தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

"ஓய்வு முடிவை டோனி சரியான நேரத்தில் எடுப்பார்" டோனியின் சிறுவயது பயிற்சியாளர்! - ஐபிஎல் 2023

ஒய்வு விஷயத்தில் டோனி சரியான நேரத்தில் முடிவு எடுப்பார் என அவரது சிறுவயது பயிற்சியாளர் சான்சல் பட்டாச்சார்யா தெரிவித்து உள்ளார்.

Dhoni
Dhoni

By

Published : May 30, 2023, 10:48 PM IST

ஜார்கண்ட் :16வது ஐ.பி.எல் கிரிக்கெட் திருவிழா நாடு முழுவதும் கோலாகலமாக நடைபெற்றது. இறுதி ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5வது முறையாக பட்டம் வென்றது. சென்னை கேப்டன் டோனியின் கடைசி ஐ.பி.எல் எனக் கூறப்பட்ட நிலையில், டோனிக்கு கோப்பையுடன் பிரியா விடை வழங்க வேண்டும் என சென்னை வீரர்கள் கடும் போராட்டத்தை எதிர்கொண்டனர்.

ஒரு பந்தில் நான்கு ரன்கள் தேவைப்பட்ட நிலையில், கடைசி பந்தில் சென்னை வீரர் ரவீந்திர ஜடேஜா அட்டகாசமாக பவுண்டரி அடித்து, தான் கேப்டன் டோனியின் பிராடக்ட் என்பதை நிரூபித்திக் காட்டினார். மைதானம் முழுவதும் டோனி... டோனி என ரசிகர்கள் முழக்கம் கேட்க ஆனந்தக் கண்ணீருடன் ஜடேஜாவை கட்டி அணைத்து டோனி பரவசமடைந்தார்.

டோனியின் என்ற சகாப்தம் விளையாட்டுக்கு ஓய்வு கொடுத்து விட்டதோ என்ற அச்சம் ரசிகர்களிடையே ஏற்பட்டு உள்ள நிலையில், அந்த டோனிக்கே கிரிக்கெட் சொல்லிக் கொடுத்த அவரது சிறுவயது பயிற்சியாளர் வெளி உலகில் தென்பட்டுள்ளார். ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் சான்சல் பட்டாச்சார்யா, டோனியின் சிறுவயது பயிற்சியாளர்.

அவர் கூறுகையில், "ராஞ்சிக்கு வரும் போதெல்லாம், அதிகாலையில் டோனி பயிற்சிக்கு செல்கிறார். அதேநேரம் கும்பலில் சிக்கிக் கொள்ளாமல் இருக்க சரியான நேரத்தை தேர்வு செய்து பயிற்சி மேற்கொள்கிறார். ஆனால், ஒருபோது டோனி பயிற்சியை தவறவிட்டதில்லை. இந்த வயதிலும் முழு உடல் தகுதியுடன் இருக்க டோனி கடினமாக உழைக்கிறார்.

இளம் வீரர்களுக்கு சவால் விடும் வகையில் கேப்டன் டோனி தற்போதும் பயிற்சி மேற்கொள்கிறார். அதுவே அவரை மற்ற வீரர்களிடம் இருந்து தனித்து வேறுபடுத்தி காட்டுகிறது. ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் டோனி விளையாடிய விதம் அவர் நல்ல உடல் தகுதியுடன் இருப்பதற்கு சிறந்த உதாரணம்.

முதல் நாளில் இறுதி போட்டி மழையால் பாதிக்கப்பட்ட போதிலும், டோனியின் ஆட்டத்திற்காக அவரது ரசிகர்கள் மறுநாள் வரை காத்திருந்தனர். டோனி, சிறந்த பேட்ஸ்மேன் மட்டுமின்றி சிறந்த விக்கெட் கீப்பரும் கூட. விக்கெட் கீப்பிங்கிலும் திறம்பட தன் திறமையை டோனி வெளிக்காட்டி வருகிறார்.

37 வயதில், பேட்டிங்கை விட விக்கெட் கீப்பிங் மிகவும் கடினம். 20 ஓவர்களிலும் விழிப்புடன் இருக்க வேண்டும். ஒவ்வொரு பந்திலும் கவனம் செலுத்துவது எளிதல்ல. உடல் திறனை முறையாக பேணும் போது மட்டுமே அது சாத்தியமாகும். டோனி தொடர்ந்து பயிற்சி செய்து வருகிறார். சில சமயம் டென்னிஸ் விளையாடுவார். மைண்ட் கேம்ஸ் விளையாடுவார். கவனிப்பு திறன் அதிகரிக்க பில்லியர்ட்ஸ் உள்ளிட்ட விளையாட்டுகளை டோனி அதிகம் விளையாடுவார்.

அந்த வகையில் டோனியுடன் இளம் வீரர்கள் போட்டியிடுவது என்பது இன்னும் சாத்தியமற்றதாக கருதப்படுகிறாது. பாடி பிட்னசில் தன்னை தயார்படுத்திக் கொள்வதில் டோனிக்கு பின்னால் அவரது விடாமுயற்சியே அதிகம் உள்ளது. ஐபிஎல் இறுதி ஆட்டத்தில் சென்னை அணி ஒரு கட்டத்தில் அழுத்தத்தை எதிர் கொண்டது.

டோனி டக்-அவுட் ஆனது அந்த அணிக்கு கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தியது. ஆனால் அவர் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அமைதியாக அமர்ந்து ஆட்டத்தை கவனித்தார். பல போர் குதிரைகள் பீரங்கிகளின் சத்தத்திற்கு பயப்படுவதில்லை என்பதை எடுத்து கூறும் வகையில் டோனியின் நிதானம் இருந்தது.

வெற்றி இலக்கை அடைந்த பிறகு டோனி கண்களை மூடிக் கொண்டது வெற்றி இயல்பானது என்பதை சுட்டிக்காட்டியது. சாம்பியன்கள் ஒருபோதும் தோல்வியை நம்புவதில்லை என்பதை எடுத்துக் காட்டியது. டோனி சரியான நேரத்தில் ஓய்வு அறிவிப்பார். உடற்தகுதி, மற்றும் கண் பார்வை டோனியின் சிறந்த ஆயுதமாக உள்ளது.

ஒரு கிரிக்கெட் வீரருக்கு அது இருந்தால், அவர் ஓய்வை பற்றி யோசிக்க வேண்டியதில்லை. டோனி என்ன முடிவெடுத்தாலும் அதை கவனமாக எடுப்பார். அதை சரியான நேரத்தில் எடுப்பார். எனது முன்னாள் மாணவர் மீது அபரிமிதமான நம்பிக்கை வைத்துள்ளேன். ஒருநாள் நான் டோனியிடம், "நீ எண்ணை மறந்து விட்டாயா, உனது செல்போனில் எனது எண்ணை அழித்து விட்டாயா, என்று கூறினேன். அதற்கு டோனி அங்கு இருந்த 10 முதல் 12 நபர்களின் முன்னிலையில் எனது செல்போன் எண்ணை கூறினார். அங்கு தான் டோனி தனித்துவம் வாய்ந்தவர் என்பது வெளிப்படுகிறது" என்று சான்சல் பட்டாச்சார்யா தெரிவித்தார்.

இதையும் படிங்க :ஐபிஎல் கோப்பையை வென்ற CSK! ஜட்டுவை லட்டுபோல் தூக்கி கொஞ்சிய தல தோனி!

ABOUT THE AUTHOR

...view details