டெல்லி:ராணுவ அலுவலர்களிடமிருந்து இணையப்பாதுகாப்பு மீறல் நடந்துள்ளதாகவும், அவர்களுக்கு அண்டை நாட்டினரின் ரகசியத் திட்டங்களில் தொடர்பு இருக்கிறதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக புலனாய்வு நிறுவனம் கேள்வி எழுப்பியுள்ளது.
இது குறித்து பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விக்கு பாதுகாப்புத் துறையிடமிருந்து வந்த தகவலில், “ சில ராணுவ அலுவலர்களிடமிருந்து பாதுகாப்பு மீறல் நடந்துள்ளதாக ராணுவமும், புலனாய்வு நிறுவனமும் கண்டறிந்துள்ளது. இந்த இணையப் பாதுகாப்பு மீறல் செயல் குறித்து வாட்ஸ்-அப் குரூப் ஒன்றில் தகவல்கள் பதிவாகியுள்ளன. ஏற்கெனவே உள்ள உத்தரவுகளை மீறும் செயல்கள், குறிப்பாக உளவுத்துறைக்கு எதிரான விஷயங்கள் மிகவும் முக்கியமாக கண்டறியப்படவேண்டியது.
மேலும், இதில் ராணுவ அலுவலர்களும் சம்மந்தப்பட்டதால் இன்னும் கடுமையாக கையாளப்படுவர். ஏனெனில் அவர்கள் அதிகாரப்பூர்வ ரகசிய சட்டத்திற்குள்ளானவர்கள் என்பதால், கடுமையாக கையாளப்படும் செயல்களை எதிர்பார்க்கலாம். நடந்து கொண்டிருக்கும் விசாரணையில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் மேல் உள்ள குற்றம் உறுதிசெய்யப்பட்டால், நிச்சயம் அதற்கேற்ப நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்தனர்.