தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

Horoscope 2022: பிப்ரவரி 7 இன்றைய ராசிபலன் - உங்க ராசி எப்படி? - பிப்ரவரி 4 ராசிபலன்

HOROSCOPE: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றையப் பலன்களைக் காண்போம்.

DAILY HOROSCOPE FOR FEBRUARY 7
DAILY HOROSCOPE FOR FEBRUARY 7

By

Published : Feb 7, 2022, 6:51 AM IST

மேஷம்

உங்கள் உண்மையின் மதிப்பு என்ன என்பதை நிரூபித்துக் காட்டக்கூடிய சிறந்த நாளாக இன்று உள்ளது. பணியிடத்தைப் பொறுத்தவரை, சிறந்த திட்டங்கள், புதிய யோசனைகள் என நீங்கள் துடிப்புடன் காணப்படுவீர்கள். சில சமயங்களில் சாதகமான சூழ்நிலைகள் இருக்காது. இருப்பினும் நம்பிக்கையை இழந்துவிடாதீர்கள். உங்கள் வாழ்க்கையில் நுழைந்த எதிர்மறையான விஷயங்களை விரட்ட கற்றுக்கொண்டால், ஏமாற்றம் என்பது உங்கள் நிரந்தர விருந்தாளியாக இருக்காது.

ரிஷபம்

எல்லாம் விதிதான் காரணம் என்று நீங்கள் நொந்துகொள்ளக்கூடிய நாளாக இன்று இருக்கலாம். அடுத்துவரும் நாள்களும் இப்படித்தான் இருக்கும் என்று நீங்கள் கருதலாம். ஆனால், அப்படி நீங்கள் பயப்படும் அளவுக்கு ஒன்றும் இல்லை. பெரிய முடிவுகள் எதுவும் எடுக்க வேண்டாம் என்று உங்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. ஏனெனில், தவறாக முடிவு செய்துவிட்டோமோ என்று நினைக்கத் தோன்றலாம்.

மிதுனம்

இன்று நீங்கள் எந்த வேலையைத் தொடங்கினாலும், அது எந்தவித தாமதமும் இன்றி வெற்றிகரமாக முடியும். இருப்பினும், எந்தவிதமான வேலையை முடிக்க வேண்டியுள்ளது என்பதை உணர்ந்து அதற்கேற்ப செயல்படவும். உங்கள் வேலைக்கு உரிய வெகுமதி அல்லது பலன் விரைவில் கிடைக்கும் என்பதால், நீங்கள் மகிழ்ச்சி அடைவீர்கள்.

கடகம்

இன்று அதிர்ஷ்டக் காற்று உங்கள் பக்கம் வீசும். நிலம், வீடு அல்லது கட்டடம் தொடர்பான வர்த்தகத்தில் நீங்கள் லாபம் அடையும் வாய்ப்பு உள்ளது. அலுவலகத்தில் உங்களுக்கு உயர் அலுவலர்கள், உடன் பணியாற்றுபவர்களிடமிருந்து, முழு ஆதரவு கிடைக்கும். மொத்தத்தில் இன்று லாபகரமான நாளாக இருக்கும்.

சிம்மம்

இன்று, புதிதாக எதையாவது முயற்சி செய்து பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் உங்களிடம் இருக்கும். இன்று முழுவதும் நீங்கள் புத்துணர்ச்சியாக உணர்வீர்கள். உங்களது ஆற்றல், ஆர்வத்தின் காரணமாக, வெற்றி கிட்டும். கிரகங்கள் சாதகமாக இருக்கின்றன; அதனால், உங்களுக்கு ஏற்படும் சவால்களை ஏற்றுக்கொண்டு, அதனை நிறைவேற்ற முயற்சி செய்யலாம்.

கன்னி

நிதி விவகாரங்கள் தொடர்பாக, பெரிய தடை ஒன்று இன்று ஏற்படக்கூடும். உணர்ச்சிகளுக்கு கட்டுப்படாமல், அறிவுப்பூர்வமாகச் சிந்திப்பது நல்லது. உங்கள் தனிப்பட்ட உறவுகள் மீது கூடுதல் கவனம் செலுத்தவும். நீண்ட காலங்களுக்கு உறவுநிலை நல்ல நிலையில் இருக்க, புதிய பணிகள், கடமைகள் மீது கவனம் செலுத்துவதைப் போலவே, உறவிற்கும் முக்கியத்துவம் கொடுக்கவும்.

