புத்தாண்டு கொண்டாட்டங்களின்போது கரோனா பரவலை தடுக்கும் வகையில் மக்கள் கூடுவதை தவிர்த்து நிகழ்ச்சிகளை திவீரமாக கண்காணிக்க வேண்டும் என அனைத்து மாநில, யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் கடிதம் எழுதியுள்ளார்.
மாநில, யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் கடிதம்
இது குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளயிட்டுள்ள அறிக்கையில், "பெரிய அளவில் கரோனா பரவலை தடுக்கும் வகையில் மக்கள் கூடுவதை தவிர்த்து புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சிகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என அனைத்து மாநில, யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் கடிதம் எழுதியுள்ளார்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
பெருந்தொற்று பரவலை தடுக்க மாநிலத்தில் நிலவும் சூழலை கருத்தில் கொண்டு இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகளை மாநில, யூனியன் பிரதேச அரசுகள் விதிக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதேபோல், டிசம்பர் 30, 31 மற்றும் ஜனவரி 1 ஆகிய தேதிகளில் உள்ளூர் சூழலை கருத்தில் கொண்டு கட்டுப்பாடு விதிக்கலாம் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.