புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கட்டுப்பாடுகளை வரும் ஜூன் 7ஆம் தேதி நள்ளிரவு வரை நீட்டிக்க துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஒப்புதல் அளித்துள்ளார்.
’தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு’ - துணைநிலை ஆளுநர் தமிழிசை உத்தரவு - தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு
புதுச்சேரி: ஜூன் 7ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவை நீட்டித்து துணைநிலை ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.
Puducherry
இதுகுறித்து தமிழிசை சௌந்தரராஜன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
- மின்சாரம், குடிநீர் குழாய், நீர் சுத்திகரிப்பு மற்றும் வாகனங்களை பழுது நீக்குதல் போன்ற அடிப்படை சேவைகளை சுயதொழிலாக செய்பவர்களுக்கு கட்டுப்பாடுகளில் இருந்து விலக்கு அளிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
- புதுச்சேரியில் 18 முதல் 44 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடுவதற்காக புனேவில் உள்ள சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா நிறுவனத்திடமிருந்து கோவிஷீல்ட் தடுப்பூசிகள் வாங்குவதற்கு 1.05 கோடி ரூபாய்க்கு செலவின ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
- கோவிட் இரண்டாவது அலையை சமாளிப்பதற்கான குறுகிய கால ஒப்பந்த அடிப்படையில் 214 சுகாதாரப் பணியாளர்களை மீண்டும் பணியமர்த்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
- மியூகோர்மைகாசிஸ் பூஞ்சை நோயைக் கட்டுப்படுத்த வேண்டியதன் அவசியம் கருதி ’லைபோசோமல் ஆம்ஃபோடெரிசின்’ மருந்து வாங்க 2.83 லட்சம் ரூபாய் செலவின ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
- புதுச்சேரி திட்டப்பகுதியில், பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் பயனாளிகள் கட்டுமானக் கூறுகளின் கீழ் இரண்டு வீடுகட்டும் திட்டங்களை நிறைவேற்ற புதுச்சேரி குடிசை மாற்று வாரியத்திற்கு மூன்றாம் மற்றும் நான்காம் தவணையாக 4.62 கோடி ரூபாய் நிதி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.