தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

போலி முதலாளித்துவத்தைக் கட்டுப்படுத்துதல்: நாட்டின் இன்றியமையாத முன்னுரிமை - ஜிடிபி

உள்நாட்டு மொத்த உற்பத்தியில் 3.4 விழுக்காடு உள்ள போலி முதலாளித்துவ துறை சார்ந்த வளங்களின் கணக்கீட்டின் போலி முதலாளித்துவ குறியீட்டில் போலி முதலாளித்துவ நாடுகள் பட்டியலில் 22 நாடுகள் வரிசையில் இந்தியா ஒன்பதாவது இடம்பெற்றுள்ளது. 2014ஆம் ஆண்டிலும் இந்தியா இதே 9ஆவது இடம்தான் வகித்தது. இந்தக் குறியீடானது, பொருளாதாரத்தில் மக்களின் வாழ்வாதாரம் போலி முதலாளித்துவத்தின் காரணமாக எந்த அளவுக்கு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்பதைக் குறிப்பிடுகிறது. இது குறித்த சிறப்புக் கட்டுரையை எழுதியவர் டாக்டர் என்.வி.ஆர். ஜோதி குமார் (தலைவர், வணிகத் துறை, மிசோரம் மத்திய பல்கலைக்கழகம்)

Curbing Crony
போலி முதலாளித்துவம்

By

Published : Apr 3, 2021, 9:08 AM IST

Updated : Apr 3, 2021, 9:37 AM IST

போலி முதலாளித்துவம் என்பது முதலாளித்துவத்தின் மோசமான அம்சமாக இருக்கிறது. இங்கே வணிகத்தின் வெற்றி என்பது அரசின் சலுகைகள், வரி விலக்குகள், முறையற்ற ஒதுக்கீடு அனுமதிகள், முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட பணி ஒப்பந்தங்கள் இதர சாதகமான ஊக்கத் தொகைகள் போன்றவற்றின் வடிவில் அரசுத் தரப்பில் ஆதரவைப் பொறுத்தே இருக்கிறது.

இதன் கீழ், நாட்டின் நலன் அல்லது பொது நலனுக்கு விலை பேசும் வகையில் எளிதாகத் தனிப்பட்ட வளத்தைக் குவிக்கும் ஒரே ஒரு நோக்கத்துடன் ஒரு சில போலி வணிக முதலாளிகள் அரசின் கொள்கைகளில் தாக்கம் ஏற்படுத்தும் அதிகாரத்தைப் பெறுகிறார்கள்.

இங்கே, தரமான பொருள்களை உற்பத்தி செய்தல், தரமான சேவைகளை வழங்குதல் என்னும் ஒரு வணிக நிறுவனத்தின் உற்பத்தி, திறன் ஆகியவற்றை விடவும் அரசுத் தரப்பு, வணிகத் தரப்பு இரண்டுக்கும் இடையிலான ஒரு நியாயமற்ற தொடர்பே வணிக வெற்றியைத் தீர்மானிப்பதாக இருக்கிறது. போலி முதலாளித்துவத்துக்கு நிதி செலவு (நிறுவனங்களுக்கான வரி விதிப்பு மற்றும் வங்கிகளின் இருப்பு நிலைகளில் சந்தேகத்திற்கு உரிய கடன்கள் காரணமாக), சமூக செலவு (நிதி மற்றும் வளங்களை இழப்பதால் சுகாதாரம் மற்றும் கல்வி போன்ற மனித வளர்ச்சிக்கான முதலீட்டைக் குறைப்பதன் காரணமாக) ஆகியவை உள்ளன.

சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், சமூகத்தில் உயர்ந்தபட்ச சமமற்ற நிலையுடன் தொடர்புடையதாகும். பரந்த அடிப்படையில் மனித மற்றும் பொருளாதார வளர்ச்சி நடக்காது.
2016ஆம் ஆண்டு த எக்னாமிஸ்ட் இதழ் நடத்திய ஆய்வில் கூறப்பட்டுள்ள தகவலின்படி, "உள்நாட்டு மொத்த உற்பத்தியில் 3.4 விழுக்காடு உள்ள போலி முதலாளித்துவ துறை சார்ந்த வளங்களின் கணக்கீட்டின் போலி முதலாளித்துவ குறியீட்டில் போலி முதலாளித்துவ நாடுகள் பட்டியலில் 22 நாடுகள் வரிசையில் இந்தியா ஒன்பதாவது இடம் பெற்றுள்ளது.

