகஸ்ட் 2

By

Published : Aug 2, 2021, 6:19 AM IST

மேஷம்

இன்றைய தினம் நீங்கள் அனைத்து வகையிலும் முழுமையான சுதந்திரத்தை விரும்புபவராக இருப்பீர்கள். டிவி, ஷாப்பிங் அல்லது ஒரு திரைப்படம் போன்ற இளைஞர்களுக்கான பொழுதுபோக்குகளில் ஈடுபடும் உள்ளது. குழந்தைகள் ஒரு ட்ரீட் தருமாறு உங்களை கேட்கலாம். பொதுவாக, குடும்ப விவகாரங்கள் இன்று ஆதிக்கம் செலுத்துகின்றன.

ரிஷிபம்

இன்றைய தினம் நீங்கள் மிகவும் சுயநலத்துடன் நடந்து கொள்ளும் வாய்ப்பு உள்ளது. இது உங்களுக்கு மிகவும் பாதுகாப்பற்ற உணர்வை கொடுக்கக் கூடும். மற்றவர்களை கட்டுப்படுத்தி ஆதிக்கம் செலுத்தும் போக்கு உங்களிடம் காணப்படும். இதனால், முக்கிய உறவுகள் பாதிக்கும் வாய்ப்பு உள்ளது. நீங்கள் சந்திக்கும் அனைவரின் தேவைகளையும் உணர்ச்சிகளையும் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

மிதுனம்

உங்கள் சமூக வட்டத்தில் ஒரு தலைவராக நீங்கள் நற்பெயரைப் பெறுவீர்கள். ஏதோவொரு விஷயத்திற்காக உங்கள் மனம் ஏங்குகிறது. அதை அடைவதற்குள் உங்கள் திறனை நீங்கள் மேம்படுத்திக் கொள்ள வேண்டும். உங்களுடைய கற்பனைத்திறன் மூலம் இன்று சில தீர்வுகள் கிடைக்கக் கூடும். உங்கள் மனதை குடைந்து வரும் சில கேள்விகளுக்கு, இன்று பதில் கிடைக்கலாம்.

கடகம்

கடவுளின் ஆசியுடன், நீங்கள் நினைக்கும் அல்லது செயல்படுத்தும் காரியம் வெற்றி பெறும். மாணவர்கள் சிறப்பாக செயல்புரிந்து பணியை நிறைவேற்றுவார்கள். நீங்கள் உங்கள் கற்பனைத் திறனை சிறப்பாக வெளிக்காட்டுவீர்கள். சுருக்கமாக, மகிழ்ச்சியை பலவகையிலும் கொடுக்கும் ஒரு நாளாக இருக்கும்.

சிம்மம்

உங்களுடைய பெரும்பாலான நேரம் வேலை செய்வதில் செலவிடப்படும் வாய்ப்பு உள்ளது. இன்று உங்கள் அனைத்து பணிகளிலும் நீங்கள் சிறந்து விளங்குவீர்கள். தொழில்முறை உறவுகள் மூலம் ஒத்துழைப்பு கிடைக்கும். உங்கள் சக ஊழியர்களுடன் நீங்கள் நல்ல உறவு வைத்திருப்பீர்கள். இன்று வணிகத்திற்கு உகந்த நாளாக இருக்கும்.

கன்னி

உங்கள் இதயத்தின் ஓரத்தில் தேக்கி வைத்த உணர்ச்சிகள் இன்று வெளிப்படலாம். உங்கள் உடைமைகள் மீது உணர்ச்சி ரீதியான பிணைப்புகளை நீங்கள் உருவாக்கலாம். எனினும், சூழல் உங்களுக்கு உகந்ததாக இல்லை என்பதால், நீங்கள் மிகவும் பதற்றமாக உணரலாம்.

துலாம்

இன்று உங்கள் மனதில் உள்ள கலைத்தன்மையை வெளிக் கொண்டு வரவும்! கலைகள் மீது ஆர்வம் ஏற்பட்டால் ஆச்சரியப்பட வேண்டாம். நட்சத்திரங்கள் உங்களுக்கு அனுகூலமாக இருந்து, அழகியல் தொடர்பான அனுபவங்களைக் கொடுக்கும். இதன் விளைவாக, வீட்டை அலங்கரிக்க உங்கள் மனம் மிகவும் விரும்பும்.

விருச்சிகம்

ஒரு புதிய கூட்டு முயற்சித் திட்டம் ஒன்றின் விளைவாக, உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும் நீங்கள் மிகவும் சுறுசுறுப்பாக இயங்குவீர்கள். நீங்கள் எடுத்த முயற்சிகளுக்கு தற்போது பலன் கிடைக்காமல் இருக்கலாம். ஆனால் பொறுமையாக இருங்கள், ஏனெனில் நிலைமை விரைவில் சீராகும்.

தனுசு

ஆலோசனையைப் பெறுவதற்கு தயாராக இருங்கள் - திட்டமிடப்படாத வகையில் மற்றும் எதிரபாராத விதமாக இது இருக்கும். இந்த ஆலோசனைகள் கருத்தில் கொள்ளத்தக்கதாக இருப்பதால், அதைக் உதாசீனப்படுத்தாதீர்கள். ஆனால் முடிவு உங்கள் கையில் இருக்க வேண்டும். மேலும் தீவிரமாக யோசித்து சரியான முடிவு எடுப்பது நல்லது.

மகரம்

இன்றைய தினத்தை நீங்கள் உற்சாகத்துடன் தொடக்கி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்துவீர்கள். பணியிடத்தில், அதிக செயல்திறனுடன் பணியாற்றும் வகையில், வேலை செய்யும் முறையில் மாற்றம் கொண்டு வருவீர்கள். இந்த மாற்றம் உங்களது தன்னம்பிக்கையை அதிகரித்து, நலல் பலன் கிடைக்கும்.

கும்பம்

ஒத்துழைப்பு மற்றும் ஆதரவுடன் செயல்படும், உங்கள் சக பணியாளர்கள் பணியில் உங்கள் செயல்திறனை அதிகரிக்க உதவுவார்கள். மேலும், உங்கள் படைப்பாற்றல் உங்களுக்கு புகழைச் சேர்க்கும். உங்கள் நண்பர்களுடனும் குடும்பத்தினருடனும் நீங்கள் நல்ல வகையில் நேரத்தை செலவழித்து இந்த நாளை நிறைவு செய்வீர்கள்.

மீனம்

இன்று நீங்கள் எதிர் பாலினத்தினரின் கவனத்தை ஈர்ப்பீர்கள், இது எதிர்காலத்தில் உங்கள் வெற்றிக்கு ஒரு முக்கிய காரணமாக இருக்கும். கிரகங்கள் சாதகமாக உள்ளதன் காரணமாக நீங்கள் உங்கள் எதிர்பார்ப்பை விட அதிகம் பெறுவீர்கள். நீங்கள் எச்சரிக்கையாக செயல்படும் ஒரு நபராக இருந்த போதிலும், நீங்கள் கோப உணர்வு கொண்டவராகவும், சவால்களை சந்திக்க தயங்காதவராகவும் இருப்பீர்கள்.

ABOUT THE AUTHOR

...view details