தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

Rasi Palan: இன்றைய ராசிபலன் - டிசம்பர் 23 - டிசம்பர் 23 இன்றைய ராசிபலன்

மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய பலன்களை காண்போம்.

இன்றைய ராசிபலன் - டிசம்பர் 23
இன்றைய ராசிபலன் - டிசம்பர் 23

By

Published : Dec 23, 2021, 6:18 AM IST

மேஷம்

உங்களது உடல் நலன் மீது நீங்கள் கவனம் செலுத்த வேண்டிய நேரம் இது. தற்போது நீங்கள் உணவு பழக்க வழக்கம் மற்றும் உடற்பயிற்சியின் முக்கியத்துவத்தை புரிந்து கொண்டுள்ளீர்கள். எனினும், இன்று நீங்கள் புதிதாக ஏதாவது ஒரு உணவை சுவைத்துப் பார்க்க விருப்பப்படலாம். நீங்கள் பல நாட்களாக பார்க்காத நண்பர்களுடன் வெளியில் செல்லலாம்.

ரிஷபம்

இன்று நெருங்கிய நண்பர்கள், குறிப்பாக உங்கள் எதிர் பாலினத்தை சேர்ந்த நண்பர்கள் பற்றி அதிகம் சிந்திப்பீர்கள். திடீரென்று நீங்கள் காதல் வயப்பட்டு உள்ளதை உணர்வீர்கள். காதல் உறவை ஏற்படுத்திக் கொள்ளும் வாய்ப்பு கிடைத்தால், அச்சம் ஏதுமின்றி அதைப் பயன்படுத்திக் கொள்ளவும். விரைவில் உங்களுக்கு திருமண உறவு கைகூடும்.

மிதுனம்

இன்றைய தினத்தைப் பொறுத்தவரை, வீட்டில் சச்சரவுகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. உங்கள் குடும்ப உறுப்பினர்களின் கோரிக்கை அதிகரிக்கும். அதை சமாளிக்க முடியாமல் நீங்கள் திணறும் வாய்ப்பு உள்ளது. இதனால் உங்கள் மனநிலை பாதிக்கப்படலாம். அவர்களது கோரிக்கையை நிறைவேற்ற அதிக பணம் செலவழிக்க வேண்டிய நிலை ஏற்படும். நீங்கள் செலவுகளை கட்டுப்படுத்தி, சேமிக்க வேண்டும்.

கடகம்

உங்கள் செயல்திறன் காரணமாக, நிதி நிலைமையை மேம்படுத்திக் கொள்ளலாம். தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் தொழில் துறை ஆகிய இரண்டிலும் நீங்கள் வெற்றி பெறுவீர்கள். உங்களுக்கு கூடுதல் பொறுப்புகளும் பணிகளும் வழங்கப்படும். மாலையில் நீங்கள் விருப்பப்படி நேரத்தை செலவிடுவீர்கள்.

சிம்மம்

இன்று, பங்குச்சந்தையின் மூலம் நிதி வரவு இருக்கக்கூடும். நீங்கள் முதலீட்டாளர் என்றால், உங்கள் முதலீடுகளுக்கு நல்ல லாபம் இருக்கும். நீண்ட காலம் தீர்க்கப்படாமல் இருந்த கடன்களை தீர்த்து விடுவீர்கள். பொழுதுபோக்கிற்காக பணம் செலவழிக்கும் வாய்ப்பும் உள்ளது.

கன்னி

இன்று, குடும்ப உறவுகள் உங்கள் மீது ஆதிக்கம் செலுத்தும். அவர்கள் உங்களையும் உங்கள் எண்ணங்களையும் கட்டுப்படுத்துவார்கள். வர்த்தகத் துறையில் சாதகமான நிலை இருக்கும். மாலையில் நீங்கள் நிம்மதியாக நேரத்தை கழிப்பீர்கள். நீங்கள் கோயிலுக்கு செல்ல பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு உள்ளது.

துலாம்

இன்று, உங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் சந்தோஷமாக நேரத்தை செலவழிப்பீர்கள். உங்கள் மனதிற்கு பிடித்தவருடன், மகிழ்ச்சியுடன் நேரத்தை செலவழிப்பீர்கள். உங்கள் மனதில் என்ன இருக்கிறது என்பதை, உங்களது வாழ்க்கை துணை புரிந்து கொள்வார். ஒருவருடன் ஒருவர் இணக்கமாக இருந்து, சந்தோஷமாக நேரத்தை செலவிடுவீர்கள்.

விருச்சிகம்

இன்றைய தினம் சிறிது மந்தமான நாளாக இருக்கும். பணியிடத்தில் வேலை பளு அதிகரித்ததன் காரணமாக, சோர்வாக உணர்வீர்கள். சில சமயங்களில் எரிச்சல் உணர்வு ஏற்படலாம். மனநிலையை மாற்றிக் கொள்ள, நீங்கள் உங்கள் காதல் உறவுடன், காபி அருந்துவதற்காக, நேரம் செலவழிக்க கூடும்.

தனுசு

சோதனைக் காலங்கள் எப்போதுமே நீடிப்பதில்லை, உறுதியான மனிதர்கள் நிலைத்து நிற்பார்கள். இதனை மனதில் கொண்டு வாழ்க்கையில் முன்னேறிச் செல்லவும். நேர்மறையான அணுகுமுறையின் மூலம் வாழ்க்கையை எளிமையாக ஆகவும். தேவைப்பட்டால் மனம்திறந்து பேசுங்கள். தேவையில்லாத நெருக்குதலுக்கு அடிபணிய வேண்டாம்.

மகரம்

தங்களது வாழ்க்கையில், உணர்வுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் முட்டாள்களை பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். அவர்களில் ஒருவராக நீங்கள் இருந்துவிட வேண்டாம். உங்களது உணர்வுகளை கட்டுப்படுத்திக்கொண்டு செயல்பட்டால், பாதிப்பு ஏற்படாமல் இருக்கும். சுருக்கமாக கூறுவதென்றால், உங்களது உணர்வுகள் வெற்றிக்கு தடையாக இருக்கும். அமைதியாக பொறுமையுடன் செயல்பட்டு, நேர்மறையான எண்ணம் இருந்தால், பிரச்சனைகளுக்கு தீர்வு காணலாம்.

கும்பம்

இன்றைய தினத்தில், நீங்கள் உணர்வுகளை கட்டுப்படுத்தி நடுநிலையுடன் செயல்படுவீர்கள். உங்களது பணியில் உங்களுக்கு சந்தோஷம் கிடைக்கும். தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் தொழில் ரீதியான வாழ்க்கை இரண்டிற்கும், முக்கியத்துவம் கொடுத்து நடுநிலையுடன் செயல்படுவீர்கள். நிதி நிலைமை சாதாரணமாக இருக்கும். ஆனால் சில விஷயங்கள் குறித்த எண்ணம் உங்கள் மனதில் ஓடிக்கொண்டிருக்கும்.

மீனம்

நிதி நிலைமையை பொருத்தவரை, இன்று ஒரு லாபகரமான நாளாக இருக்கும். வர்த்தகம் மற்றும் வெளிநாடுகளில் செய்யப்பட்ட முதலீடுகளில் இருந்து பணவரவு அதிகம் இருக்கும். உங்களது தொடர்பு திறன் காரணமாக, நல்ல பரிவர்த்தனைகள் நிறைவேற்றப்பட்டு, எதிர்பாராத வகையிலான ஆதாயங்கள் கிடைக்கும். உங்களுக்கு உள்ள தொடர்பை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளவும்.

ABOUT THE AUTHOR

...view details