தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

Rasi Palan: இன்றைய ராசிபலன் - டிசம்பர் 15 - today Horoscope December 15

மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய பலன்களை காண்போம்.

இன்றைய ராசிபலன்
இன்றைய ராசிபலன்

By

Published : Dec 15, 2021, 6:20 AM IST

மேஷம்

இன்று நீங்கள், சில விஷயங்களை அனுசரித்து நடக்க வேண்டும். முக்கியமாக, உறவினர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும். பொதுவாக நீங்கள், உறுதியாக இருப்பவர் ஆக இருக்கலாம். ஆனால் இன்று நீங்கள் அவ்வாறு நடந்து கொள்வது நல்லதல்ல. இன்று உங்களது மனதிற்கு பிடித்தவர்கள் உடன் இணக்கமாக நடந்து கொள்ளுங்கள். துணையிடம் நீங்கள் உங்கள் விருப்பத்தை தெரிவிக்கலாம்.

ரிஷபம்

இன்று நீங்கள், பொருட்களை வாங்குவதற்கு அதிக நேரம் செலவழிப்பீர்கள். சந்தைகள், மால்கள், பலவகை ஸ்டோர்கள் ஆகியவற்றுக்கு சென்று பொருட்களை வாங்குவீர்கள். நீங்கள் வாங்கும் பொருட்களுக்கு, பேரம் பேசி விலையைக் குறைத்து வாங்கி மகிழ்ச்சி அடைவீர்கள். இன்றைய நாளின் இறுதியில், நீங்கள் அதிக பொருட்களை வாங்கி இருப்பீர்கள்.

மிதுனம்

உங்கள் இலக்குகளை எளிதாக நிறைவேற்றுவீர்கள், அதில் அதிக சிரமம் இருக்காது. தாமதம் மற்றும் தடைகள் ஏதுமின்றி, உங்கள் பணியை நிறைவேற்றுவீர்கள். பணியை தொடங்குவதற்கு முன், அது குறித்து நன்றாக புரிந்து கொண்டு செயல்பட்டால் மட்டுமே சாத்தியமாகும். முயற்சி மூலம் கிடைத்த பலன்கள் மூலம் நீங்கள் திருப்தி அடைந்து சந்தோஷமாக இருப்பீர்கள்.

கடகம்

நீங்கள் புதிய நண்பர்களை ஏற்படுத்திக் கொள்வீர்கள். அவர்களுடன் இனிமையாக பொழுதைக் கழிப்பீர்கள். ஆனால் உங்கள் மனதில் கவலை அல்லது பதற்றம் இருக்கும். எனினும், நீங்கள் நண்பர்களுடன், பொழுதைக் கழித்து, மாலையில் கவலையில் இருந்து விடுபடுவீர்கள்.

சிம்மம்

நீங்கள் உங்கள் வாழ்க்கையில், இத்தனை நாட்களாக சந்திக்க காத்திருந்த ஒரு நபரை, சந்திக்கும் வாய்ப்பு உங்களுக்குக் கிடைக்கக் கூடும். உங்கள் காதல் துணைக்கு, நீங்கள் அழகான பரிசு ஒன்றையும் அளிக்கும் வாய்ப்பு உள்ளது. உங்களுக்கு கலையில் ஆர்வம் இருக்கும். அந்த ஆர்வத்தை நீங்கள் வெளிப்படுத்தி, மற்றவர்களின் பாராட்டைப் பெறுவீர்கள்.

கன்னி

இன்று, செலவுகள் கட்டுப்படுத்த முடியாத வகையில் அதிகரிக்கக்கூடும். அதிக பண விரயம் ஏற்படலாம். எனினும், விஷயங்கள் சாதகமாக நடக்கும் வாய்ப்பு உள்ளது. அதனை நீங்கள் முழுமையாக பயன்படுத்திக் கொண்டு, தனிப்பட்ட விஷயங்கள் மற்றும் தொழில் ரீதியாகவும் மேம்படுவீர்கள்.