2014ஆம் ஆண்டிலும் இந்தியா இதே 9ஆவது இடம்தான் வகித்தது. இந்தக் குறியீடானது, பொருளாதாரத்தில் மக்களின் வாழ்வாதாரம் போலி முதலாளித்துவத்தின் காரணமாக எந்த அளவுக்கு கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது என்பதைக் குறிப்பிடுகிறது. 1991ஆம் ஆண்டிலிருந்து இந்தியாவில் தொடர்ச்சியான பொருளாதாரச் சீர்திருத்தங்கள் தொடங்கின.

முந்தைய காலத்தில் பொதுத் துறை நிறுவனங்கள் மட்டும் தனித்தன்மையுடன் ஈடுபட்டிருந்த பல துறைகளில் தனியார் நிறுவனங்கள் நுழைய வழிவகுக்கப்பட்டது. பெட்ரோலியம், நிலக்கரி, இரும்பு தாது சுரங்கங்கள் போன்ற இயற்கை சார்ந்த தொழில் வளங்களில் தனியார் துறையினர் இணைந்தனர். அரசுத் துறையில் பொதுத்துறை நிறுவனங்கள், தனியார் துறை நிறுவனங்கள் ஆகியற்றை பொதுக் கொள்கைகள் வாயிலாகவும் மற்றும் முறைப்படுத்தவும் ஒரு நிலையான தொழில் களத்தை உறுதிசெய்வதற்காக செபி (இந்திய பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியம்), ஐஆர்டிஏ (காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம்), டிஆர்ஏஐ (இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்) போன்ற தன்னாட்சி முறைப்படுத்தும் அமைப்புகளை அரசு உருவாக்கியது.

ஹர்ஷத் மேத்தா பங்குச்சந்தை முறைகேடு (1992), ஹவாலா முறைகேடு (1996) போன்ற சில முறைகேடுகள் நடைபெற்றதற்கு இடையேயும் இந்தியப் பொருளாதாரமானது 1990களில் தாராளமய சந்தை அடிப்படையிலான முதலாளித்துவத்தை நியாயமான முறையில் மாற்றுவதாகத் தோன்றியது. பல இந்திய நிறுவனங்கள் உள்நாட்டு மற்றும் உலகளாவிய சந்தைகளில் போட்டியாக மாறின.
இந்திய முறைகேடுகள்
எனினும், 21ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்தே தொடர்ச்சியான முறைகேடுகளால் இந்தியா அம்பலமாகத் தொடங்கியது. ஏறக்குறைய அனைத்து முறைகேடுகளும் சில மத்திய அமைச்சர்கள், முதலமைச்சர்கள், அரசு அலுவலர்கள் ஆகியோர்களுக்கு இடையேயான தூய்மையற்ற தொடர்புகளால் ஏற்பட்டவை மற்றும் போலி முதலாளித்துவமே பிரச்சினைக்கு காரணம் என்பதை அழுத்தமாகக் கூறியது.
நாட்டில் பொருளாதார ஆளுகையின் தரமானது மிக விரைவாகக் குறையத் தொடங்கியதன் பிரதிபலிப்பாக இது இருந்தது. 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு (2008), சத்யம் முறைகேடு (2009), காமன்வெல்த் விளையாட்டு முறைகேடு (2010), நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு முறைகேடு (2012), பெல்லாரி கனிம சுரண்டல் (2006-10), ரிலையன்ஸ் தொடர்புடைய ஆந்திராவின் கிருஷ்ணா-கோதாவரி வடிநில சர்ச்சை (2011ஆம் ஆண்டி சிஏஜி அறிக்கை), விஜய் மல்லையா வங்கி மோசடி மற்றும் பண மோசடி ஊழல் (2016), நிரவ் மோடி-பிஎன்பி மோசடி வழக்கு (2018) உள்ளிட்ட சில அவ்வளவாக பிரபலமற்ற முறைகேடுகள் இந்தியாவின் கௌரவத்தில் பெரும் பாதிப்பு மற்றும் அரசாங்க கருவூலத்திற்குப் பெரும் இழப்புகள் ஏற்படுத்த காரணமாக அமைந்தன.
ஒரு குறிப்பிட காலத்துக்கு வள விநியோகம் என்பது இந்தியாவில் மிகவும் சம நிலையற்றதாக மாறியது. ஆக்ஸ்ஃபேம் அமைப்பின் அறிக்கையின்படி (2020ஆம் ஆண்டு வெளியானது). 63 இந்திய கோடீஸ்வரர்களின் ஒட்டுமொத்த சொத்து மதிப்புகள் என்பது 2018-19ஆம் ஆண்டின் மத்திய அரசின் மொத்த பட்ஜெட்டை விடவும் மிகவும் அதிகமாகும்.

இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தியில் இந்திய கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு விழுக்காடு உலக நாடுகள் மத்தியில் அதிகம் எனத் தோராயமாக மதிப்பிடப்படுகிறது. இந்த கோடீஸ்வரர்களின் 60 விழுக்காடு சொத்துக்கான ஆதாரம் என்பது ரியல் எஸ்டேட், கட்டுமானம், கட்டமைப்பு, துறைமுகங்கள், ஊடகம், சிமெண்ட், கனிமங்கள் போன்ற இயற்கை வளங்களோடு தொடர்புடைய துறைகளிலிருந்து கிடைத்தவையாகும். இந்தியாவின் 1 விழுக்காடு பணக்காரர்களிடம் மட்டும் இந்தியாவின் மொத்த தேசிய சொத்தில் 42.5 விழுக்காடு இருக்கிறது என ஆக்ஸ்ஃபேம் அறிக்கை கூறுகிறது. இன்னொருபுறம் இந்தியாவின் அடித்தட்டில் உள்ள 50 விழுக்காடு மக்கள் தொகையினரிடம் வெறும் 2.8 விழுக்காடு தேசிய சொத்துகள் மட்டுமே உள்ளன.

கவலைகளுக்குத் தீர்வு
2014ஆம் ஆண்டு தேர்தலில் அரசு, வணிகம் ஆகியவற்றிற்கிடையேயான தூய்மையற்ற தொடர்புகள் விளைவாக முறைகேடு ஏற்படுகிறது என்ற விவகாரமாக மாறியது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் இரண்டாம் காலகட்ட அரசு தீர்க்கமான தோல்வியைத் தழுவதற்கு இதுவே முக்கியப் பங்கு வகித்தது.

வணிகம் செய்வதற்கான நடைமுறைகளை எளிதாக்குதல் என்ற பிரதமர் நரேந்திர மோடியின் சீரமைப்பு சார்ந்த அணுகுமுறையானது பொதுவாகத் தொழிற்துறையினரால் வரவேற்கப்பட்டது.
இது போன்ற திட்டங்கள் ஒரு சில வணிக குழுமங்களுக்கு இறுதியில் தேவையற்ற நன்மைகளை வழங்கும் என்ற காரணத்தால் லாபத்துடன் செயல்படும் எல்ஐசி போன்ற நிறுவனங்களில் அரசு பங்குகளை விலக்கிக் கொள்வது என்ற மத்திய அரசின் மிகப்பெரிய தனியார்மயமாக்கும் முயற்சி கடும் விமர்சனங்களை ஈர்த்தது.

ஆந்திர அரசின் ஒரு பகுதியில் வெளிப்படைத்தன்மையில் குறைபாடு நிலவியது மற்றும் விசாகப்பட்டினத்தின் இரும்பு தொழிற்சாலையை தனியார்மயமாக்கல் திட்டங்களைக் கொண்ட மத்திய அரசின் முடிவெடுக்கும் செயல்கள் அனைத்துத் தரப்பு மக்களிடமும் குழப்பத்தை அதிகரித்தது.

இது போன்ற உத்தியுடன் கூடிய முடிவுகளை உருவாக்கி அதனை மேற்கொண்டு அமல்படுத்தும் போதும் அரசாங்கங்களின் அணுகுமுறையில் மிகவும் வெளிப்படையான, பகுத்தறிவுக்கு ஏற்புடையதாக மற்றும் அனைவரையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்ற ஒரு பொறுப்பு உள்ளது.
போலி முதலாளித்துவத்தை கட்டுப்படுத்த என்ன செய்ய வேண்டும்?
2017ஆம் ஆண்டில் அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தில் சிரஞ்சிப் சென் மேற்கொண்ட ஒரு ஆய்வில், அமைப்பு முறையில் மாற்றத்தை ஏற்படுத்தும் இலக்கில் ஒரு ஒருங்கிணைந்த உத்தி குறித்து ஆலோசனை கூறப்பட்டது.

