தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மேற்கு வங்கத்திற்கு புதிய ஆளுநர் நியமனம் ! - இல கணேசன்

மேற்குவங்க மாநிலத்தின் ஆளுநராக சி வி ஆனந்த போஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

CV Ananda Bose  West Bengal Governor  West Bengal  Governor  மேற்குவங்கத்திற்கு புதிய ஆளுநர்  சி வி ஆனந்த போஸ்  மேற்குவங்க ஆளுநர்  ஜகதீப் தன்கர்  குடியரசு துணைத் தலைவர்  இந்தியக் குடியரசுத் தலைவர்  இல கணேசன்  ஆளுநராக சி வி ஆனந்த போஸ் நியமனம்
சி வி ஆனந்த போஸ்

By

Published : Nov 18, 2022, 8:05 AM IST

மேற்குவங்க ஆளுநராக இருந்த ஜகதீப் தன்கர், கடந்த ஜூலை மாதம் குடியரசு துணைத் தலைவராக பதவியேற்றார். இதனைத்தொடர்ந்து, மணிப்பூர் மாநில ஆளுநர் இல கணேசன் மேற்குவங்க ஆளுநர் பொறுப்பை கூடுதலாக கவனித்து வந்தார்.

இந்நிலையில், மேற்குவங்க மாநிலத்தின் புதிய ஆளுநராக சி வி ஆனந்த போஸ் (71) நியமிக்கப்பட்டுள்ளதாக,நேற்று (நவம்பர் 17) குடியரசு தலைவர் மாளிகையில் இருந்து வந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1977-ல் கேரள பிரிவு ஐஏஎஸ் அதிகாரியாக இருந்த சி வி ஆனந்த போஸ், 2011-ல் தேசிய அருங்காட்சியகத்தின் நிர்வாக தலைவராக இருந்தார். இவர் கேரள அரசிலும், மத்திய அரசிலும் பல்வேறு துறைகளில் பணியாற்றியுள்ளார்.

மேலும் கேரள முதலமைச்சரின் செயலராகவும், வேளாண் அமைச்சகத்தின் கூடுதல் செயலராகவும், கொல்லம் மாவட்ட ஆட்சியராகவும் பதவி வகித்துள்ளார். இவர் விரைவில் மேற்கு வங்க ஆளுநராக பதவியேற்க உள்ளார்.

இதையும் படிங்க: மேடையில் நிதின் கட்கரிக்கு உடல்நலக்குறைவு - கவலை தெரிவித்த மம்தா

ABOUT THE AUTHOR

...view details