அதிதீவிர புயலான 'யாஸ்' ஒடிசா அருகே கரையைக் கடந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடக்கும்போது 130 கி.மீ. முதல் 155 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது. வடக்கு-வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் இந்த புயல், அடுத்த 6 மணிநேரத்தில் வலுவிழக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடனுக்குடன்- கரையை கடந்தது 'யாஸ்' புயல்! - யாஸ் புயல் முடிவு
14:00 May 26
கரையை கடந்தது 'யாஸ்' புயல்
13:57 May 26
சூறையாடப்பட்ட மரங்கள் அகற்றம்!
ஒடிசாவின் பரதீப் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், ஒடிசா பேரிடர் விரைவு அதிரடிப் படையினர், மீட்பு பணிகளில் ஈடுபட்டுவருகின்றனர்.
13:26 May 26
ஒடிசாவில் கடந்த 24 மணி நேரத்தில் மழை அளவு!
ஒடிசாவின் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 304 மி.மீ மழை பதிவாகியுள்ளது. பத்ராக்கில் 288 மி.மீ, கேந்திரபாரா 275 மி.மீ, ஜகத்சிங்க்பூர் 271 மி.மீ மழை பதிவாகியுள்ளது.
12:06 May 26
மீட்பு பணியில் ராணுவ வீரர்கள்!
மேற்கு வங்க மாநில அரசுடன் இணைந்து மீட்பு பணிகளில் ஈடுபட இந்திய ராணுவ வீரர்கள் தயார்.
11:04 May 26
மரம் வேரோடு சாய்ந்து விழுந்ததில் இருவர் உயிரிழப்பு
ஒடிசாவின் கெண்டுஜா, பாலசோர் மாவட்டங்களில் புயல் காரணமாக மரம் வேரோடு சாய்ந்து விழுந்ததில் முறையே இருவர் சிக்கி உயிரிழந்தனர்.
10:41 May 26
தம்ரா துறைமுகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்!
அதிதீவிர புயலான யாஸ் தம்ரா துறைமுகம் அருகே இன்று (மே.26) நண்பகல் கரையைக் கடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முன்னெசரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப் பட்டுள்ளன.
ஒடிசாவின், சந்திபூர் பகுதியில் வசிக்கும் மக்களை முகாம்களுக்கு அனுப்பி வைக்கும் பணியில் பாலசோர் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. கேந்திரபரா மாவட்டத்திலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. மேற்கு வங்க மாநிலம், பூர்பா மெடினிபூர் மாவட்டத்தில் கடல் சீற்றம் ஏற்பட்டுள்ளது.
10:17 May 26
ஒடிசாவில் பலத்த மழை!
யாஸ் புயல் கரையை கடக்க தொடங்கியுள்ள நிலையில், ஒடிசாவில் பலத்த சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இப்புயல் முழுவதும் கரையை கடக்க சுமார் 4 மணி நேரமாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
09:47 May 26
ஒடிசா வங்கக்கடலில் கரையை கடக்க தொடங்கியது அதி தீவிர புயலான யாஸ்.