டெல்லி: காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்று குழுவில் கர்நாடகா, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கேரளா மாநிலங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த நிலையில் நவம்பர் மாதம் தமிழ்நாட்டிற்குக் காவிரியிலிருந்து தண்ணீர் திறப்பது குறித்து காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் 89வது கூட்டம் கடந்த அக்டோபர் 30ஆம் தேதி டெல்லியில் நடைபெற்றது.
அப்போது, தமிழ்நாட்டிற்கு நவம்பர் 1ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை 15 நாட்களுக்கு 2600 கன அடி தண்ணீரைக் கர்நாடக அரசு காவிரி பில்லிக்குண்டு வழியாகத் திறந்து விட வேண்டும் எனக் காவிரி நீர் ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்ததது.
ஆனால், கர்நாடக அரசு அதனை ஏற்க மறுப்பு தெரிவித்து. மேலும், காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் பரிந்துரையானது காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திடம் தெரிவிக்கப்பட்டது. அதன்படி காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 27வது கூட்டம் டெல்லியில் இன்று (நவ.3) நடைபெற்றது.