தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

Rasi Palan: இன்றைய ராசிபலன் - டிசம்பர் 22 - இன்றைய ராசிபலன் டிசம்பர் 22 ராசிபலன்

மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றையப் பலன்களைக் காண்போம்.

இன்றைய ராசிபலன்
இன்றைய ராசிபலன்

By

Published : Dec 22, 2021, 6:09 AM IST

மேஷம்

இன்றைய நாளைப் பொறுத்தவரை, நீங்கள் தனிமைப்படுத்தப்பட்டதைபோல் உணர்வீர்கள். உறவுகளைப் பலப்படுத்த நீங்கள், முயற்சிகள் பலவற்றை மேற்கொள்வீர்கள். வருங்காலப் பாதுகாப்பிற்கான அம்சங்கள் என்ன என்பதை ஆராய்வீர்கள். அதனால் நீண்ட காலத்திற்கு வலுவாக இருக்கக்கூடிய உறவினை ஏற்படுத்துவீர்கள்.

ரிஷபம்

உங்களுக்கு சிறிது கடினமான, பிரச்சினைகள் நிறைந்த நாளாக இன்று இருக்கும். பின்னடைவுகள், சவால்கள் ஆகியவற்றை எதிர்கொள்ள தயாராக இருக்கவும். எவ்வளவு பெரிய பிரச்சினையாக இருந்தாலும், அதை எதிர்த்துப் போராடும் உங்களது உள்ள வலிமை காரணமாக, அதற்கான தீர்வு கிடைக்கும். எச்சரிக்கையுடன் கவனமாகச் செயல்படவும். நன்றாகச் சிந்தித்து, பொறுமையாகச் செயல்படவும். தடைகள் உங்களை ஒன்றும் செய்யாது.

மிதுனம்

கடந்த கால நினைவுகள், மலரும் நினைவுகளாக உங்கள் மனத்தில் தோன்றும். அதனால் நீங்கள் குதூகலமாக இருப்பீர்கள். அறிவார்ந்த தேடல்களில் ஆர்வம் இருக்கும். உங்களது கடந்த காலம், உங்களது எதிர்காலம், நிகழ்காலத்தைப் பாதிக்க ஒருபோதும் அனுமதிக்க வேண்டாம்.

கடகம்

இன்று, உங்களுக்கு வேலைசெய்யும் ஆர்வம் அதிகம் இருக்கும். ஏதேனும் ஒரு வேலை செய்ய வேண்டும் என்று நீங்கள் சுறுசுறுப்பாக இருப்பீர்கள். இன்றை தினம், தோட்டப்பணி, சமையல், வீட்டிற்கு விருந்தினரை அழைத்து நேரம் செலவிடுதல் ஆகியவற்றிற்குச் சிறந்த நாளாகும். கிரக நிலைகள் உங்களுக்குச் சாதகமாக இருப்பதால், உங்கள் காதல் உறவிற்காக நேரம், பணம் ஆகியவற்றைச் செலவழித்து மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.

சிம்மம்

நீங்கள் இன்று அனைத்துத் தரப்புகளிலிருந்தும் புகழ்ச்சியைப் பெறுவீர்கள். இன்று நடக்கும் அனைத்து விஷயங்களும், உங்களுக்குச் சந்தோஷத்தைத் தரும் என்று கூறிவிட முடியாது. உங்களைப் பாதித்துவந்த கேள்விகளுக்கு விடை காண்பீர்கள். தனிப்பட்ட இழப்பின் காரணமாக, உணர்வுப்பூர்வமாகப் பாதிக்கப்படுவீர்கள்.

கன்னி

இன்று உங்கள் தனிப்பட்ட வாழ்க்கை மீது நீங்கள் அதிக கவனம் செலுத்துவீர்கள். அது தொடர்பான விஷயங்கள் குறித்த எண்ணங்கள் உங்கள் மனத்தில் ஏற்படும். வர்த்தகத்தில் இருப்பவர்கள் கவனமாகச் செயல்பட வேண்டும். மாலையில் சிறிது, ஓய்வெடுக்க நேரம் கிடைக்கும். கோயிலுக்குச் செல்லும் வாய்ப்பும் உள்ளது.

துலாம்

இன்று நீங்கள், பலவிதமான மனநிலைகளால் பாதிக்கப்படுவீர்கள். மாலை வரை, மனக் குழப்பங்கள் இருக்கும். இன்று மாலை உங்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது. மிகச் சிறந்த நிகழ்வு ஒன்று ஏற்படக்கூடும் என்றாலும், பாதிப்பு ஏதேனும் ஏற்பட்டால், அதை எதிர்கொள்ளும் மனநிலையுடன் இருக்கவும்.

விருச்சிகம்

உங்களது செயல்திறன், உங்கள் மீது மதிப்பை ஏற்படுத்தும். இன்று உங்கள் உணர்வுகளை நீங்கள் அதிகம் வெளிப்படுத்துவீர்கள். தொழில் துறையைப் பொறுத்தவரை, புதிய திட்டங்களை உற்சாகத்துடன் தொடங்குவீர்கள். எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது.

தனுசு

உங்களது திறமைக்கான அங்கீகாரம், இப்போது கிடைக்கவில்லை என்றாலும், பின்னர் கிடைக்கும். அதனால் பொறுமையைக் கடைப்பிடித்து காத்திருப்பது நல்லது. ஏமாற்ற உணர்வு ஏற்பட்டால் அது உங்கள் செயல்திறனைப் பாதிக்கும். அதனால் அமைதியாகப் பொறுமையுடன் இருக்கவும்.

மகரம்

உங்களது வெற்றி, உங்களுக்கு ஒரு புத்துணர்வைக் கொடுக்கும். இதன்மூலம் எந்தவித கடினமான நிலைமையினையும் சமாளிக்கும் திறனைப் பெறுவீர்கள். வெற்றிபெற அதிக முயற்சிகளை மேற்கொள்ள வேண்டிய தேவை உங்களுக்கு இருக்காது. எனினும், உங்கள் சாதனைக்கு கடின உழைப்பு முக்கியமான காரணமாக இருந்துவந்துள்ளது. நண்பர்கள் உங்கள் செயல்திறனையும், எதையும் சாதிக்கும் மனப்பான்மையையும் பாராட்டுவார்கள்.

கும்பம்

இன்றைய நாளைப் பொறுத்தவரை, உங்களது செயல்திறன், தீவிரமான நடவடிக்கைகள் உங்கள் போட்டியாளரை ஆச்சரியத்தில் ஆழ்த்தும். நீங்கள் ஒரு எடுத்துக்காட்டாகத் திகழ்வீர்கள், அதனால் அனைத்துத் தடைகளும் நீங்கும். உங்கள் வெற்றி, கருணை, கடின உழைப்பின் காரணமாக அனைவரது மனத்தையும் வெல்வீர்கள்.

மீனம்

இன்று நிதி ஆதாயம் அதிகம் இருக்கும். வர்த்தகம், பல்வேறு முதலீடுகளிலிருந்து பணவரவு இருக்கும். சிறந்த வகையிலான பொதுத் தொடர்பு காரணமாக ஆதாயம் இருக்கும். எதிர்பாராத வகையில், முக்கியப் பரிவர்த்தனைகளை மேற்கொள்வீர்கள்.

ABOUT THE AUTHOR

...view details