தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

புதுச்சேரியில் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு நீடிப்பு! - புதுச்சேரி மாநில செய்திகள்

புதுச்சேரியில் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 10 தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

புதுச்சேரி
புதுச்சேரி

By

Published : May 4, 2021, 10:36 AM IST

புதுச்சேரியில் கரோனா பரவலை கட்டுப்படுத்த நேற்று இரவு வரை கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு அடுத்த திங்கட்கிழமை 10ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மக்கள் சுய கட்டுப்பாட்டுடன் வீட்டிலே இருக்கவேண்டும். வீட்டில் இருக்கும்போது முக கவசம் அணிந்து இருக்கவேண்டும். அடிக்கடி வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும் கட்டுப்பாடுகளில் குறிப்பிடப்பட்டுள்ளன.

இதற்கிடையே, புதுச்சேரி காவல்துறை துணை ஆணையர் சுதாகர் பிறப்பித்துள்ள உத்தரவில், "கரோனா அதிகரித்து வருவதால் மதுக்கடை திறப்பில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. அனைத்து கள்ள சாராயக் கடைகள் ரெஸ்டாரென்ட் ஓட்டல்களில் உள்ள பார்கள் சுற்றுலா பார்கள் வரும் பத்தாம் தேதி நள்ளிரவு வரை மூட வேண்டும்.

ஆகவே, மதுபான உரிமைதாரர் இந்த உத்தரவை தவறாமல் கடைபிடிக்க வேண்டும். தவறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என கூறப்பட்டுள்ளது. மதுபான விற்பனைக்கு தடை விதித்துள்ளதால் இன்னும் ஏழு நாட்களுக்கு குடிமகன்களுக்கு மது கிடையாது.

ABOUT THE AUTHOR

...view details