டெல்லி: அரபிக்கடலின் தென்மேற்கே மையம் கொண்டுள்ள தேஜ் புயல், இன்று (அக்.22) மதியம் அதிதீவிர புயலாக மாறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது. இது தொடர்பாக, இந்திய வானிலை மையம் வெளியிட்டு உள்ள X வலைத்தளப் பதிவில், “அரபிக்கடலின் தென்மேற்கு திசையில் மையம் கொண்டு உள்ள தேஜ் புயல், இன்று மதியம் 2.30 மணிக்கு அதிதீவிர புயலாக மாறி, ஏமனின் சொகோட்ராவின் கிழக்கு-தென்கிழக்கு நோக்கி 260 கிலோ மீட்டர் வேகத்தில் நகரும்.
மேலும், இந்த புயல் தெற்கு-தென்கிழக்கின் சலலாவில் (ஏமன்) 630 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும். அதேபோல், ஏமனின் அல் காய்தாவின் தென்கிழக்கு திசையில் 650 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும். மேலும், இந்த புயல் இன்றைய நாளின் மதியம் அதிதீவிர புயலாக மாறும் என கணிக்கப்பட்டு உள்ளது” என குறிப்பிடப்பட்டு உள்ளது. அரபிக் கடலில் உருவான இந்த தேஜ் புயல், வருகிற 25ஆம் தேதி அன்று அல் காய்தா, ஏமன், சலாலா மற்றும் ஓமன் வழியாக கரையைக் கடக்கும்.