தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

தீவிரமடையும் அசானி புயல்- ரத்து செய்யப்பட்ட விமானங்கள்

வங்கக்கடலில் உருவாகியுள்ள அசானி புயல் தீவிரமடைந்து வருவதால் ஆந்திர விமான நிலையங்களில் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

தீவிரமடையும் அசானி புயல்-  ரத்து செய்யப்பட்ட விமானங்கள்
தீவிரமடையும் அசானி புயல்- ரத்து செய்யப்பட்ட விமானங்கள்

By

Published : May 11, 2022, 11:15 AM IST

சென்னை:வங்கக்கடலில் உருவாகியுள்ள அசானி புயல் அந்தமான் பகுதியிலிருந்து ஆந்திரா மாநிலம் நோக்கி நகர்ந்து வருவதால் சென்னையிலும் பலத்த மழை பெய்து வருகிறது. மேலும் சென்னை கடற்கரை பகுதிகளில் புயல் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதால் ஆந்திர விமான நிலையத்தில் உள்நாட்டு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இண்டிகோ நிறுவனத்தின் விசாகப்பட்டினத்திலிருந்து உள்நாட்டுக்குள் செல்ல இருந்த 22 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் விசாகபட்டினத்திற்கு வர இருந்த 22 விமானங்களும் ரத்து செய்யப்பட்டதாக் விசாகப்பட்டின விமானநிலைய இயக்குநர் ஸ்ரீனிவாச ராவ் தெரிவித்துள்ளார்.

ஏர் இந்தியா நிறுவனம் இதுவரை விமான ரத்து குறித்து எந்த தகவலும் வெளியிடவில்லை. ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் கொல்கத்தா- விசாகப்பட்டினம் விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் அசானி புயல் இன்று இரவுக்குள் வலுவிழந்து ஆந்திராவில் கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புயல் காரணமாக நேற்று (மே 10) தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இலங்கையால் பெயரிடப்பட்ட அசானி புயல் ஆந்திர கடலோர மாவட்டங்களில் சேதம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், அசானி புயல் காரணமாக இன்று சென்னையில் இருந்து விசாகப்பட்டினம், விஜயவாடா, ஹைதராபாத், பெங்களூரு, கொல்கத்தா, ஜெய்ப்பூர், ராஜமுந்திரி உள்ளிட்ட நகரங்களுக்கு செல்லும் 17 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதேபோல், சென்னையில் இருந்து அந்தமான் செல்லும் விமானங்கள் காலதாமதமாக புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:அசானி புயல் அடுத்த 24 மணி நேரத்தில் கரையை கடக்கும் என எதிர்பார்ப்பு

ABOUT THE AUTHOR

...view details