துலாம்

உங்களது ஆளுமைப் பண்பை மேம்படுத்திக்கொண்டு, பணியில் உங்கள் திறமையை நிரூபிப்பதற்கான சரியான நேரம் இதுவாகும். இன்று, நீங்கள் புதிய ஆடைகளை வாங்கும் வாய்ப்பு உள்ளது. உங்களுக்கு நெருக்கமாக உள்ளவர்கள் மீது நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். இன்று நீங்கள், உங்கள் கனவு உலகில் நேரத்தைச் செலவிடுவீர்கள்.

விருச்சிகம்

உங்களுக்கு இன்று எரிச்சலும் கோபமும் அதிகம் ஏற்படக் கூடும். அது வரக்கூடிய அதிர்ஷ்டத்தைப் பாதிக்கும். சச்சரவுகளிலிருந்து விலகியிருப்பது நல்லது. ஆனால், மாலையில் நிலைமையில் மாற்றம் ஏற்பட்டு, நீங்கள் அமைதியாகவும் நிம்மதியாகவும் உணரும் வாய்ப்பு உள்ளது.

தனுசு

இன்று வலிகளும் இல்லை, ஆதாயங்களும் இல்லை. எனவே, உங்கள் பணியில் கவனம் செலுத்தி, கடினமாக உழைக்கவும். அதற்கான பலன்கள் சிறந்ததாக இருக்கும். உங்கள் நண்பர்கள், குடும்பத்தினருடன் ஆனந்தமாக நேரம் கழிக்கும் வாய்ப்பு உள்ளது. பொதுவாக இன்று வேடிக்கை விளையாட்டுகள் நிறைந்த நாளாக இருக்கும்.

மகரம்

நீங்கள் நிறைவேற்ற வேண்டிய பணிகள், திட்டங்கள் அதிகம் இருக்கும். வேலைகளை எவ்வளவு பெரிய விரைவாக முடிக்க முடியுமோ அவ்வளவு விரைவாக நிறைவுசெய்து, புத்துணர்ச்சி பெற அமைதியாகச் சிறிது நேரம் ஓய்வெடுக்கவும். பலதரப்பட்ட மக்களுடன் தொடர்புகொள்வது உங்களது அறிவை விரிவாக்கும். தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை, நீங்கள் உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப சுதந்திரமாகச் செயல்படுவீர்கள்.

கும்பம்

நீங்கள் அதிக பொறுமையுடன், நடைமுறைக்கு ஏற்ற வகையில் செயல்படுவதால், உங்களது பிரச்சினையை நீங்கள் எளிதாகத் தீர்த்துவிடுவீர்கள். என்றாலும், உங்களைச் சுற்றியுள்ள நபர்கள், உங்களது இந்தத் தன்மை காரணமாக, பொறுப்புகளை எடுத்துக்கொள்ளாமல் நழுவிவிடுவார்கள். இதனால், வேலைப்பளு அதிகரித்து உங்களுக்கு ஏமாற்றம் ஏற்படக்கூடும்.

மீனம்

இன்று உங்களது பொறுமை, செயல்திறன்கள் சோதித்துப் பார்க்கப்படும். நீங்கள் எடுத்துக்கொள்ளும் ஒவ்வொரு பணியிலும், நீங்கள் சோதனையைச் சந்திப்பீர்கள். எளிதான பணி, பொதுவான இலக்குகளை நிறைவேற்றுவதுகூட உங்களுக்கு கடினமாக தோன்றக்கூடும். கிரக நிலைகள் சாதகமாக இல்லாத காரணத்தினால் அதனை நிறைவேற்ற நீங்கள் கூடுதல் முயற்சி மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்படலாம்.

இதையும் படிங்க: நீங்கா நினைவுகளுடன் விடைபெற்றார் இசைக்குயில் லதா மங்கேஷ்கர்!

ABOUT THE AUTHOR

...view details