தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'1500 கோடி' அபேஸ்... 10 லட்சம் பேரிடம் பணத்தைச் சுருட்டிய எம்எல்எம் கும்பல்! - 24 people arrested for money scam

ஹைதராபாத்: சுமார் 10 லட்சம் பேரிடம் 1500 கோடி ரூபாய் சுருட்டிய 24 பேர், காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Cyberabad
ஹைதராபாத்

By

Published : Mar 6, 2021, 8:04 PM IST

தெலங்கானாவில் ஆயிரத்து 500 கோடி ரூபாய் பண மோசடி வழக்கில், மூன்று அரசு பள்ளி ஆசிரியர்கள் உட்பட 24 பேரை ஹைதராபாத் காவல் துறையினர் கைது செய்துள்ளனர். பெங்களூருவில் 'இன்டஸ் வைவ்வா ஹெல்த் சயின்ஸ்' என்ற பெயரில் இயங்கும் மல்டி லெவல் மார்க்கெட்டிங் நிறுவனத்திற்கு நாடு முழுவதும் பல கிளைகள் உள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிறுவனத்தில் 12 ஆயிரத்து 500 ரூபாய் கொடுத்து உறுப்பினராக சேருவோர், நிறுவனத்தின் தயாரிப்புகளை பல்வேறு சலுகைகளுடன் பெற்றுக்கொள்ளலாம். அதே போல, மற்றொரு நபரை நிறுவனத்தில் உறுப்பினராகச் சேர்த்துவிட்டால், கூடுதலாக ஆயிரம் ரூபாய் போனஸாக கிடைக்கும் என பொய்யான வாக்குறுதிகளைத் தேன் போன்ற மொழியில் மக்களிடம் வாரி இறைத்துள்ளனர்.

இதை நம்பிய பலரும், பணத்தை முதலீடு செய்து ஏமாந்து வந்துள்ளனர். சிறிய தொகை என்பதால், காவல் துறையிடம் சிக்காமலிருந்த மார்க்கெட்டிங் கும்பல், ஹைதராபாத் வாசியின் புகாரில் வசமாகச் சிக்கிக்கொண்டது.

தெலங்கானாவில் மட்டுமே சுமார் ஒரு லட்சம் பேர் இந்த கும்பலின் வலையில் சிக்கியுள்ளனர். ஒருவரிடம் குறைந்தபட்சம் 12 ஆயிரம் ரூபாய் வாங்கியுள்ளனர். சுமார் 10 லட்சம் பேரிடம், ஆயிரத்து 500 கோடி ரூபாய் சுருட்டப்பட்டுள்ளது. இந்த கும்பலைச் சேர்ந்த 24 பேரைக் காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மக்களிடம் எம்எல்எம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும், இந்த மோசடி தொடர்ந்த வண்ணமே உள்ளது.

இதையும் படிங்க:'நான் கே.டி. ஆரின் தனிச்செயலர்' - மோசடி செய்த முன்னாள் ரஞ்சி வீரர் கைது

ABOUT THE AUTHOR

...view details