ஹைதராபாத்:பிரான்ஸ் நாட்டின் நான்டர்ரே புறநகர்ப் பகுதியில், 17 வயது சிறுவன் காவல்துறையால் சுட்டுக்கொலை செய்யப்பட்டதற்கு, எதிர்ப்புத் தெரிவித்து, நடைபெற்று வரும் கலவரம் 4வது நாளை எட்டி உள்ளது. ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்துள்ள நிலையில், அங்கு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, 45 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
இந்நிலையில், பிரான்ஸில் நடந்து வரும் கலவரத்தைத் தடுக்க உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலையிட வேண்டும் என்று ஜெர்மனியைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் செய்த ட்வீட், பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக, முதலமைச்சர் அலுவலகம், விசாரணை மேற்கொண்டது. சமூக ஊடகங்களில் பெரும் புயலைக் கிளப்பி உள்ள, இந்தப் பதிவரின் ட்வீட், பகடி என உறுதி செய்யப்பட்டுள்ளது.
"Prof.N John Camm" என்ற பெயரிலான சரிபார்க்கப்பட்ட ட்விட்டர் கணக்கு, உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை, பிரான்ஸுக்கு அனுப்புமாறு இந்தியாவைக் கேட்டுக் கொண்டது. அவர் 24 மணி நேரத்திற்குள் அமைதியின்மையிலிருந்து விடுபட செய்வார் என்று அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது. "இந்தியா @myogiadityanath-ஐ பிரான்ஸுக்கு அனுப்ப வேண்டும். அங்குள்ள கலவர சூழ்நிலையைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை, அவர் 24 மணி நேரத்திற்குள் செய்வார்" என்று ட்விட்டர் , பதிவில் குறிப்பிட்டு இருந்தார்.
இந்த ட்விட்டர் குறித்து ஆய்வு மேற்கொண்ட உத்தரப்பிரதேச முதலமைச்சர் அலுவலகம், "ஆட்சியின் மாதிரியை" வெகுவாகப் பாராட்டியுள்ளது. "உலகின் எந்தப் பகுதியிலும் பயங்கரவாதம் கலவரங்கள், குழப்பங்கள் மற்றும் சட்டம் மற்றும் ஒழுங்கு நிலைமைகளைத் தூண்டும் போதெல்லாம், உலகம் ஆறுதல் தேடுகிறது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ளதைப் போன்று "யோகி மாதிரி" மாற்றத்திற்காக உலகம் ஏங்குவதாக'' அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
பயனருக்குப் பதிலளிக்கும் போது, யோகியின் அலுவலகம் உ.பி. முதலமைச்சரின் "ஆட்சியின் மாதிரியை" பாராட்டியது. மேலும் ட்வீட்டை மேற்கோள் காட்டி, முதலமைச்சர் அலுவலகம் எழுதியது, "உலகின் எந்தப் பகுதியிலும் தீவிரவாதம், கலவரங்கள், குழப்பங்கள் மற்றும் சட்டம் மற்றும் ஒழுங்கு நிலைமைகள் நிகழும் போதெல்லாம், உலகம் ஆறுதல் தேடுகிறது மற்றும் "யோகி மாதிரி" மாற்றத்திற்காக ஏங்குகிறது.