துலாம்

இன்று, உங்கள் காதல் துணையுடன் நெருக்கமாக பழகுவதற்கான சரியான நாளாகும். அதிக வேலை காரணமாக, நீங்கள் நெடுநாட்களாக, ஒன்றாக நேரத்தை கழிக்க வாய்ப்பு இல்லாமல் இருந்தது. உங்கள் காதல் துணையுடன், மாலையை இனிமையாக கழிப்பீர்கள். நீங்கள் புத்துணர்ச்சியாகவும் உணர்வீர்கள். இன்றைய தினத்தை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளவும்.

விருச்சிகம்

இன்று நாள் முழுவதும் எல்லா நேரமும் நீங்கள் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தேவையில்லாத குற்றச்சாட்டுக்கு ஆளாகி, நீங்கள் பலியாடாக நிற்க வேண்டிய நிலை உருவாகலாம். இப்படி சங்கடமான நிலையில் இருந்து தப்பிக்க, மிகுந்த கவனத்துடன் செயல்படவும். இருப்பினும், உங்கள் வழியில் எது வந்தாலும், அதன் மூலம் நீங்கள் பாடம் கற்றுக்கொள்வீர்கள்.

தனுசு

இன்று நீங்கள் முழுமையான மன எழுச்சியுடன் காணப்படுவீர்கள். நீங்கள் விரும்பும் ஒன்றை அடைவீர்கள். ஏதேனும் நிகழ்ச்சிகளில் மைய நாயகனாக உங்களை ஆக்கினால் ஆச்சரியப்படாதீர்கள். இவை எல்லாவற்றுக்கும் மேலாக, பயணத்துக்கான ஆயத்தங்களை செய்து தயாராக இருங்கள். உங்கள் நட்சத்திரப்படி, நீங்கள் வியாபார நிமித்தம் வெகுதூரம் பயணம் செய்ய நேரிடலாம்.

மகரம்

உங்கள் நம்பிக்கை, நீங்கள் செல்ல வேண்டிய இடத்துக்கு உங்களை கொண்டு சேர்க்கும். உங்கள் எதிர்மறையான செயல்பாடுகள், உங்கள் இலக்கை எட்ட உதவும். அக்கறை இல்லாதவர் போல் இருக்க மாட்டீர்கள். மிகவும் கவனத்தோடு நீங்கள் எடுக்கும் முடிவுகள் மற்றும் சாதனைகளில் இருந்து நீங்கள் அறிந்த விஷயங்கள் ஆகியவை வெற்றிக்கு உதவும்.

கும்பம்

இன்று, கொண்டாட்டங்களில் பங்கேற்க, வாய்ப்பு ஏற்படும். அது நண்பரின் திருமணம் தொடர்பான தகவலாக இருக்கலாம். புதிய கார் வாங்கும் வாய்ப்பு உள்ளது. இன்று உங்கள் வாழ்க்கையை நினைத்து நீங்கள் சந்தோஷம் கொள்ளும் நாளாகவும் இருக்கலாம்! இது தவிர, இன்றைய நாள் முழுவதும் உங்களுக்கு சுமுகமாகவே இருக்கும். நீங்கள் வர்த்தகம் அல்லது தொழில் துறையில் இருப்பவர் என்றால், உங்கள் இலக்கை நோக்கி நீங்கள் ஒரு அடி முன்னேறுவீர்கள்.

மீனம்

இன்றைய நாள், உங்களுக்கு குழப்பம் நிறைந்த நாளாகவும் நிச்சயமற்ற தன்மை உள்ள நாளாகவும் இருக்கும். இதனால் உங்கள் முடிவெடுக்கும் திறன் பாதிக்கப்பட்டு, பிரச்சினைகளுக்கான தீர்வுகளை காண்பதில் சிரமம் ஏற்படும். சச்சரவில் இருந்து விலகி இருக்கவும். முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்த்து, உங்களது தினசரி பணியின் மீது மட்டும் கவனம் செலுத்தவும்.

ABOUT THE AUTHOR

...view details