போலி முதலாளித்துவத்தைக் கட்டுப்படுத்த பல மட்டங்களில் ஒரே நேரத்தில் இது நிகழ வேண்டிய தேவை இருக்கிறது என்று வலியுறுத்தப்பட்டது. அரசியல் நிதி முறையில் சீரமைப்புகள், கொள்கை உருவாக்கத்தில் சீரமைப்பு, தணிக்கை அமைப்புகளை வலுப்படுத்துதல், வணிகச் சூழலில் மறு சீரமைப்பு ஆகிய நான்கு அம்சங்களை உத்திகளைக் கொண்டதாக இருந்தன.
தேர்தலில் வெல்வதற்கு அரசியல் கட்சிகளிடமிருந்து நிதிகள் குறித்து வலுத்துவரும் கோரிக்கை, போலி முதலாளித்துவவாதிகளால் விநியோகிக்கப்படும் நிதியானது போலி முதலாளித்துவதற்கான முக்கியமான காரணமாகக் கருதப்படுகிறது. இந்தியாவில் கட்சிகள் வருமானவரி செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. தனிப்பட்ட வேட்பாளர் தேர்தல் செலவினத்துக்கு அதிகபட்ச வரம்பு உள்ளது. ஆனால், அரசியல் கட்சிகளுக்கு இதுபோன்ற வரம்பு இல்லை இல்லை.
இன்னதென்று தெரியாத இடங்களிலிருந்து முக்கிய அரசியல் கட்சிகளுக்கு 73 விழுக்காடு நன்கொடைகள் வருவதாக ஜனநாயக மறுசீரமைப்புக்கான அசோசியேஷன் நடத்திய ஒரு ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. அதிகமான பங்களிப்பை எதிர்பார்க்கும் கட்சிகள் என்ற இயல்பான விளைவின் காரணமாகப் போலி முதலாளித்துவம் ஒரு வசதியான வாய்ப்பாகக் கருதப்படுகிறது. அரசியல் நன்கொடைகள் தொடர்பான முறையில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புடமையை அளிக்க வேண்டிய அவசர தேவை எழுந்திருக்கிறது.

2018ஆம் ஆண்டு ஜனவரியில் மத்திய அரசால் தேர்தல் பத்திரத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனை எதிர்த்து ஜனநாயக சீரமைப்புகான அசோசியேஷன் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளது. ரூ.10 லட்சம், ரூ.1 கோடி எனப் பெரும்பாலான அனைத்துவிதமான அரசியல் பத்திர நன்கொடைகளும் மத்திய அரசை முன்னின்று நடத்தும் அரசியல் கட்சிக்குச் சாதகமாக இருப்பதாக மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.

தனிப்பட்ட நபர்களை விடவும், பெருநிறுவனங்கள்தான் (இந்த திட்டத்தின் கீழ் அநாமதேய முறையில் பலன் அடைகின்றனர்) இந்தத் திட்டத்தை முதன்மையாக உபயோகிக்கின்றனர் என இது அறிவுறுத்துகிறது. முக்கியமாகத் தேர்தல் ஆணையம் தாக்கல்செய்த மனுவில், அரசியல் நிதியில் வெளிப்படைத்தன்மை என்ற இலக்குக்கு மாறாக இருப்பதாக வாதிடப்பட்டது.

மேலும், நிறுவனங்கள் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவருவது என்பது, போலி நிறுவனங்கள் வாயிலாகக் கறுப்புப் பணம் ஊடுருவுவதற்கு வழிவகுக்கும் என்றும், வெளிநாட்டு நிறுவனங்களின் செல்வக்கால் அரசியல் கட்சிகளிடையே பாதிப்பை ஏற்படுத்துவதாக இருக்கும் என்று இதில் கூறப்பட்டிருக்கிறது.

இந்திய நிறுவனங்களின் அதிகமான பங்குகளை வைத்திருக்கும வெளிநாட்டு நிறுவனங்கள் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடைகள் அளிக்க அனுமதிக்கக் கூடிய வகையில் (வெளிநாட்டுப் பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டம்) ஃபரா 2010 சட்டத்தில் திருத்தங்கள் செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையம் வலியுறுத்தியது. இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தின் நிலுவையில் உள்ளது.

