பர்மிங்ஹாம்: இங்கிலாந்தின் பர்மிங்ஹாம் நகரில் நடைபெற்று 22வது காமன்வெல்த் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் கிரிக்கெட் இறுதி போட்டியில் உலக சாம்பியன் ஆஸ்திரேலிய அணியுடன் இந்தியா மோதியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
பின்னர் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக தொடக்க வீராங்கணை பெத் மூனி 61 ரன்கள் எடுத்தார். கேப்டன் மெக் லானிங் 36 ரன்கள் எடுத்து ரன்-அவுட் ஆனார்.
தொடர்ந்து 162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீராங்கனைகளான ஷபாலி வர்மாவும் (11). ஸ்மிர்தி மந்தனாவும் (6) சிறப்பான தொடக்கத்தை கொடுக்கத் தவறினர். இதனையடுத்து வந்த ஜெமினா - ஹர்மன்பிரீத் கவுர் ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது.