தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இன்றைய ராசிபலன் - ஜூலை 18 - Daily Horoscope

நேயர்களே... மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான பலன்கள் குறித்து பார்க்கலாம்.

இன்றைய ராசிபலன்
இன்றைய ராசிபலன்

By

Published : Jul 18, 2021, 6:00 AM IST

மேஷம்

உங்களது தோற்றம் மற்றும் செயல்திறன் காரணமாக இன்று நீங்கள் அனைவரின் கவனத்தையும் கவர்வீர்கள். இந்த வாய்ப்பை முழுமையாக பயன்படுத்திக்கொண்டு புத்துணர்வு பெறவும். இதன் மூலம் நீங்கள் பெரிய அளவில் வெற்றி பெற முடியும்.

ரிஷபம்

இன்று நீங்கள் உணர்வு ரீதியாக பாதிக்கப்பட்டு இருப்பீர்கள். உங்களுக்கு நெருக்கமான ஒருவருடன் உணர்ச்சிப் போராட்டம் காரணமாக பிரச்னைகள் ஏற்படக்கூடும். உங்கள் சந்திப்பின்போது, மற்றவர்கள் ஏற்படுத்தும் தாக்கம் காரணமாக குழப்பமான நிலை நிலவக் கூடும். சச்சரவுகள் அல்லது விவாதங்களில் ஈடுபடுவதை தவிர்க்கவும்.

மிதுனம்

இன்று நீங்கள் சந்திக்கும் நபர்களிடம் உங்களது எண்ணங்கள் மற்றும் கருத்துக்களை இந்த கொள்வீர்கள். அவர்களும் தங்கள் உணர்வுகளை உங்களிடம் வெளிப்படுத்துவார்கள். பரஸ்பரம் திருப்தியான உணர்வு ஏற்படும். மேலும் இன்றைய தினத்தில், வேடிக்கையும் குதூகலமும் இருக்கும்.

கடகம்

பணியிடத்தில், சிறந்த கூட்டாளி உறவை ஏற்படுத்தும் உங்களது திறமையின் காரணமாக, முக்கிய திட்டங்களில் வெற்றி காண்பீர்கள். ஆனால் ஒப்பந்தங்கள் ஏற்படுத்தும்போது கவனமாக செயல்படுவது முக்கியம். ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் முன், அதனையே முழுமையாக படித்து அறிந்து கொள்வது நல்லது.

சிம்மம்

பழைய நண்பர்களுடன் உள்ள தொடர்பை புதுப்பித்து கொள்ளவும், புதிய உறவுகளை ஏற்படுத்திக் கொள்ளவும் இது சிறந்த நாளாக இருக்கும். நண்பர்கள் அல்லது உறவினர்கள் உங்கள் வீட்டிற்கு வருகை தரக் கூடும். அதனால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். நீங்கள் விருந்தினர்களுக்கு சிறந்த வகையில் விருந்து அளிப்பீர்கள்.

கன்னி

இன்று, வர்த்தகம் தொடர்பான பணிகள் மற்றும் பொழுதுபோக்கு ஆகிய இரண்டு இருக்கும் நேரம் ஒதுக்குவீர்கள். விருந்துகளில் அதிகம் கலந்து கொள்வீர்கள். நீங்கள் எவ்வளவு அதிக நேரம் செலவிடுகிறீர்களோ, அந்த அளவிற்கு செலவு இருக்கும். எனினும் நீங்கள், செலவு செய்யும்போது சிந்தித்து முடிவெடுக்க வேண்டும்.

துலாம்

இன்று, நீங்கள் சாதனை செய்யும் வாய்ப்பு உள்ளது. உங்கள் பணியில் நீங்கள் கொண்டுள்ள ஈடுபாடு அல்லது குடும்பம் மீதான ஈடுபாட்டை வெளிப்படுத்துவீர்கள். நீங்கள் உங்கள் வர்த்தகத்தில் சிறந்த விளங்கி, உங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள பணிகளை திறமையாக நிறைவேற்றி, உங்கள் ஆற்றலை நிரூபிப்பீர்கள்.

விருச்சிகம்

உறவுகள், வாழ்க்கையின் வேர்களாகும். உங்களது நெருங்கிய உறவினர்கள் மற்றும் உங்களை சுற்றி உள்ளவர்களை நீங்கள் எவ்வாறு நடத்துகிறீர்கள் என்பது மிகவும் முக்கியமாகும். அவர்களது முக்கியத்துவத்தை உணரச் செய்யவும். நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் மீது ஆதிக்கம் செலுத்தக் கூடாது.

தனுசு

பிரச்சினைகள் அல்லாத குழந்தைப் பருவத்திற்கு செல்ல நீங்கள் விரும்புவீர்கள். திட்டமிடப்படாத சுற்றுலா பயணம் போன்றவற்றை மேற்கொள்ள நீங்கள் விரும்பலாம். பழைய நண்பர்களை சந்திப்பதன் மூலம், மலரும் நினைவுகள் மூலம், மகிழ்ச்சியாக உணர்வீர்கள்.

மகரம்

பணியிடத்தில் உங்களுக்கு அங்கீகாரமும் பாராட்டுகளும் காத்திருக்கின்றன. சக பணியாளர்கள் உங்கள் வெற்றியை பார்த்து பொறாமைப்படாமல், அவர்கள் உங்களுக்கு ஊக்கமளித்து மகிழ்வார்கள். இதனால் புதிய பணிகளில் வரும் சாதனைகளில் திறமையாக எதிர்கொள்வீர்கள். புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்கள், சிறிது காலம் பொறுக்கவும். தற்போது நிலைமை சாதகமாக இல்லை.

கும்பம்

வலியைக் கொடுக்கும் உங்கள் கடவுள், சுகத்தையும் வழங்குவார்கள். இன்றைய நாளின் தொடக்கத்தில், செய்யவேண்டிய பணி அதிகம் இருந்தாலும், இவை அனைத்தையும் ஒவ்வொன்றாக செய்து முடித்து விடுவீர்கள்.

மீனம்

நீங்கள் தினசரி பணியை ஒழுங்குபடுத்த, அதிக முயற்சிகள் எடுத்துக் கொள்வீர்கள். ஆனால் கிரக நிலைகள் சாதகமாக இல்லாத காரணத்தினால், நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றி அடையாமல் இருக்கும். எனவே நீங்கள் பொறுமையைக் கடைப்பிடித்து, உணர்ச்சிகளை கட்டுப்படுத்திக் கொண்டிருந்தால் நிலைமை தானாகவே சரியாகும்.

இதையும் படிங்க: பொன் வேண்டாம் பொண்ணே போதும் - 'மாஸான' மாப்பிள்ளை

ABOUT THE AUTHOR

...view details