இரண்டாவதாக, எந்த வகையான பங்கு விற்பனை செய்பாடுகளில் கொண்ட கொள்கை முடிவுகளில் மேலும் அதிகமான வெளிப்படையானதாக, ஆலோசனைகளைக் கொண்டதாக மற்றும் பங்கேற்பு வழிமுறைகளைக் கொண்டதாக மாற்றப்பட வேண்டும்.

நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு முறைகேடு சாத்தியக்கூறுகளில் சிஏஜி செயல்முறை விலக்கல்களைக் கண்டுபிடித்தது. கொள்கை வகுப்பைப் பொறுத்தவரை, ஆலோசனைக்கான வெளிப்படையான அமைப்புகள் நிறுவனமயப்படுத்தப்பட்ட வேண்டும். அலுவலர்கள், அமைச்சர்களின் விருப்பப்படி விடாமல், சட்டத்தின்கீழ் பொறுப்புடமை ஆக்கப்பட வேண்டும்.

ஐரோப்பிய யூனியன் உள்பட பல நாடுகளில் கொள்கைகளை அமல்படுத்தும் இடத்தில் இருப்பவர்கள், கொள்கையால் பாதிக்கப்பட்டோர் ஆகியோரை உள்ளடக்கிய பரந்த அளவிலான ஆலோசனை அணுகுமுறை உள்ளது. செயல்முறையைத் தொடங்குவதற்கு முன் பயனாளி-முதலாளித்துவத்தை முன்கூட்டியே தீர்மானிப்பது, பங்குகள் விற்பனை / தனியார்மயமாக்கலின் நோக்கம் குறித்து கடுமையான சந்தேகங்களை உருவாக்கும்.
மூன்றாவதாக நாடாளுமன்ற அமைப்புகளான பொது கணக்குக் குழுக்கள் போன்றவை, சிஏஜி போன்ற தணிக்கை அமைப்புகளை வலுப்படுத்த வேண்டிய தேவை எழுந்திருக்கிறது. சிஏஜி சுதந்திரமாகச் செயல்படுவதற்கான தன்னாட்சித் திறனை கொண்டிருக்கும் வகையில் அது விரிவாக்கம் செய்ய வேண்டும்.

உணவு, சுகாதாரம், கல்வி ஆகியவற்றில் பெரும் அளவிலான அரசுத் திட்டங்கள் தொடர்புடையவற்றில் தன்னார்வ அமைப்புகளின் ஒத்துழைப்புடன்கூடிய சமூக தணிக்கை என்னும் ஒரு நல்ல நடைமுறைக்கு வினோத் ராய் தலைமையில் சிஏஜி அலுவலகம் முயற்சி மேற்கொண்டது.

நான்காவதாக, ஏல நடைமுறையில் அதிக போட்டித் தன்மையை அதிகரித்தல், தொழில் துறை சங்கங்களின் வாயிலாகப் போலியற்ற முதலாளித்துவ நிறுவனங்களை மேலும் செயல்கொண்டதாக ஆக்குதல் முறைப்படுத்தும் அமைப்புகளை வலுப்படுத்துவது போன்ற விரும்பத் தகுந்த சில வணிகச்சூழல் இலக்கை நாம் மேற்கொள்ள வேண்டும்.

போலி முதலாளித்துவம் வங்கி நடைமுறைகளில் செல்வாக்குச் செலுத்தும் திறன் தடுக்கப்பட வேண்டும். இந்தப் போலி முதலாளித்துவ நிறுவனங்கள் பொதுத்துறை நிறுவன வங்கிகளில் பெரும் அளவிலான விகிதத்தில் செயல்படாத சொத்துகள் கொண்ட கணக்குகளைக் கொண்டிருக்கின்றன. இதில் இருப்புநிலையில் ஏற்பட்ட கறைகளை அகற்ற வங்கிகளைக் கட்டாயப்படுத்துவதில் இந்திய ரிசர்வ் வங்கியின் செயல்திறன்மிக்க பங்கு முக்கியமானது.

இதையும் படிங்க:புதிய பணிகள், புதிய பொறுப்புகள்: கரோனா வழங்கிய எதிர்கால வேலைவாய்ப்புகள்!

Last Updated : Apr 3, 2021, 9:37 AM IST

ABOUT THE AUTHOR

...view details