டெல்லி: கடந்த அக்டோபர் 30ஆம் தேதி நடைபெற்ற காவிரி ஒழுங்காற்றுக் குழு கூட்டத்தில், நேற்றைய முன்தினம் (நவ.22) வரை தமிழ்நாட்டிற்கு விநாடிக்கு 2,600 கன அடி நீர் திறக்க வேண்டும் என்று காவிரி ஒழுங்காற்றுகுழுவால் பரிந்துரை செய்யப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கர்நாடக அரசு, இதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது. இருப்பினும், தமிழகத்துக்கு விநாடிக்கு சுமார் 3,000 கன அடி நீரை கர்நாடக அரசு திறந்துவிட்டது.
இந்த நிலையில், காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் 90வது கூட்டம் நேற்று டெல்லியில் நடைபெற்றது. இதற்கு, காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் தலைவர் வினீத் குப்தா தலைமை வகித்தார். இந்தக் கூட்டத்தில் காணொலி வாயிலாக, அக்குழுவின் செயலர் டி.டி.ஷர்மா, உறுப்பினர் கோபால் ராய், தமிழ்நாடு அரசு தரப்பில் காவிரி தொழில்நுட்ப குழுத் தலைவர் சுப்பிரமணியம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.