தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

வங்கக்கடலில் உருவானது 'அசானி' புயல்...எங்கு கரையைக் கடக்கும்?

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் 'அசானி' புயல் உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் உருவானது 'அசானி' புயல்
வங்கக்கடலில் உருவானது 'அசானி' புயல்

By

Published : May 8, 2022, 1:26 PM IST

டெல்லி:தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் கடந்த சில நாள்களாக நிலவி வந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது.

இந்நிலையில், இந்தக் காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று (மே8) புயலாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புதிய புயலுக்கு 'அசானி' எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இந்தப் புயல் அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர புயலாக உருமாறி வடமேற்கு திசையில் நகரக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது 16 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வரும் இந்த புயல், விசாகப்பட்டினத்தில் இருந்து 970 கி.மீ. தொலைவில் நிலைக்கொண்டிருக்கிறது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், வரும் 10ஆம் தேதி, 'அசானி' புயல் வடக்கு ஆந்திரா மற்றும் ஒடிசா இடையேயான கடற்பகுதிகளில் கரையை கடக்ககூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வடக்கு ஆந்திரா மற்றும் ஒடிசா கடற்பகுதிகளில் செவ்வாய்கிழமை பலத்த காற்று வீசக் கூடும் மற்றும் மழை பெய்யும் எனவும் மேற்கு வங்க மாநிலத்தின் தெற்குப் பகுதி, கொல்கத்தாவிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை:மீனவர்கள் இந்த நாள்களில் கடலுக்குச் செல்ல வேண்டாம் எனவும், ஒடிசா கடற்கரையை ஒட்டிய பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மே 10ஆம் தேதி கடல் சீற்றத்துடன் இருக்கும், காற்றின் வேகம் மணிக்கு 80-90 கி.மீ வேகத்தில் இருக்கும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: சார்தாம் யாத்திரை; பத்ரிநாத் ஆலயம் திறப்பு!

ABOUT THE AUTHOR

...view details