தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஒன்றரை லட்சத்தை கடந்தது தொற்று பாதிப்பு; 327 பேர் உயிரிழப்பு

நாடு முழுவதும் நேற்று (ஜன. 8) ஒரே நாளில் ஒரு லட்சத்து 59 ஆயிரத்து 632 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், 327 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், ஒமைக்ரான் தொற்று 3,623 பேரிடம் கண்டறியப்பட்டுள்ளது.

Daily Corona cases breach one and half lakh mark in India
Daily Corona cases breach one and half lakh mark in India

By

Published : Jan 9, 2022, 11:06 AM IST

டெல்லி: மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்றைய கரோனா, ஒமைக்ரான் தொற்று குறித்து இன்று (ஜன. 9) தகவல் வெளியிட்டுள்ளது. அதில், "நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 15 லட்சத்து 63 ஆயிரத்து 566 பேர் கரோனா பரிசோதனை மேற்கொண்டுள்ளனர்.

அவர்களில் 1 லட்சத்து 59 ஆயிரத்து 632 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால், தற்போது, சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 90 ஆயிரத்து 611 ஆக உயர்ந்துள்ளது.

தொடர்ந்து 4ஆவது நாளாக...

கரோனா தொற்றிலிருந்து 40 ஆயிரத்து 863 பேர் குணமடைந்துள்ள நிலையில், 327 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், நாட்டில் மொத்த கரோனா உயிரிழப்பு 4 லட்சத்து 83 ஆயிரத்து 790 ஆக உயர்ந்துள்ளது.


இந்தியாவில் தொடர்ந்து நான்காவது நாளாக ஒரு லட்சத்தை தாண்டி பதிவாகியுள்ளது. மேலும், தினந்தோறும் தொற்று விழுக்காடு 10-ஐ தாண்டியுள்ளது.

அதிகரிக்கும் ஒமைக்ரான்

உருமாறிய கரோனா தொற்றான ஒமைக்ரான் தொற்று, இந்தியாவில் கடந்த 24 நேரத்தில் 3 ஆயிரத்து 623 பேருக்கு கண்டறியப்பட்டுள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1,009 பேர் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

டெல்லியில் நேற்று ஒமைக்ரான் பாதிப்பு 876 ஆக பதிவான நிலையில், இன்று 513 ஆக குறைந்துள்ளது. இதையடுத்து, கர்நாடகாவில் 441 பேருக்கும், ராஜஸ்தானில் 373 பேருக்கும் ஒமைக்ரான் கண்டறியப்பட்டுள்ளது.

இதுவரை நாடுமுழுவதும் 151.58 கோடி டோஸ் கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 89 லட்சத்து 28 ஆயிரத்து 316 டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: மகாராஷ்டிராவில் தொற்று 41 ஆயிரமாக உயர்வு; பள்ளிகள் தொடர்ந்து மூடல்

ABOUT THE AUTHOR

...view details