தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஒடிசா - ஆந்திரா இடையே கரையைக் கடக்கும் குலாப் புயல்

வங்கக் கடலில் செப்டம்பர் 24ஆம் தேதி உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று புயலாக உருமாறி ஒடிசா, ஆந்திரா இடையே கரையைக் கடக்கத் தொடங்கியது.

குலாப் புயல்
குலாப் புயல்

By

Published : Sep 26, 2021, 9:02 PM IST

Updated : Sep 26, 2021, 9:30 PM IST

ஹைதராபாத்: வங்கக் கடலில் செப்டம்பர் 24ஆம் தேதி உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று புயலாக உருமாறியது.

இந்த புயலுக்கு ‘குலாப்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த குலாப் புயலானது வடக்கு ஆந்திரா - தெற்கு ஒடிசா கடற்கரையை ஒட்டிய கலிங்கப்பட்டினம்-கோபால்பூருக்கு இடையே இன்று மாலை கரையை கடக்கக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

குலாப் புயல்

அதன்படி, குலாப் புயல் கரையை கடக்கத் தொடங்கியுள்ளது. “வடக்கு கரையோர ஆந்திரா மற்றும் ஒடிசாவின் தென்கரையோரத்தில் புயல் கரையை கடக்க தொடங்கியுள்ளது. அடுத்த மூன்று மணி நேரம் இது நீடிக்கும்” என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பேரிடர் மீட்புக் குழுவினர்

புயலையொட்டி ஆந்திரா, ஒடிசா ஆகிய மாநிலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அந்த மாநிலங்களில் பல்வேறு இடங்களில் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. புயல் தொடர்பான உதவி மைய எண்களையும் அம்மாநில அரசுகள் அறிவித்துள்ளன.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

மே மாதம் 'யாஸ் புயல்' ஒடிசாவை தாக்கிய நிலையில், தற்போது ஒடிசாவில் 'குலாப் புயல்' கரையை கடக்கத் தொடங்கியுள்ளது. கஞ்சம், கஜபதி, கந்தமால், கோராபுட், ராயகடா, நபரங்க்பூர் மற்றும் மல்கன்கிரி ஆகிய ஏழு அதிக ஆபத்துள்ள மாவட்டங்களில் புயல் காரணமாக உயிர் சேதம் ஏற்படாமல் இருக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார்.

குலாப் புயல்

இந்த இடங்களுக்கு ஒடிசா பேரிடர் ரேபிட் ஆக்‌ஷன் ஃபோர்ஸின் 42 குழுக்களும், தேசிய பேரிடர் மீட்பு படையின் 24 குழுவினரும், 100 க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என ஒடிசா முதலமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.

ஆந்திர மாநில நிலவரம்

ஆந்திர மாநிலத்தின் ஸ்ரீகாக்குளம் மாவட்ட ஆட்சியர் கூறுகையில், “அடுத்த இரண்டு மணிநேரங்கள் முக்கியமானவை. 90-100 கிமீ வேகத்தில் காற்று வீசுக்கூடும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். பேரிடர் மீட்புக் குழு 4 அணிகளாக இங்கு வந்துள்ளன” என்று தெரிவித்துள்ளார்.

குலாப் புயல்

அடுத்த மூன்று நாட்களில், கடல் நிலை மிகவும் மோசமாக இருக்கும். ஒடிசா, மேற்கு வங்கம், ஆந்திராவில் உள்ள மீனவர்கள் கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க:குலாப் புயல்: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்த பிரதமர்

Last Updated : Sep 26, 2021, 9:30 PM IST

ABOUT THE AUTHOR

...view details