பெங்களூரு: சமூக ஊடகங்களில் ஆபாச வீடியோக்களைக் கொண்டு ஆண்களை அச்சுறுத்திய கும்பலை குற்றப் புலனாய்வுத் துறையின் (சிஐடி) சைபர் கிரைம் பிரிவினர் கைது செய்தனர். பின் அவர்களிடம் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டனர்.
இதில் ராஜஸ்தானில் பாரத்பூரைச் சேர்ந்த சாஹுன், ஷாருக் கான், நசீர் மற்றும் ஷாஹித் அன்வர் ஆகியோர் பெண்களின் பெயர்களைப் பயன்படுத்தி போலி சமூக ஊடக கணக்குகளை உருவாக்கியது தெரியவந்துள்ளது. பின் மற்ற ஆண்களிடம், அவர்களது வீடியோக்களை இடுகையிடுமாரு கூறி, அவர்களது வீடியோக்களை வைத்து மிரட்டியுள்ளதும் தெரியவந்துள்ளது.