தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பிப்ரவரி 25 இன்றைய ராசிபலன் - உங்க ராசி எப்படி? - DAILY HOROSCOPE FOR FEBRUARY 25

HOROSCOPE: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசியினருக்கு இன்றைய ராசி பலன்களை காண்போம்.

DAILY HOROSCOPE FOR FEBRUARY 25, பிப்ரவரி 25 இன்றைய ராசிபலன்
பிப்ரவரி 25 இன்றைய ராசிபலன்

By

Published : Feb 25, 2022, 6:23 AM IST

மேஷம்

இன்று உங்களுக்கு ஆன்மீக உணர்வு ஏற்படும். இதன் காரணமாக, உறவுகள் மற்றும் அண்டை வீட்டில் உள்ளவர்கள் உடனான உறவு பாதிக்கப்பட்டது உட்பட, கடந்த காலத்தில் ஏற்பட்ட பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பீர்கள். இது வருங்காலத்தில் நீங்கள் வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கான அஸ்திவாரமாக இருக்கும்.

ரிஷபம்

ஒரு சாதாரண நாள், ஒரு அற்புதமான நாளாக மாறக்கூடிய வாய்ப்புகள் அதிகம் உள்ளது. எனினும் மாலையில் பதற்றம் மற்றும் மன அழுத்தம் இருக்கலாம். அதுமட்டுமல்லாது, மாலையில் உங்கள் வாழ்க்கைத் துணையுடன் நீங்கள் நெருக்கமாக பொழுதை கழிக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது.

மிதுனம்

இன்று உங்கள் உணவு பழக்கவழக்கத்தின் மீது தனி கவனம் செலுத்துவீர்கள். புதிய வேலைக்கான நேர்காணல் தேர்வில் நீங்கள் பங்கு பெறும் வாய்ப்பு உள்ளது. பணியிடத்தில் மூத்தவர்கள் மற்றும் மேல் அதிகாரிகளிடம் இருந்து ஊக்கம் பெறுவீர்கள். கிரக நிலைகள் சாதகமாக இல்லாத காரணத்தினால் சச்சரவுகளில் இருந்து விலகி இருக்கவும். இதனால் உணர்வு ரீதியான பாதிப்புகள் ஏற்படக்கூடும்.

கடகம்

இன்றைய தினத்தின் முதல் பகுதியில், பதற்றமான மன நிலை இருக்கும். பணியிடத்திலும் மிகவும் பதற்றமடைந்து கோபத்தை வெளிப்படுத்துவீர்கள். உங்களது ரத்த கொதிப்பை சோதித்துக் கொள்வது நல்லது. தியான பயிற்சியை கடைபிடிக்கவும். அலுவலகத்தில் நிதானத்தை இழக்க வேண்டாம். ஏனென்றால் இதன் பாதிப்புகள் மிகவும் மோசமாக இருக்கும். நீங்கள் மலை ஏறுவது போன்ற சவாலான நடவடிக்கைகளில் ஈடுபடலாம்.

இன்றைய தினத்தில், உங்களுக்குள் மறைந்திருக்கும் கலை உணர்வு வெளிப்படும். புகழ்பெற்ற கலைஞர்கள் போல் இல்லை என்றாலும், உங்களது கலைநயமிக்க பணிகள் தனித்துவம் உள்ளதாக இருக்கும். மதிய நேரத்தில், உங்கள் பேச்சாற்றல் மூலம் நீங்கள் அனைவரையும் கவரும் விதத்தில் செயல்படுவீர்கள். பணியில் இருக்கும் போது, நீங்கள் வெளிப்படுத்தும் ஆற்றலும் உற்சாகமும், அனைவரையும் ஊக்குவிக்கும் வகையில் இருக்கும். எனினும் சொல்ல குறை கூறுவார்கள். அது கவலைப்படாமல் உங்கள் வேலையை தொடர்ந்து செய்யவும்.

கன்னி

இன்றைய நாள் சோர்வான உணர்வுடன் தொடங்கினாலும், உற்சாக உணர்வுடன் முடிவடையும். மாலையில் சிறு தடைகள் ஏற்பட்டாலும், நீங்கள் மனநிம்மதியுடன் இருப்பீர்கள். இந்த நாளின் முடிவில் அனைத்து மன அழுத்தங்களும் நீங்கி, மனதிற்கு பிடித்தவர்கள் உடன் மகிழ்ச்சியாக நேரத்தை கழிப்பீர்கள்.

துலாம்

இன்று முக்கியத்துவம் இல்லாத விஷயங்கள் குறித்து நீங்கள் கவலை கொள்வீர்கள். எப்படி இருந்தாலும் மற்றவர்களுடன் கலந்து ஆலோசனை செய்து, செயல்பட்டால், அனைத்தும் சுமுகமாக நிறைவடையும். வர்த்தகத் துறையை பொருத்தவரை, பல்வேறு வழிகளில் பணம் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.

விருச்சிகம்

ஒரு அற்புதமான நாள் உங்களுக்காக காத்திருக்கிறது. நாளின் பெரும்பாலான நேரம் வழக்கமான பணிகளையே மேற்கொள்வீர்கள். போட்டி அதிகம் இருக்கும். எனினும் நீங்கள் மாலையில் உங்களை அலங்கரித்துக் கொண்டு சமூக நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள்.

தனுசு

இன்றைய தினத்தில், உங்கள் புன்னகையின் மூலம் உங்களை கடந்து போகும் அனைவரின் மனதையும் நீங்கள் கவரும் வண்ணம் இருப்பீர்கள். பணியிடத்தில், உங்கள் அறிவார்ந்த ஆலோசனைகளின் மூலம் உடன் பணிபுரிபவர்கள் பலன் அடைவார்கள். மாலை நேரத்தில், உங்கள் காதல் துணையுடன் நேரம் செலவழிக்கும் வாய்ப்பு உள்ளதால், மனம் முழுவதும் மகிழ்ச்சி நிறைந்திருக்கும்.

மகரம்

ஒரு விறுவிறுப்பான நாளை எதிர்கொள்ள தயாராக இருங்கள். எதிர்பாராத நிகழ்வுகள் மூலம் சந்தோஷம் ஏற்படும். திடீரென்று நீங்கள், மிகவும் உற்சாகமாக இருப்பதைப் போல் உணர்வீர்கள். பணியிடத்தில் பல கேள்விகளுக்கான விடைகளை நீங்கள் தேட முயல்வதில் நேரம் அதிகம் செலவாகும். புதிய திட்டம் அல்லது புதிய வர்த்தகம் ஏதேனும் தொடங்குவதற்கு நிதி உதவி கிடைக்கும் வாய்ப்பும் அதிகம் உள்ளது. பொதுவாக இன்று எதிர்பார்ப்புகளுக்கு மாறாக மிகவும் சிறந்த நாளாக இருக்கும்.

கும்பம்

இன்றைய தினம் ஒரு அற்புதமான நாளாக இருக்கும். இது உங்களது பணிக்கு மட்டுமே பொருந்தும். அதற்கான பலன்களுக்கு பொருந்தாது. பெரிய பாதிப்புகள் ஏதேனும் ஏற்படாது என்பதால், அதிகம் கவலை கொள்ள வேண்டிய அவசியமில்லை. குழந்தைகள் அல்லது உங்களது வாழ்க்கைத் துணை இன்று மாலை உங்களிடம் கோபம் கொள்ளலாம். ஆனால் நீங்கள் அதைப்பற்றி கவலைப்படாமல் நிம்மதியாக இருக்கவும்.

மீனம்

இன்றைய தினம் ஒரு ஆக்கபூர்வமான நாளாக இருக்கும். பழைய நண்பர்களை நீங்கள் சந்திக்கும் வாய்ப்பு உள்ளது. பழைய நண்பர்கள் அல்லது பழைய காதலரை சந்திக்கும் வாய்ப்பு உள்ளது. சமூக நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு, அனைவரையும் கவரும் வண்ணம் செயல்படுவீர்கள். இந்த வாய்ப்பை நன்றாக பயன்படுத்திக் கொள்ளவும்.

இதையும் படிங்க:New Year 2022 Horoscope: இந்த வருடம் உங்களுக்கு எப்படி இருக்கும்? இதோ!

ABOUT THE AUTHOR

...view details