தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

சிஆர்பிஎப் வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை! - மத்திய ரிசர்வ் காவல்படை வீரர்

ராஞ்சி: சிஆர்பிஎப் பயிற்சி மையத்தில் மத்திய ரிசர்வ் காவல்படை வீரர் ஒருவர் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.

CRPF jawan
CRPF jawan

By

Published : Dec 27, 2020, 11:36 AM IST

ஜார்கண்ட் மாநிலம் லதேஹர் மாவட்டத்தில் அமைந்துள்ள மத்திய ரிசர்வ் காவல்படை பயிற்சி மையத்தில் மத்திய ரிசர்வ் காவல்படை வீரர் ஒருவர் தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார். இதனால் அந்த பயிற்சி மையத்தில் பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது.

அசாம் மாநிலத்தை சேர்ந்த பிரவீன் மொச்சஹரி(35) என்பவர் நேற்று(டிசம்பர் 26) பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, தனது துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார். அன்மையில் விடுப்பு முடித்து வீட்டிலிருந்து பணிக்கு திரும்பி பாதுகாப்பு படை வீரர், எதற்காகத் தற்கொலை செய்து கொண்டார் என்ற காரணம் தெரியவரவில்லை.

எனவே குடும்ப பிரச்னை காரணமாகத் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என முதற்கட்டமாக சந்தேக்கிப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து அலுவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பிகார் மாநிலம் நவாடாவைச் சேர்ந்த மத்திய ரிசர்வ் படை வீரர் ஒருவர் டிசம்பர் 17 ஆம் தேதி இதே பயிற்சி முகாமில் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details