நாடு முழுவதும் கரோனா இரண்டாவது அலை தீவிரமாகிவரும் நிலையில், டெல்லியில் இன்று இரவு தொடங்கி ஏப்ரல் 26ஆம் தேதிவரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படவுள்ளது. தனியார் நிறுவனத்தின் ஊழியர்கள் அனைவரும் வீட்டில் இருந்தபடியே பணியாற்றுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா அச்சம்: டெல்லியில் இன்று இரவுமுதல் முழு ஊரடங்கு
11:48 April 19
டெல்லி: நாட்டின் தலைநகரில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில், அங்கு இன்று இரவுமுதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படவுள்ளது.
அரசு அலுவலகங்கள், அத்தியாவசிய சேவைகள் மட்டுமே இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று மட்டும் 25,462 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சோதனை மேற்கொள்பவர்களில் மூன்றில் ஒருவர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பரவலைக் கட்டுப்படுத்தும்விதமாக இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆனால், நகரின் பல்வேறு பகுதிகளில் விதிமீறல் நிகழ்ந்ததன் விளைவாக முழு ஊரடங்கு அமலுக்குவருகிறது. முன்னதாக, இன்று காலை, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் துணைநிலை ஆளுநர் அனில் பைஜாலுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
டெல்லியில் விடுதிகள், வணிக வளாகங்கள், உடற்பயிற்சி கூடங்கள், அழகு நிலையங்கள் ஆகியவை ஏற்கனவே மூடப்பட்டுவிட்டன.