மேஷம்
நீங்கள் இன்று ஒரு சவாலான அல்லது ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய ஒரு சூழ்நிலையில் சிக்கிக் கொள்ளலாம். ஆக்கபூர்வமாக அல்லாத ஒரு விஷயத்திற்கு ஆதரவாக நீங்கள் செயல்பட நிர்ப்பந்திக்கப்பட்டதைப் போல் உணரக்கூடும். உங்கள் விருப்பப்படி எதுவும் நடக்கும் வாய்ப்பு இல்லை. சற்று பொறுமையாக இருந்து, மன அழுத்தத்திலிருந்து விடுபடவும்.
ரிஷிபம்
இன்று உங்கள் எண்ண ஓட்டம் மிகவும் அதிகமாக இருக்கும். தனக்கு மட்டுமே சொந்தம் என்ற உங்கள் நினைப்பின் காரணமாக, சர்ச்சைகள் ஏற்படலாம். உங்கள் கோபத்தை கட்டுப்படுத்தினால் தேவையில்லாத சச்சரவுகளை தவிர்க்கும் வாய்ப்பு உண்டு. உங்களை நீங்களே ஆராய்ந்து கொண்டு செயல்பட்டால், பிரச்சனைகளுக்கான தீர்வினை காணமுடியும்.
மிதுனம்
இன்று நீங்கள் சிறிது வருத்தமாக காணப்படுவீர்கள். உங்களுக்கும் உங்களது காதல் துணைக்கும் இடையான பிரிவு இதற்கு காரணமாக இருக்கலாம். உங்களது உணர்வை கட்டுபடுத்த முடியாமல், கோபத்துடன் விவாதத்தில் ஈடுபடும் வாய்ப்பு உள்ளது. நிலைமையில் சற்று முன்னேற்றம் ஏற்பட, உங்கள் உணர்ச்சிகளை கட்டுப்படுத்துவது நல்லது.
கடகம்
இன்று, உங்களுக்கு ஒரு அற்புதமான நாளாக இருக்கும். உங்களுக்கு சிறந்த எண்ணங்கள் தோன்றும். உங்கள் புகழும் அதிகரிக்கும். மக்கள் உங்கள் முயற்சிகளை போற்றுவார்கள். ( உங்கள் முயற்சிகள் போற்றப்படும்). கடவுளின் ஆசி காரணமாக இது ஒரு ஆக்கப்பூர்வமான மற்றும் வெற்றிகரமான நாளாக இருக்கும்.
சிம்மம்
இன்றைய தினத்தில், நீங்கள் உங்கள் பணியிடத்தில் முன்னேற்றத்தை காண்பதற்காக கடுமையாக உழைப்பீர்கள். தீர்வுகளை காண்பதில் நீங்கள் மிக வேகமாக செயல்படுவீர்கள். உங்களுக்குக் கீழ் வேலை புரிபவர்களும் மந்தமாக செயல்படுவதை நீங்கள் அனுமதிக்க மாட்டீர்கள். அச்ச உணர்வுகள் உங்கள் வாழ்க்கையின் சந்தோஷத்தை பாதிக்க நீங்கள் அனுமதிக்க மாட்டீர்கள். பணியில் உங்கள் மூத்தவர்கள் உங்கள் பணியில் திருப்தி அடைவார்கள்.
கன்னி
உங்கள் வர்த்தக திறமைகளை சோதிக்கும் வகையிலான அனைத்து சவால்களையும் நம்பிக்கையுடன் சந்திக்கலாம். குறிப்பாக முதலீடுகள் மற்றும் நிதி தொடர்பான விஷயங்கள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். நெடுநாட்களாக தீர்க்கப்படாமல் இருக்கும் பிரச்னைகளை தீர்க்க, உங்களுக்கு புதுமையான வழிகள் தோன்றும். இது தீர்வினை கொடுக்கும்.