தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

Rasi Palan: இன்றைய ராசிபலன் - ஜனவரி 10 - ஜனவரி 10 ராசிபலன்

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான இன்றைய பலன்களை காண்போம்.

ETV BHARAT Rasi Palan 2022, ஈடிவி பாரத் ராசிபலன் 2022
Rasi Palan

By

Published : Jan 10, 2022, 5:02 AM IST

Updated : Jan 10, 2022, 6:16 AM IST

மேஷம்

நீங்கள், உணர்ச்சிவசப்படுவதால் செய்யும் செயல்களில் தடைகள் ஏற்படும். தோல்விகளால் சோர்வு அடைவீர்கள். உங்களுக்கு கிடைத்ததை எண்ணி மகிழ்ச்சி அடைதல் நன்மை பயக்கும்.

ரிஷபம்

நீங்கள் அனைத்து விஷயங்களிலும் மரபுகளை கடந்து புதுமையாக செயல்பட்டு வெற்றி அடைவீர்கள். பிற்பகலில் உயர் அலுவலர்களிடம் பணிந்து செல்ல நேரிடலாம். ஆகையால் எச்சரிக்கையுடன் இருப்பது நன்மை பயக்கும். மாலை நேரத்தில் உங்கள் பலவீனங்கள் அனைத்தும் உங்கள் பலமாக மாறக்கூடும்.

மிதுனம்

இன்று, நீங்கள் எந்த ஒரு விஷயத்திலும் முடிவு எடுப்பதற்கு முன்பு ஆழ்ந்து சிந்தித்து அதில் உள்ள நன்மை தீமைகளை மனதில் கொண்டு கவனித்து செயல்படுதல் நன்மை பயக்கும். அத்துடன் எச்சரிக்கையுடன் அனைத்து விஷயங்களிலும் கையாளுதல் அவசியம். இன்று சாதாரண விஷயங்களுக்கு கூட கவலை கொள்வீர்கள். நாளின் பிற்பகுதியில் உள்ள நலன்களைப் பற்றி அதிகமாக கவலைப் பட வாய்ப்பு உள்ளது. நீங்கள் மற்றவர்களை பற்றி கவலைப்படுவது தவிர்க்கவும், உங்களின் நலன் மீது அக்கறை கொள்ளவும்.

கடகம்

இன்று, உங்களுக்கு ஒரு மங்களகரமான நாளாக அமைய பெறலாம். உங்களின் பணிகளை நிறைவேற்ற முயற்சிப்பீர்கள். மாலைப்பொழுதை உங்களின் மனதிற்கு நெருக்கமானவர்களுடன் செலவிடுவதன் மூலம் உங்கள் மனதில் பாரம் குறைய வாய்ப்பு உள்ளது.

சிம்மம்

இன்று, நீங்கள் கவனமாகவும் பாதுகாப்பான சூழலில் இருக்க விரும்புவீர்கள். உங்களின் ஆசைகள் நிறைவேற ஏற்ற நாளாக அமைய பெறலாம். உங்கள் வேலையில் உறுதியாகவும், குறிக்கோளுடனும் இருப்பீர்கள். எனினும் நீங்கள் உங்கள் குடும்பம் மற்றும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கு சிறிது நேரம் ஒதுக்க எண்ணுவீர்கள். மேலும் சிறு பயணத்தை மேற்கொள்ளலாம்.

கன்னி

இன்று, உங்களின் கவனம் அதிகரிக்கலாம். உங்கள் வேலைகளை மகிழ்ச்சியாகவும், திறமையாகவும், விரைவாகவும் செய்து முடிக்க முயலலாம். மனதிற்கு நெருக்கமான அவர்களுடன் நேரத்தை செலவிடுவதன் மூலம் வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு செல்ல நல்வழியாக அமையப் பெறலாம்.

துலாம்

இன்று, உங்கள் சாதனைகளை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்வீர்கள். நீங்கள் வேலையில் ஒத்துழைப்புடன் பணியாற்றவும் எண்ணுவீர்கள், இதனால் உங்களின் தொடர்புகள் அதிகரிக்கும். இவைகளை சமாளிப்பதும் மூலம் நன்மை பெறலாம்.

விருச்சிகம்

உங்களின் தனித்தன்மை வாய்ந்த பேச்சு, எழுத்துத் திறமை மற்றும் எதிர்பார்ப்புகள் அதிகரிக்கும். இதனால் மற்றவர்களின் பாராட்டைப் பெறுவீர்கள். நீங்கள் வேண்டியதை அடைவதற்கு அதிக முயற்சிகள் தேவைப்படலாம். உங்கள் வாழ்க்கை துணையுடன் இணக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது.

தனுசு

வியாபார ரீதியான பயணத்தை நீங்கள் எதிர்பார்க்கலாம். பண விஷயத்தில் சில சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளன. நீங்கள் வேலையில் சிறந்து விளங்குவதுடன் உங்கள் சக ஊழியர்களுக்கும் நல்ல வழிகாட்டியாக இருப்பீர்கள். இன்று புத்துணர்ச்சியாகவும், சந்தோஷமான நாளாகவும் அமையப் பெறலாம்.

மகரம்

நீங்கள் வேலைக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதால் கணவன் மனைவிக்கிடையே கசப்புத் தன்மை அதிகரிக்கும். இருந்தபோதிலும், வெளியே செல்வதன் மூலம் மகிழ்ச்சி ஏற்படும். உங்கள் வேலையில் வெற்றிகரமாக இருப்பீர்கள். உங்கள் முதலாளி மற்றும் எதிராளியின் பாராட்டை பெற வாய்ப்புள்ளது.

கும்பம்

நீங்கள் பழைய நண்பர்களுடன் தொடர்பு கொள்ள முயற்சிகள் மேற்கொள்வீர்கள். உங்களது தொடர்பு திறன் மேம்பட்டு அனைவரின் பாரட்டையும் பெறுவீர்கள். இதனால் உங்கள் வாழ்க்கைத் துணை மகிழ்ச்சியாக இருப்பார்கள், பொதுவாக இது சந்தோஷமான நாளாக இருக்கும்.

மீனம்

இன்று, உங்களுக்கு வேலைப்பளு மிகுந்த நாளாக அமைய பெறலாம். உங்களின் போட்டியை எதிர்கொள்ளும் திறனால் வெற்றி அடையப் பெறலாம். உங்களுக்கு பாராட்டு கிடைக்கப்பெறும் நன்னாளாக அமையும்.

இதையும் படிங்க: TN Weather: பொங்கல் தினம் வரை வானிலை இதுதான்!

Last Updated : Jan 10, 2022, 6:16 AM IST

ABOUT THE AUTHOR

...view details