தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

HOROSCOPE: ஜனவரி 24 ராசிபலன் - உங்க ராசிக்கு எப்படி? - ஜனவரி 24 ராசிபலன்

HOROSCOPE: மேஷம் முதல் மீனம் வரை12 ராசிகளுக்கான இன்றைய பலன்களை காண்போம்.

ஜனவரி 24 ராசிபலன்
ஜனவரி 24 ராசிபலன்

By

Published : Jan 24, 2022, 6:20 AM IST

மேஷம்

காரணம் ஏதும் இல்லாமலே, நீங்கள் இன்று தனிமையில் இருக்க விரும்புவீர்கள். மற்றவர்கள் அளித்த பங்களிப்பை நீங்கள் அங்கீகரிக்கும் அதேவேளையில், அதை விட நீங்கள் அவர்களுக்கு அதிகம் செய்யும் நிலை இருக்கும். பணியில் மூத்தவர்களுடன் உங்கள் அறிவுத் திறனை பகிர்ந்து கொள்வீர்கள். உங்கள் செலவுகளை கட்டுப்படுத்தும் தேவையும் உள்ளது.

ரிஷபம்

இன்றைய தினத்தில், நடைமுறைக்கு ஏற்ற வகையில், விரிவாக செயல் திட்டத்தை தயாரித்து பணியாற்ற வேண்டும். இதன் மூலம் வாடிக்கையாளர்களின் கோரிக்கைகளுக்கு ஏற்ற வகையில், செயல்புரிய உதவியாக இருக்கும். உங்களது அகராதியில், தோல்வி என்பதே இல்லை. நீங்கள் ஒரு நிபுனரை போல பணிபுரிவீர்கள்.

மிதுனம்

உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில், உற்சாகமும் மகிழ்ச்சியும் நிலவும். உங்கள் குழந்தைகளிடம் நீங்கள் அதிக நேரம் செலவழிப்பீர்கள். வீட்டை அலங்கரிக்க முயற்சி மேற்கொள்வீர்கள். குடும்பத்தினருடன் மேற்கொள்ளும் நீண்ட ஆலோசனை காரணமாக, தீர்க்கப்படாமல் உள்ள விஷயங்கள் சுமுகமாக தீர்க்கப்படும்.

கடகம்

இன்றைய தினத்தை பொறுத்தவரை, உங்கள் காதல் துணையுடன் கடைகளுக்கு சென்று, அவர்களுக்கு பிடித்ததை வாங்கி கொடுக்க பணம் செலவழிப்பீர்கள். உங்களது முயற்சியை கண்டு மகிழும் உங்கள் காதல் துணையும், அதைவிட பத்து மடங்கு அதிகமாக உங்களுக்கு பரிசையும் அன்பையும் வழங்குவார்.

சிம்மம்

இன்றைய தினம் நீங்கள் எதிர்பார்த்த விஷயங்கள் நடக்கும் சாத்தியம் மிகவும் குறைவு. அது குறித்து கவலைப்படாமல், நடப்பவை நல்லதற்கு தான் என்ற எண்ணத்துடன் மனதை தேற்றிக் கொள்ள வேண்டும். உங்களுக்கு ஏற்ற சரியான நபரை நீங்கள் சந்தித்து, அதன் மூலம் உங்களது கற்பனைத் திறனை வளர்த்துக் கொள்ளும் வாய்ப்பு உள்ளது.

கன்னி

சூழ்நிலைக்கு ஏற்றபடி நடந்து கொள்ளும் நீங்கள் உங்களை சுற்றியிருக்கும் மக்களை மகிழ வைப்பீர்கள். காதல் வயப்பட்டிருப்பவர்களுக்கு எதிர்பாராத சம்பவம் நேரிடலாம். கவலை கொள்ளத் தேவையில்லை. அவை உங்களுக்கு சாதகமான விஷயமாகவே இருக்கும். குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடவும். குடும்பப் பொறுப்பை எடுத்துக் கொண்டு உங்களது கலாச்சாரத்தை மதிப்பதன் மூலம் குடும்ப உறவு பலப்படும்.

துலாம்

இன்று, உங்களுக்கு ஆதாயமான நாளாக இருக்காது, குறிப்பாக நேர்காணலில் வெற்றி பெறும் வாய்ப்பு குறைவு. நம்பிக்கையை கைவிட வேண்டாம். கடுமையாக உழைக்க வேண்டும். நமது உழைப்பிற்கு வருங்காலத்தில், ஏற்ற பலன் கிடைக்கும்.

விருச்சிகம்

உங்களது அலுவலகத்தில், உங்கள் மதிப்பை உயர்த்திக் கொள்ள விரும்புவீர்கள். நீங்கள் உறுதியான நடவடிக்கை மேற்கொள்ளும் தன்மை கொண்டவர். இலக்குகளை அடைய நீங்கள் எந்த அளவிற்கும் சென்று வேலை பார்க்கும் திறனை கொண்டவர். புதுமையான கருத்துகளை உங்கள் சக பணியாளர்களிடம் பகிர்ந்து கொள்ள ஆர்வம் காட்டுவீர்கள்.

தனுசு

இன்று, வாடிக்கையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களின் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்வதில் நேரம் அதிகம் செலவாகும். உங்களது பொறுமையான குணத்தால் மற்றவர்கள் கூறும் ஆலோசனைகளையும் கருத்துக்களையும் கவனமாக கேட்பீர்கள். இன்று உங்களுக்கு ஒரு ஆக்கபூர்வமான நாளாக இருக்கும்.

மகரம்

இன்று உங்களுக்குப் பொருத்தமான துணையை நீங்கள் கண்டறிந்து, அவர்களிடம் உங்களது உணர்வுகளை வெளிப்படுத்துவீர்கள். உங்களைப் பொறுத்தவரை உங்கள் குடும்பம் தான் உலகம். கடந்த வருடங்களில் இல்லாத அளவிற்கு, நீங்கள் உங்கள் உணர்வுகளை அதிகம் வெளிப்படுத்துவீர்கள். நீங்கள் வெளிப்படுத்தும் நிபந்தனையற்ற அன்பு, பல மடங்கு உங்களை வந்து சேரும்.

கும்பம்

பல மணி நேர வேலைக்கு பிறகும், உடன் பணிபுரிபவர்கள், வேலையை நிறைவு செய்யாமல் சாக்குப்போக்கு கூறுவார்கள். உங்கள் பணியை முடித்துவிட்டு, பிறகு மற்றவர்களுக்கு உதவுவது குறித்து யோசிக்கவும். உங்களது வாழ்க்கை துணை உங்களுக்கு ஆதரவாக இருந்து, மன அழுத்தத்தை போக்குவார்.

மீனம்

இன்றைய தினத்தைப் பொருத்தவரை, நீங்கள் விரும்பிய அனைத்தையும் செய்யலாம். உங்களது குழுவிற்கு, உங்கள் அனுபவத்தின் மூலம், செயல்திறனை நிரூபிக்க இயலும். உங்களை அனைவரும் போற்றுவார்கள். பெண்களுக்கு லாபம் கிடைத்து அதன் மூலம் ஊக்கம் பெறுவார்கள்.

WEEKLY HOROSCOPE: ஜனவரி 23-29 வரை முயற்சிகள் பலனளிக்கும் வாரம்!

இதையும் படிங்க:New Year 2022 Horoscope: இந்த வருடம் உங்களுக்கு எப்படி இருக்கும்? இதோ!

ABOUT THE AUTHOR

...view details